உரமானது விவசாய உற்பத்தியில் முக்கியத்துவம் வகிக்கின்றது. நாளுக்கு நாள் விவசாயத்திற்காக உரத்தின் தேவை அதிகரித்து வருவதை காணலாம். மண்ணில் குறைந்துவரும் ஊட்டச்சத்துப் பொருட்களை ஈடு செய்து சத்துக்களை மண்ணுக்கு ஊட்டுவதே உரமீட்டல் ஆகும். உரமீட்டுவதன் மூலமே பயிர்களை சிறப்பாக விளைச்சலுடன் வளரச் செய்ய முடியும்.
மனித வரலாற்றில் உரப் பயன்பாடு என்பது பழங்காலத்திலிருந்தே பயன்படுத்தப்பட்டு வந்திருப்பதனை அறிய முடிகின்றது. உதாரணமாகப் பழங்காலத்தில் விளை நிலங்களுக்காக வெட்டப்பட்ட மரங்களை தீயிட்டுக் கொழுத்தினர். காரணம் மரங்களை எரித்தால் மண் நன்கு சுடுபட்டு பயிர்கள் நன்றாக வளர உதவும் என்பதாலாகும்.
இவ்வாறு மரங்களை எரிப்பதால் கிடைக்கக் கூடிய சாம்பல் உரமாகவும் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. சாம்பலில் பயிருக்குத் தேவையான பெட்டாசியம் உள்ளது என்பதனை அன்றே அறிந்துள்ளனர் என்பது வியக்கத்தக்கதாகும்.
Table of Contents
தொழு உரம் என்றால் என்ன
வீட்டில் வளர்க்கப்படும் விலங்குகளான மாடு, ஆடு, கோழி போன்ற கால்நடைகளில் இருந்து பெறப்படும் கழிவுகளை நன்கு மக்க வைத்து கிடைக்கும் மக்கிய பொருளே தொழு உரம் எனப்படுகின்றது.
ஊட்டமேற்றப்பட்ட தொழு உரம்
இரண்டு முறையில் ஊட்ட மேட்டப்பட்ட தொழு உரம் செய்யலாம்.
- நுண் உயிர்களைப் பயன்படுத்தி தொழு உரம்
- ஊட்டக் கரைசலை (பஞ்சகாவியம், மீனமிலம்) பயன்படுத்திய தொழு உரம்.
ஊட்டமேற்றிய தொழு உரமானது பல பயன்களைத் தருகின்றது. அவையாவன,
- குறைவான இடுபொருள் இருக்கும்போது நுண்ணுயிர்கள் மூலம் வந்த உரத்தினை கொடுக்கும் போது விளைச்சல் அதிகமாக இருக்கும்.
- மணிச்சத்து பயிர்களுக்கு உடனே கிடைக்கும்.
- மானவரி நிலங்களில் ஊட்டமேற்றிய தொழு உரம் பயன்படுத்துவதனால் அங்கு விளையும் பயிர்களின் வேர் வளர்ச்சி அதிகமாகும். மகசூலமும் அதிகரிக்கும்.
- உரத்தால் மண்ணில் மணி சத்து நிலைநிறுத்தப்படுவது தடுக்கப்படுவதால் மணி சத்து பயன்பாட்டுத்திறன் அதிகமாகும்.
- பூச்சி மற்றும் நோய்த் தாக்குதலைக் குறைக்கும்.
- மண் வளம் சிறப்பாகப் பாதுகாக்கப்பட்டு மேம்படுத்தப்படும்.
- உரச் செலவீனமானது குறைக்கப்படுகின்றது.
- கனிம உரங்களின் பயன்பாட்டுத் திறனை அதிகரிக்க இந்த உரமானது மிகவும் உதவுகின்றது.
- சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுகின்றது.
- விவசாயப் பயிர்களை மேலும் நீடித்து நிலைக்கச் செய்கின்றது.
செயற்கை உரங்களின் பாதகங்கள்
மண் வளம் பாதிப்படைகின்றது: செயற்கை உரங்களினால் மண்ணில் உள்ள நன்மை தரும் உயிரிகள் அழிக்கப்படுகின்றது. இதன் மூலம் மண் வளம் கெட்டுப் போகின்றது.
குடிநீர் பாதிப்படைகின்றது: வயல்களில் தூவப்படும் செயற்கை உரங்கள் கணிசமான விகிதம் பாசன நீரில் கலந்து அடித்துச் செல்லப்பட்டு நிலத்தடி நீரிலும் அருகிலுள்ள நீர் நிலைகளிலும் கலந்து விடுகின்றன. இதனால் அவற்றில் நைட்ரேட் செறிவு பாதுகாப்பான அளவை விடக் கூடுதலாகி குடிநீரில் பாதிப்பை ஏற்படுத்துகின்றது.
நோய்கள் ஏற்படுகின்றன: புற்றுநோய், நீரிழிவு நோய், உடற்பருமன், இதய நோய், பலவித தோல் நோய்கள் போன்றவை ஏற்பட செயற்கை உரங்களும் ஓர் காரணமாக அமைகின்றன.
விவசாயச் செலவுகள் அதிகரித்துள்ளன: இன்று வேளாண்மையானது விவசாயிகளை விலை உயர்ந்த இரசாயன உரங்கள் மற்றும், பூச்சிக் கொல்லிகளில் சார்ந்திருக்க வைத்துள்ளது. இதனால் இவற்றின் அதிக பயன்பாடு நாளுக்கு நாள் விவசாயச் செலவை அதிகரிக்கச் செய்துள்ளது.
Read More: இலந்தை பழத்தின் நன்மைகள்