வேப்பிலையின் பயன்கள்

veppilai leaf benefits in tamil

நம்முடைய எல்லோருடைய வீடுகளிலும் மரங்கள் உள்ளன. அதிலும் குறிப்பாக மா, பலா, வேம்பு, வாழை, தென்னை போன்ற மரங்கள் கட்டாயம் வளர்ப்போம். ஏனெனில் இவை அதிகளவு பயன்களைத் தருகின்றன. இன்றைய பதிவில் நாம் எல்லோருடைய வீடுகளிலும் வளர்க்கும் வேம்பு மரத்தினது வேப்பமிலையின் பயன்கள் சிலவற்றைப் பார்ப்போம்.

வேப்பிலையின் பயன்கள்

#. வேப்பமிலையுடன் மஞ்சள் சேர்த்து நன்றாகக் கொதிக்க வைத்து பின்பு ஆவி பிடித்து வர அடிக்கடி தலைவலி ஏற்படுபவர்களுக்கு தலைவலி குணமாகும்.

#. ஒவ்வொரு நாளும் காலையில் வெறும் வயிற்றில் பத்து வேப்பிலைக் கொழுந்துகளுடன் ஐந்து மிளகு சேர்த்து அரைத்து அல்லது மென்று உண்டு வர மலேரியா காய்ச்சல் போன்ற நோய்கள் இல்லாமல் போகும்.

#. தினமும் வெறும் வயிற்றில் வேப்பிலைக் கொழுந்துகளுடன் மிளகு சேர்த்து உண்டு வர நீரிழிவு நோயாளிகளுக்கு மாத்திரைகளின் தேவையின்றி நீரிழிவு நோய் குணமாகும்.

#. வேப்பிலைகள் சிலவற்றை எடுத்து நன்றாக அரைத்து பேஸ்ட் போன்ற பதத்தில் எடுத்து முகப்பருவிற்கு பூசிவர சில நாட்களில் முகப்பருக்கள் அனைத்தும் அழிந்து சிறந்த பலனைத் தரும்.

#. முகப்பொலிவின்றி மாசுடன் காணப்படுபவர்கள் வேப்பிலையை எடுத்து தண்ணீரில் கொதிக்க வைத்து அந்த நீரினைக் கொண்டு முகம் கழுவிவர முகம் பொலிவு பெறுவதோடு பளபளப்படையும்.

#. பித்த மயக்கம், குடிவெறி போன்ற பிரச்சனைகள் உள்ளவர்கள் வேப்பமிலைகள் சிலவற்றுடன் எலுமிச்சம் சாறு சேர்த்து அரைத்து தலைக்குத் தேய்த்து சில நிமிடங்கள் வரை ஊறவிட்டு பின்னர் தலை குளிக்க பிரச்சனைகள் சீராகும்.

#. வேப்பிலைகள் சிலவற்றுடன் மஞ்சள் சேர்த்து நன்றாக அரைத்து பேஸ்ட் போன்ற பதத்தில் எடுத்து பித்த வெடிப்பு, கால் பாத எரிச்சல், நகச்சுத்தி போன்ற நோய்களுக்கு பற்று போட குணமாகும்.

#. வேப்பிலைகள் சிலவற்றை எடுத்து நீரில் கொதிக்க வைத்து அந்த நீரினை எடுத்து தலை குளித்து வர பொடுகுத் தொல்லைகள் நீங்குவதோடு கண்களில் ஏற்படும் எரிச்சல், சிவந்த கண்கள், தூக்கமின்மை போன்ற கண் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாவதுடன் கண்ணின் பார்வைத்திறன் அதிகரிக்கும்.

#. வேப்பிலையை அளவாக சிறிதளவு எடுத்து நீரில் கொதிக்க வைத்து பின்பு அந்த நீரினை வெதுவெதுப்பான சூட்டுடன் தினமும் காலையில் வெறும் வயிற்றிலும் இரவில் தூங்குவதற்கு முன்பும் குடித்துவர இரத்தம் சுத்தமாவதோடு உடலில் காயங்கள் ஏதும் ஏற்படின் அந்த நீரினால் கழுவி வர காயம் விரைவில் ஆறிவிடும்.

#. வேப்பிலைக் கொழுந்துகளை தினமும் சாப்பிட்டு வந்தால் உடலில் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

#. வேப்பிலை சிறிதளவு எடுத்து தினமும் பச்சையாக உண்டு வர பல்வலி, பல் தொடர்பான பிரச்சனைகள் போன்றவற்றுக்கு சிறந்த நிவாரணம் அளிக்கும்.

#. வேப்பிலையை நன்கு அரைத்து பேஸ்ட் போன்ற பதத்தில் எடுத்து வாரம் ஒருமுறை உடல் முழுவதும் பூசி குளித்து வந்தால் கோடை காலத்தில் ஏற்படும் வேர்க்குரு, அரிப்பு, படை போன்றவற்றிலிருந்து சருமத்தைப் பாதுகாக்கும்.

#. காய்ந்த வேப்பிலைகளைச் சேகரித்து அரைத்து பொடியாக்கி சாம்பிராணியுடன் சேர்த்து புகை போடுவதால் வீட்டில் இருக்கும் கொசுத் தொல்லைகள் நீங்கும்.

#. வேப்பிலைகள் சிலவற்றை எடுத்து பேஸ்ட் போன்ற பதத்தில் அரைத்து அந்த பேஸ்டை அளவான நீரிலிட்டு நன்கு கொதிக்க வைத்து பின்னர் அந்த கொதித்த சாறினை வடிகட்டி எடுத்து அந்த வேப்பிலை சாற்றினை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிப்பதன் மூலம் செரிமான பிரச்சனைகள் தீர்கின்றன. வேப்பம் சாற்றிலுள்ள அஸ்ட்ரிஜெண்ட் பண்புகள் வாயு உருவாக்கத்தை தடுப்பதோடு வயிறு வீக்கம், வாயு மற்றும் வயிற்று மந்தம், மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளையும் குணப்படுத்துகிறது.

#. வேப்பிலையை நன்கு அரைத்து உடல் முழுவதும் பூசி சிறிது நேரம் ஊற வைத்து பின்பு குளிர்ந்த நீரில் மஞ்சள், வேப்பிலைகளை ஊற வைத்து அந்த நீரால் குளிக்க கோடை காலங்களில் அதிக உஷ்ணம் மற்றும் சிலவகைக் கிருமித் தொற்றுக்களால் உருவாகும். தட்டம்மை, சின்னம்மை, பெரியம்மை போன்ற எல்லா வகையான அம்மைப் பிரச்சனைகளும் சீராகும்.

#. வேப்பிலையில் விஷத்தை முறிக்கக்கூடிய சக்தி காணப்படுவதால் பாம்பு போன்ற விஷ ஜந்துக்கள் தீண்டும் பட்சத்தில் அதிகளவு வேப்பங்கொழுந்துகளை உண்பதால் உடல் முழுவதும் பரவும் விஷத்தை ஓரளவு கட்டுப்படுத்த முடியும். ஆனால் பின்னர் கட்டாயம் விஷ நீக்க சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும்.

Read More: வெள்ளை பூசணி ஜூஸ் பயன்கள்

நீந்துவதால் ஏற்படும் நன்மைகள்