நட்பு கவிதை வரிகள் தமிழ்

Natpu Kavithai In Tamil

இந்த பதிவில் நட்பு கவிதை வரிகள் தமிழ் பதிவை காணலாம்.

பல உறவுகள் பணத்திற்காக தேடி வரும். சில உறவுகள் அன்பிற்காக தேடி வரும் அதுதான் நட்பு.

நண்பர்கள் உன்னிடம் காசு பணம் எதிர்பார்ப்பதற்கு அவர்கள் ஒன்றும் உன் சொந்த பந்தங்கள் கிடையாது. நட்பு எனும் உறவு சொந்த பந்தங்களுக்கு அப்பாற்பட்டது.

  • நட்பு கவிதைகள்
  • Natpu Kavithai In Tamil
அப்பா கவிதை வரிகள்

நட்பு கவிதை வரிகள் தமிழ்

ஈரேழுலகும் போற்றிடும் – ஒரு
இனிதான உறவு நட்பு
உலகிற்கே அன்பை பொழியும் – ஓர்
உன்னதமான உறவு நட்பு

அன்பான நண்பனைப் போல
அழியாத சொந்தம் எதுவுமில்லை
வெறும் வார்த்தைகளால் கூறுவது நட்பல்ல
பல பேருக்கு அது உயிர்மூச்சு

அன்பான நண்பன் கிடைத்துவிட்டால்
அகிலத்தையே வென்றிடலாம்
அன்பாக எமை வழிநடத்தும்
அழகான பந்தம் நட்பு

எவ்வித துன்பம் வந்திட்ட போதும்
எமை அரவணைக்கும் உண்மையான நட்பு
வறுமை வந்திட்ட போதும்
எம் கை கோர்த்திடும் அன்போடு

பள்ளிக்கால நட்பைப் போல
பசுமையானது எதுவுமில்லை
பள்ளியில் தோள் சேரும் தோழமை
ஆயுள்வரை தொடர்ந்திட்டேல் பேரின்பம்

உலகமே திரண்டு எதிர்த்தாலும்
உன்னை விட்டு விலகாது என்றும்
நீ குற்றவாளியே ஆனாலும்
காப்பாற்றிட துடிக்கும் நட்பு

நல்ல நட்பே என்றும்
உலகத்தின் சிறந்த செல்வமாகும்
நல்லவனை நண்பனாக பெற்றுவிட்டால்
நானிலம் போற்றும் உன்னை

யாரிடமும் நம்மை விட்டுத் தராது
துன்பம் வரும்போது நம்மை கைவிடாது
நாம் கலங்கும் போது தோள் தரும்
ஈடு இணையில்லா உறவு நட்பு

நாம் தவறு செய்யும் போது
ஊக்கப்படுத்துவது உண்மையான நட்பன்று
வாழ்வில் தவறிடும் போது
சுட்டிக் காட்டுவதே நட்பு

அன்பான நண்பனை ஆபத்தில் அறியலாம்
ஆபத்திலும் நம்மை கைவிடாது
கூட நின்று காப்பவனே
உண்மையான நண்பன்

முகமது நட்பது நட்பன்று
நெஞ்சத்து அகநக நட்பதே நட்பு
என்றான் வள்ளுவன் – உயர் நட்பினை
பெருமைபடுத்தாதோர் யாருளர் இவ்வுலகில்

உண்மையான நட்பென்பது
சிரித்து பேசுவது அன்று
உளமார நெஞ்சத்தில் தோன்றுவதே
உண்மையான நட்பு

நம் நண்பனை வைத்து
நாம் யார் என்று கூறிவிடலாம்
நல்ல நண்பனே – நம்
நல்வாழ்வின் நற்சான்று

அன்னையின் அன்பும்
தந்தையின் கண்டிப்புக்களும்
ஒன்றாக அமைந்த ஒரு உறவு
அனைத்தும் பொருந்திய நட்பு

நட்பு எனும் மூன்றெழுத்து
இவ் உலகத்தின் உயிர்மூச்சு
ஓர் உடலில் ஈருயிர் வாழ்வது
உண்மையான நட்பில் மட்டுமே

தனிமை நம்மை நெருங்கிடாது
துன்பம் நம்மை தொடர்ந்திடாது
மனதில் எங்கும் நிறைந்திடும்
மகத்தான உறவுவே நட்பு

நம் சந்தோசத்தின் மறு வடிவமாய்
நாம் மகிழும் போது மகிழ்ந்து
அழும் போது அரவணைத்து கொள்ளும்
ஒரு அக்கறையான சொந்தம் நட்பு

அளவோடு பழகுவது நட்பல்ல
அதிக உரிமையோடு பழகுவதே நட்பு
ஆபத்து நேரத்திலும் அருகிலிருந்து
அறிவுரை சொல்பவனே சிறந்த நண்பன்

தவறு செய்யும் போது தட்டிக் கேட்டு
தளர்ந்து சோரும் போது தட்டிக் கொடுத்து
ஆலோசகனாய் ஆசானாய்
அனைத்துமாய் இருப்பவனே நண்பன்

துரியோதனுக்கு ஒரு கர்ணன் போல
குசேலனுக்கு ஒரு கண்ணன் போல
உண்மையாய் ஒரு நண்பனை அடைந்து
உயர்ந்து விளங்குவோமாக

You May Also Like:

அம்மா கவிதை வரிகள்

ஊக்கமூட்டும் மேற்கோள்கள்