தேவதாசி முறை ஒழிப்பிற்கு பாடுபட்டவராக திகழ்ந்தவர்கள் மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டி மற்றும் மூவலுர் ராமமிர்தம் அம்மையார் ஆவர்.
Table of Contents
தேவதாசி முறை ஒழிப்பு சட்டம்
சென்னையில் தேவதாசிகள் ஒழிப்புச்சட்டம் என்பது தேவதாசி முறையை ஒழிப்பதற்காக இந்தியா விடுதலை அடைந்ததை அடுத்து 9 ஒக்டோபர் 1947ல் நிறைவேற்றப்பட்ட சட்டமாகும்.
இச்சட்டத்தினூடாக தேவதாசிகளும் திருமணம் செய்யும் உரிமையினை பெற்றுக்கொண்டனர். இதனை அறிமுகப்படுத்தியவராக முத்துலட்சுமி ரெட்டி அவர்கள் காணப்படுகிறார்கள்.
தேவதாசி முறை ஒழிப்பிற்கு போராடிய முத்துலட்சுமி ரெட்டி
இவர் இந்தியாவின் பெண்மருத்துவர், சமூகப்போராளி, தமிழ் ஆர்வலர் ஆவார். இவர் 1912ம் ஆண்டு மருத்துவ கல்லூரியிலிருந்து பட்டம் பெற்று மருத்துவ சேவையினை ஆற்றினார். இவர் இந்தியாவில் தமிழ் நாட்டில் 1886 ஜூலை 30ம் திகதி மகாராஜா கல்லூரியின் முதல்வர் நாராயணசாமி ஐயருக்கும் சந்திரம்மாளுக்கும் மகளாக பிறந்தார்.
மருத்துவ கடமையை மாத்திரம் மேற்கொள்ளாது இந்திய மகளிர் சங்கத்தின் சார்பாக சென்னை சட்டமன்ற கவுன்சிலராகவும் இவர் காணப்பட்டார்.
இவர் குழந்தை திருமண சட்டம், கோவில்களில் தேவதாசி முறை ஒழிப்பு சட்டம், விபச்சார தடுப்பு சட்டம், பெண்கள், குழந்தைகளை விபச்சார தொழிலில் ஈடுபடுத்துவதை தடுக்கும் சட்டம் போன்றவற்றை உருவாக்குவதில் அவர் முக்கிய பங்கினை வகித்தார்.
தேவதாசி நடைமுறைக்கு எதிரானது என தனது முன்மொழிவை சட்டமன்றத்தில் வைத்து பேசிய அவர் தேவதாசி நடைமுறையானது உடன் கட்டை ஏறுதலை விட மிக மோசமானது என்றும் மதத்தின் பெயரால் குற்ற செயல் என்றும் இவர் கூறினார்.
இதன் காரணமாக 1930ம் ஆண்டு முத்துலட்சுமி ரெட்டி அவர்கள் தேவதாசி ஒழிப்பு சட்டம் என்ற முன்வரவை சட்ட மன்ற மேலவையில் முன்மொழிந்தார்.
இம்முன்மொழிவை சென்னை மாகாணத்தில் பல்வேறு பகுதிகளில் வாழ்ந்த தேவதாசிகள் எதிர்த்தனர். அதாவது தாங்கள் கற்றறிந்த மேட்டுகுடி கலைஞர்களே அன்றி பால்வினை தொழிளாலர்கள் அல்ல என்பதே இந்த எதிர்ப்புக்கு காரணமாகும்.
சென்னை தேவதாசி ஒழிப்பு சட்டம் என்பது அன்றைய பிரித்தானிய இந்தியாவின் மாகணங்களிலும் அதனை அடுத்து விடுதலை பெற்ற இந்தியாவின் மாநிலங்கள் மற்றும் ஆட்சிப்பகுதிகளிலும் பால்வினை தொழில் சட்டத்துக்கு புறம்பானதாக காணப்பட்டது.
மேலும் 1934 பாம்பே தேவதாசி பாதுகாப்புச்சட்டம், 1988 ஆந்திர பிரதேச தேவதாசி சட்டம் போன்றன இந்த தேவதாசி ஒழிப்பு முறை சட்டத்தின் காரணமாக கொண்டுவரப்பட்டமையாகும். இச்சட்டம் கொண்டுவர பிரதானமாக காணப்பட்டவர் முத்துலட்சுமி ரெட்டியே ஆவார்.
தேவதாசி முறையை எதிர்த்த மூவலூர் ராமமிர்தம் அம்மையார்
1833ம் வருடம் நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள மூவலூர் என்ற கிராமத்தில் கிருஸ்ணசாமி, சின்னம்மாள் தம்பதியினருக்கு மகளாக பிறந்தார்.
இவருடைய காலப்பகுதியில் தேவதாசி முறை நடைமுறையில் இருந்தது அதாவது ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த பெண்களை சிறுவயதிலேயே கடவுளுக்கு காணிக்கையளிக்குறோம் என்ற பெயரில் கோயில்களுக்கு நேந்து விடுகின்றனர்.
பின்னர் நாட்டியம் பாட்டு போன்றவைகளை கற்றுத்தருவதோடு பருவ வயது வந்ததம் அவர்களை ஊர்ப் பெரிய மனிதர்களின் ஆசை நாயகிகளாக ஆக்கியிருந்தது அக்கால சமூகமாகும். இவ்வாறானதொரு சூழலில் வளர்ந்தவராகவே இவர் காணப்படுகின்றார்.
இவர் 1930ல் சென்னை மாகாணத்தில் தேவதாசி ஒழிப்பை சட்டமாக்கிய வைத்தியர் முத்துலட்சுமியுடன் இணைந்து இந்த தேவதாசி முறையினை ஒழிக்க பாடுபட்டவர் ஆவார்.
பல போராட்டங்களின் பின்னர் 1947இல் தேவதாசி சட்டமானது நிறைவேற்றப்பட்டது. தேவதாசி முறை ஒழிப்பிற்கு ராமமிர்தம் அம்மையாருடைய பங்கானது அளப்பரியதாக காணப்படுகின்றது.
Read More: வயிற்று புண் குணமடைய உணவு