சர்க்கரை அளவு அதிகமானால் அறிகுறிகள்

sakkarai noi arikurigal tamil

நாம் உண்ணும் உணவில் இருந்து சாதாரணமாக பருகும் பாட்டில் நீர் வரை அனைத்தும் நமது உடலில் இரத்தத்தில் சக்கரையின் அளவை அதிகரிக்க செய்கின்றது. சர்க்கரை நோய் என்பது இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருத்தலே சக்கரை நோயாகும்.

பெரும்பாலும் அதன் தாக்கம் அதிகரித்த பின்புதான் மருத்துவரை ஆலோசித்து பரிசோதனை செய்து ஊர்ஜிதம் செய்கின்றோம். இது ஒரு சாதாரண நோய் கிடையாது. மெல்ல மெல்ல நமது உடலில் இருக்கக்கூடிய அனைத்து உறுப்புகளையும் பாதித்து இறுதியில் மரணத்தையே ஏற்படுத்தக்கூடிய ஆபத்தான நோயாகும்.

மேலும் Type 1 Diabetes, Type 2 diabetes என இரண்டு வகையான சர்க்கரை நோய்கள் உள்ளது. நமது உடலில் இன்சுலின் எனும் ஹார்மோன் சுரக்கும். இந்த இன்சுலின் ஹார்மோன் முற்றிலும் சுரக்காத நிலையில் தான் Type 1 Diabetes என்கின்றோம். இது பெரும்பாலும் குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கு வரக்கூடியதாகும்.

Type 2 Diabetes பெரும்பாலான மக்களுக்கு அதிலும் குறிப்பாக 40 வயதைக் கடந்தவர்களுக்கு அதிகம் ஏற்படக்கூடிய சர்க்கரை நோயாகும். மாறிவரும் உணவு முறை, உடல் உழைப்பில்லாத வாழ்க்கை முறை காரணமாக கணையத்திலிருந்து சுரக்கும் இன்சுலின் உடலில் வேலை செய்ய இயலாத நிலை ஏற்படுகின்றது. இதன் மூலமாக ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும். இதுவே Type 2 Diabetes என்கின்றோம்.

சர்க்கரை அளவு அதிகமானால் அறிகுறிகள்

அடிக்கடி சிறுநீர் சுரத்தல்

ரத்தத்தில் அதிக சக்கரை இருக்கும்போது அந்த சர்க்கரையை வெளியேற்றுவதற்காக உடலில் அதிக நீரை சுரக்க செய்யும். இதனால் சிறுநீரகத்திற்கு அதிக அழுத்தம் கொடுக்கப்பட்டு அதிக சிறுநீர் உருவாகின்றது. இதனாலே தான் அடிக்கடி சிறுநீர் கழிக்கின்றனர்.

அதிக தாகம் மற்றும் நாவில் அதிக வறட்சி

ரத்தத்தில் அதிக சர்க்கரை இருக்கும் போது அடங்காத தாக உணர்வு மற்றும், வறட்சி இருக்கும். உடலில் இருக்கும் திரவம் அடிக்கடி சிறுநீர் வழியாக வெளியேறிக் கொண்டிருப்பதால் உடம்பில் நீரிழப்பு ஏற்பட்டு அதிக தாகம் மற்றும், நாவில் வறட்சி உண்டாகிறது.

கண்பார்வை மங்கலடைதல்

அதிக சக்கரை உடலில் மெல்ல மெல்ல நரம்புகளை பாதிக்கும். இதன் விளைவாக கண்கள் நரம்புகள் பாதிக்கப்பட்டு கண்பார்வை மங்கலாகின்றது.

உடல் எடை கூடுதல் அல்லது குறைதல்

சர்க்கரை நோயைப் பொறுத்தவரை உடலின் இன்சுலின் வேலை செய்யாத நிலை உருவாகின்ற போது உடல் எடை கூடும். அதே போல் உடலில் இன்சுலின் சுரப்பு முழுமையாக இல்லாத போது உடல் எடை இழப்பு உருவாகும்.

உடல் சோர்வு

ரத்தத்தில் அதிக சக்கரை இருக்கும்போது உடல் சோர்வு ஏற்படும். எந்த வேலையை செய்யவும் மனமின்மை ஏற்படும். காரணம் நாம் சாப்பிட்ட உணவில் இருக்கக்கூடிய குளுக்கோஸ் செல்களுக்குள் நுழைவதற்கு இன்சுலின் மிக அவசியம். இந்த இன்சுலின் உடலுக்குப் பற்றாக் குறை உருவாகும் போது செல்களுக்கு தேவையான குளுக்கோஸ் கிடைக்காமல் செல்கள் சரியாக வேலை செய்யாது. இதன் காரணமாகவே உடல் சோர்வு ஏற்படுகின்றது.

ஆறாத புண்கள்

உடலில் லேசான புண்கள் காயங்கள் ஏற்பட்டால் ஆறுவதற்கு பல நாட்கள் எடுக்கும். நோய் ரத்தத்தில் அதிக சர்க்கரை இருக்கும்போது நோய் எதிர்ப்பு மண்டலம் பலவினம் அடைகின்றது. மற்றும் உடல் செல் திசுக்கள் சீரற்ற நீர் சமநிலை காணப்படுவதாலும் காயங்கள் ஆறுவது தாமதமாகின்றது.

Read More: வயிற்று புண் குணமடைய உணவு

சைனஸ் தவிர்க்க வேண்டிய உணவுகள்