முடி உதிர்வதை தடுக்கும் உணவுகள்

mudi uthirvathai thadukka tips in tamil

ஒருவரது முடியின் ஆரோக்கியத்தை வைத்தே அவரது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் தீர்மானித்துவிடலாம். இன்று பெண்கள் மட்டுமன்றி ஆண்களும் எதிர்நோக்கும் பிரச்சினைகளில் ஒன்றாக முடியுதிர்வு காணப்படுகின்றது.

முடி உதிர்வதற்கான காரணங்கள் எல்வோருக்கும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. இது ஒருவருக்கொருவர் வேறுபட்ட காரணங்களைக் கொண்டிருக்கும்.

மன அழுத்தம், ஊட்டச்சத்துக் குறைபாடு, கர்ப்ப காலம், சூரிய ஒளியில் அதிக நேரம் செலவிடுவது, ஹைப்போ தைராய்டிசம், வைட்டமின் B குறைபபாடு, இரத்தச்சோகை, ரசாயனம் கலந்த பொருட்களை கூத்தலுக்குப் பாவித்தல் போன்ற பல காரணங்களினால் முடி உதிர்வு ஏற்படுகின்றது.

முடி உதிர்வைத் தடுத்து முடி வளர்ச்சியை தூண்டும் உணவுகள்

பருப்பு வகைகள்

வலுவிழந்த முடியைச் சீரமைக்கவும், முடியினுடைய வளர்ச்சியைச் சீரமைக்கவும் முடி வளர்ச்சியை தூண்டவும் புரதச்சத்து இன்றியமையாததாகும். இது இயற்கையாகவே முடி வளர்ச்சியை அதிகரிக்கவும், முடி உதிர்வைத் தடுக்கவும் உதவும். பருப்பு வகைகளானவை புரதம் சார்ந்த சத்துக்களுக்குச் சிறந்தவையாகும். இவை முடியின் வேர்களுக்கு ஊட்டமளித்து, முடியுதிர்வைத் தடுத்து, புதிய முடி வளர உதவுகின்றன.

மேலும் முடி கொட்டாமல் இருப்பதற்கு இரும்புச்சத்து, பயோட்டின், புரோட்டின்,விட்டமின் சத்துக்கள் போன்றனவும் தேவை. இந்த அனைத்துச் சத்துக்களும் உலர் பருப்புக்களில் உள்ளன. உலர்ந்த பருப்புக்களில் பாதாம், உலர் திராட்சை, பிஸ்தா போன்ற அனைத்துப் பருப்புக்களையும் தினமும் ஒரு கைபிடி அளவு சாப்பிட்டு வந்தால் நரை முடி இல்லாத நீண்ட கருமையான கூந்தலைப் பெறலாம்.

விதைகள்

நமது அன்றாட உணவில் ஆளிவிதை, சூரியகாந்தி விதை, பூசணி விதை போன்றவற்றையும் எடுத்துக்கொள்வது நல்லது. இது எமது உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதுடன் கூந்தல் ஆரோக்கியத்திற்கும் உதவும். இந்த விதைகளில் சிங், கால்சியம், பொட்டாசியம், கால்சியம், வைட்டமின் பி, ஏ, புரோட்டின் மற்றும் இரும்புச் சத்துக்கள் நிறைந்துள்ளன. எனவே சராசரி ஒரு டீஸ்பூன் அளவு எடுத்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

கீரை வகைகள்

அதிகமானோருக்கு முடி அதிகளவில் கொட்டும். இதற்கு முக்கிய காரணமே நமது உடலில் கீமோகுளோபின் அளவு குறைவாக இருப்பதும் இரும்புச் சத்துக் குறைபாடுமே ஆகும். எனவே உணவில் கீரைகளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும். கீரை வகைகளில் அதிகளவிலான ஃபோலேட் வைட்டமின் ஏ, சி, இரும்புச் சத்துக்கள், மற்றும், கால்சியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை முடியின் வளர்ச்சிக்கு உதவுகின்றன.

நெல்லிக்காய்

நெல்லிக்காயில் அதிகளவிலான ஆன்டிஆக்சிடன்ட்கள் மற்றும் வைட்டமின் சீ நிறைந்துள்ளன. இது உணவில் இரும்புச்சத்துக்களை உறிஞ்சி தலைமுடி ஆரோக்கியத்தைப் பராமரிக்கின்றது.

காளான்கள்

நாம் நமது உணவில் துத்தநாகத்தை சேர்த்துக்கொள்வது முடி உதிர்வைத் தடுக்கும். அந்தவகையில் காளான்கள் உடலுக்குத் தினசரி 7% துத்தநாகத்தை அளிக்கும். இது துத்தநாகக் குறைபாட்டைச் சரிசெய்யவும் முடி உதிர்வைத் தடுக்கவும் உதவும்.

அத்திப்பழம்

அத்திப்பழத்தில் அதிகளவு கல்சியம் உள்ளது. அவை இரத்த ஓட்டத்தை தூண்டி முடி வளர்ச்சியை அதிகப்படுத்தும். இரவில் 2-3 உலர்ந்த அத்திப்பழங்களை ஊற வைத்துவிட்டு காலையில் தண்ணீருடன் சேர்த்து சுவைக்கலாம். இரண்டு மாதங்கள் இவ்வாறு சாப்பிட்டு வந்தால் கூந்தல் ஆரோக்கியத்தில் குறிப்பிடத்தக்க மாற்றம் நிகழும்.

Read More: இயற்கையாக முடி கருமையாக

முடி அடர்த்தியாக வளர என்ன செய்ய வேண்டும்