பல் கூச்சம் குணமாக

இந்த பல் கூச்சம் இருந்தால் நமக்கு பிடித்த உணவுகளை கூட சாப்பிட முடியாமல் போய் விடும். பல் கூச்சம் குணமாக சில டிப்ஸ் உங்களுக்காக.

பல் வலியைக் கூட தாங்கிக் கொள்ளும் பலரால் பல் கூச்சத்தை தாங்கிக் கொள்ள முடிவதில்லை.

ஆசை ஆசையாக சூடான தேனீர் குளிரான ஐஸ் கிரீம் போன்ற உணவுகளை சாப்பிடும் போது பற்களில் ஏற்படும் கூச்சத்தால் சாப்பிட முடியாமல் போகின்றது.

பல் கூச்சம் ஏற்பட காரணம்

  • பற்கள் சிதைத்தல்.
  • பல் உடைதல்.
  • முறையற்ற வகையில் கடுமையாக பற்களை தேய்த்தல்.
  • பற்களில் வேர்கள் வெளியே தோன்றுவது.
  • பற்களை விட்டு ஈறுகள் விலகிப் போவது.
  • பற்களை வெண்மையாக்குதல்.
  • செயற்கை பற்கள் பொருத்துதல்.
  • ஈறுகளில் ஏற்படும் நோய்த் தொற்று.

பல் கூச்சம் குணமாக

உப்பு

கல் உப்பினை சிறிது வெது வெதுப்பான நீருடன் சேர்த்து வாயினுள் நன்றாக அலசி கொப்பளிக்க வேண்டும்.

இவ்வாறு தினமும் காலை மற்றும் மாலை என இரண்டு வேளைகளும் செய்து வந்தால் பல் கூச்சம் கொஞ்சம் கொஞ்சமாக குறை ஆரம்பிக்கும்.

உப்பு பற்களில் உள்ள பாகட்ரியாக்களை அழிப்பதுடன் இரத்த கசிவையும் நிறுத்தும் அது மட்டுமில்லாமல் ஈறுகளையும் வலுவாக்கும்.

தினமும் உணவு சாப்பிட்ட பின் கல் உப்பு கொண்டு வெது வெதுப்பான நீரில் வாய் கொப்பளித்து வந்தால் பற்கள் என்றும் ஆரோக்கியமாக இருக்கும்.

கராம்பு

கராம்பை வாயினுள் வைத்து உமிழ்ந்து கொப்பளிப்பதன் மூலமும் பல் கூச்சத்தை குறைக்க முடியும்.

வாயில் உள்ள கிருமிகளை அளிப்பதற்கும் கராம்பு பயன்படுகின்றது.

புதினா இல்லை

புதினா இலையை வெயிலில் உலர வைத்து அதனுடன் சிறிது கல் உப்பு சேர்த்து பற்களை துலக்கி வந்தால் பல் கூச்சம் வேகமாக மறையும்.

இதை வெறுமாக வாயில் போட்டு மென்று வந்தாலும் பற்களில் ஏற்படும் கூச்சம் குறையும்.

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணையை பல் துலக்குவதற்கு முன் நன்றாக கொப்பளிக்க வேண்டும். இவ்வாறு தினமும் செய்து வந்தால் பல் கூச்சம் வேகமாக மறையும்.

இந்த தேங்காய் எண்ணெய் ஈறுகளில் ஏற்படும் பாதிப்புகளையும் சரி செய்து விடும்.

கொய்யா இல்லை

கொய்யா இலையினை நன்றாக வாயினுள் போட்டு மென்று ஈறுகளில் படும் படியாக கொப்பளிக்க வேண்டும்.

இவ்வாறு தினமும் இரண்டு தடவைகள் செய்து வந்தால் பல் கூச்சம் வேகமாக மறையும்.

மேலும்

பற்களை நன்றாக சுத்தம் செய்தல் என்ற எண்ணத்தில் நீண்ட நேரம் பற்களை தேய்ப்பதனால் ஈறுகள் விலகி பற்களின் வேர்கள் வெளியே வருவதும் பல் கூச்சத்திற்கு முக்கிய காரணம்.

நீண்ட நேரம் பல் துலக்குவதை தவிருங்கள். இது உங்கள் பற்கள் மற்றும் ஈறுகளை சேதப்படுத்தி விடும்.

பல் துலக்கும் போது சரியான முறைகளை கடைப்பிடியுங்கள். ஆறு மாதங்களுக்கு மேலாக ஒரே தூரிகையை பயன்படுத்துவதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.

பல் கூச்சம் இருக்கும் போது அமில வகை உணவுகளை அதிகம் சாப்பிடுவதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.

தினமும் அதிக குளிர்பானங்கள் குடிப்பதை தவிருங்கள்.

நன்றாக தினமும் தண்ணீர் குடியுங்கள்.

எப்பொழுதும் பற்களை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்.