நிலக்கிழார் என்றால் என்ன

nilakilar in tamil

நிலத்திற்கான உரிமையினை கொண்டிருப்பவர்களையே நிலக்கிழார் என கூறமுடியும். ஜமீந்தார் எனவும் இவர்களை அழைக்கலாம்.

நிலக்கிழார் என்றால் என்ன

நிலக்கிழார் என்பது இந்தியத் துணைக்கண்டத்தில் மொஹலாய பேரரசின் ஆட்சிக்காலத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களையும், உழவர்களையும் கொண்டவர்களே நிலக்கிழார் ஆகும். அதாவது பொதுவாக நிலத்தின் உரிமையாளரையே சுட்டி நிற்கின்றது.

இன்றைய காலகட்டத்தில் நிலக்கிழார் என்பது தனக்கு சொந்தமில்லாத ஒரு வீட்டில் வசிக்கும் ஒருவருக்கு வாடகை வசூலிக்கும் எந்தவொரு தனிநபரையும் அல்லது அரசாங்க அமைப்பு அல்லது நிறுவனத்தை விபரிக்க கூடியதாக காணப்படுகிறது.

மொஹலாய ஆட்சியில் நிலக்கிழாரின் செயற்பாடுகள்

மொஹலாய ஆட்சிக் காலத்தில் பல்வேறு விளைநிலங்களை நிலக்கிழார்கள் கொண்டிருப்பர்.

இந்த ஆட்சிக்காலப்பகுதிகளில் பெருநிலக்கிழார்கள் விளைநிலங்களை குத்தகைக்கு விட்டு அதனூடாக கிடைக்கும் தானியங்களின் ஒரு பகுதியை வரியாக அரசு படைகளின் பராமரிப்பு செலவிற்கு அரசிற்கு செலுத்தக் கூடியவர்களாக காணப்படுவர்.

இந்தியா மற்றும் பிரித்தானியாவில் நிலக்கிழார்கள் கொண்டிருக்கும் நிலங்களின் பரப்பளவிற்கேற்ப சமத்தான மகாராசா, இராசா போன்ற அடைமொழிகளுடன் இவர்களை அழைத்தனர்.

மொஹலாய ஆட்சிக்காலப்பகுதிகளில் நிலக்கிழார்கள் அதிகார வர்க்கத்தை சேர்ந்தவர்களாகவே காணப்பட்டனர். எனவேதான் இவ்வாறான காலப்பகுதியில் நிலக்கிழார்கள் பெரும் வசதி படைத்தவர்களாக காணப்பட்டார்கள்.

நிலக்கிழாரின் சிறப்புக்கள்

ஒரு நிலக்கிழாரானவர் தனது நிலத்தை வாடகை விடுவதன் மூலம் காப்பீடு மற்றும் பிற செலவுகளை ஈடு செய்யக்கூடியவராக காணப்படுவார். ஏனைய வருமானங்களை விட இது நிலையானதாக காணப்படும்.

நிலக்கிழாராக இருப்பதினூடாக செயலற்ற வருமானத்தினை உருவாக்க முடியும். அதாவது எமக்கென்று சொந்தமான நிலம் காணப்படுகின்ற பட்சத்தில் தீவிரமாக வேலை செய்து சம்பாதிப்பதற்கான வாய்ப்புக்கள் காணப்படாது.

மேலும் வாடகை வருமானத்தினூடாக செயலற்ற வருமானத்தினை பெற்று கொள்ள முடியும்.

சொந்தமான நிலத்தினை வைத்திருப்பது நெகிழ்வுத்தன்மையை வழங்கக்கூடியதாக காணப்படுகிறது.

அதாவது தனது சொத்தை வாடகைக்கு எப்போது எடுப்பது, குத்தகையின் நீளம், வாடகை விகிதம் போன்றவற்றை ஒரு நிலக்கிழாரினால் தீர்மானிக்க முடியும்.

மேலும் இதனூடாக அன்றாட பணிகளை கையாள்வதற்கான ஒரு சொத்து மேலாண்மை நிறுவனத்தினை நிர்வகிக்கவும் முடியும். நிலக்கிழாராக காணப்படும் பட்சத்தில் பொருளாதார ரீதியான பாதுகாப்பினை உறுதிப்படுத்த முடியும்.

நிலக்கிழாரின் சட்ட உரிமைகள்

ஒரு வாடகை தாரரை அகற்றுவதற்கான உரிமை காணப்படும்

அதாவது குத்தகை ஒப்பந்தம் மீறப்படுவதன் அடிப்படையில் ஒரு குடியிருப்பவரை அகற்றும் உரிமையினை நில உரிமையாளர்கள் (நிலக்கிழார்) பெற்றிருப்பர்.

வாடகை அதிகரிப்பதற்கான உரிமை

வாடகை காலகட்டத்தை உயர்த்தவும், சட்டமுறையான வீட்டு பிரிவின் கீழ் நகர்ப்புற வாடகைக்கு வசிக்கும் இடங்களை கொண்டு சமநிலை பேணவும் மேலும் சட்டமானது பரம்பரை, வாடகை கட்டணங்கள் நிலக்கிழார் மற்றும் குடியிருப்பவர்களின் கடமைகளை தெளிவாக வரையறுத்துள்ளது.

எனவே வாடகையினை அதிகரிப்பதற்கான உரிமையினை நிலக்கிழார் கொண்டுள்ளார்.

தேவையான பழுதுபார்ப்புக்கள் பற்றி அறிவுறுத்தல் வேண்டும்

ஒரு நிலக்கிழாரானவர் முறையான காலப்பகுதியில் பழுதுபார்ப்புக்கான கோரிக்கைக்கு பதிலளிக்க வேண்டிய கடமையினை கொண்டுள்ளார்.

மேலும் நிலக்கிழாரானவர் அவரின் சொத்துக்களுக்கு தேவையான பழுதுபார்ப்புக்களைப் பற்றி தெரிவிக்கும் உரிமையினை கொண்டுள்ளார்.

எனவேதான் நிலக்கிழார் என்பவர் தனது சொத்தினை பாதுகாப்புடன் வைத்திருப்பதோடு மாத்திரம் நின்றுவிடாது குத்தகைக்கு விட்டு அதன் மூலமாகவும் வருமானம் ஈட்டுகின்றனர்.

மேலும் இவர்கள் சட்டத்திற்கு உட்பட்ட வகையில் தனது நிலத்திற்கான உரிமைகளை பயன்படுத்துவதோடு அதனூடாக சிறந்த அங்கீகாரத்தினையும் பெற்றுக்கொள்வார். இவர்கள் சமூகத்திற்கு மத்தியில் மதிப்பு மிக்கவர்களாகவம் திகழ்வார்கள்.

Read More: புழல் சிறை என்றால் என்ன

முடி உதிர்வதை தடுக்கும் உணவுகள்