சிறந்த முறைமையில் சுற்றுச்சூழல் அமைய தீபகற்பமானது பாரிய செல்வாக்கினை செலுத்துகின்றது. பரந்தளவில் நிலப்பகுதியால் சூழப்பட்டு காணப்படும் ஒரு பகுதியாக தீபகற்பமானது அமைந்துள்ளது.
Table of Contents
தீபகற்பம் என்றால் என்ன
தீபகற்பம் என்பது யாதெனில் மூன்று பக்கங்கள் நீராலும் ஒரு பக்கம் நிலத்தாலும் சூழப்பட்ட பகுதியினை தீபகற்பம் என குறிப்பிடலாம்.
இது பெரும்பாலும் நிலப்பகுதியால் சூழப்பட்டு காணப்படும். சில சமயங்களில் மூன்று பக்கங்களிலும் தண்ணீரை எல்லையாக கொண்ட நிலப்பகுதியினை தீபகற்பமாக கருதலாம்.
தீபகற்பத்தின் முக்கியத்துவம்
தீபகற்பங்களானவை பல்வேறு வகையில் முக்கியத்துவம் பெற்று காணப்படுகின்றது. தீபகற்பங்களில் எண்ணெய் மற்றும் எரிவாயு போன்ற இயற்கை வளங்கள் இருப்பதற்கான சாத்தியகூறுகள் அதிகமாக காணப்படுகின்றன.
மேலும் பல்வேறு வகையான வணிக ரீதியான வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சிக்கு தீபகற்பங்களானது துணைபுரிகின்றது.
அரேபிய தீபகற்பம்
அரேபிய தீபகற்பமானது ஆபிரிக்காவிற்கும் ஆசியாவிற்கும் இடையில் உள்ள ஒரு தீபகற்பமாகும். இப்பகுதியில் எண்ணெய் மற்றும் எரிவாயு பெருமளவில் கிடைப்பதால் மத்திய கிழக்கில் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பகுதியாக இது காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
அரேபிய தீபகற்ப பாலைவனமானது ஏராளமான வன விலங்குகளை கொண்டு காணப்படுகின்றது. அதாவது மான், குள்ள நரி, கழுதைப் புலி போன்ற விலங்குகள் காணப்படுகின்றன.
மேலும் அரேபிய தீபகற்பமானது பிரமிக்க வைக்கும் தனித்துவமான நிலப்பரப்புக்களை கொண்டமைந்து காணப்படுகின்றது. மிக முக்கியமான தொல்பொருள் தலங்களை உடையதாகவும் திகழ்கின்றது.
அரேபிய தீபகற்பத்தில் எண்ணெய் வளம் நிறைந்து காணப்படுவது சிறப்புமிக்கதாகும். இந்த எண்ணெய் தொழிலால் பல நகரங்கள் செழிப்புற்று விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும் சில கிராமப் புறங்களில் கம்பளம், நெசவு போன்ற பாரம்பரிய கைவினைப் பொருட்களின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துவதை காணலாம்.
சஹாரா பாலைவனத்திற்கு பிறகு உலகின் இரண்டாவது பெரிய பாலைவனம் அரேபிய தீபகற்பத்திலேயே காணப்படுகின்றது. மேலும் அரேபிய தீபகற்பத்தின் வரலாறானது பல மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தையதாகும்.
அரேபிய தீபகற்பத்தில் கனிமங்கள் மற்றும் தங்கம், வெள்ளி மற்றும் செம்பு போன்ற விலைமதிப்பற்ற உலோகங்கள் நிறைந்து காணப்படுகின்றது. இங்கு வளங்கள் சுரண்டப்படுவது இல்லை. மேலும் அதிகளவு ஜிப்சம், உப்புக்கள், பொஸ்பரைட், களிமண், சிலிக்கா மற்றும் கல் போன்றனவையும் காணப்படுகின்றன.
அரேபிய தீபகற்பத்தில் சிற்பி வளர்ப்பு ஒரு காலத்தில் லாபகரமான தொழிலாக இருந்தது. மேலும் இங்கு பள்ளத்தாக்குகள் மற்றும் கால்நடைகள் மேய்வதற்கான வளமான பகுதிகளும் பீடபூமிகளையும் கொண்டமைந்துள்ளதை காணக்கூடியதாக உள்ளது.
சினாய் தீபகற்பம்
இது எகிப்தில் உள்ள முக்கோண தீபகற்பமாகும். இது வடக்கே மத்திய தரைக் கடலுக்கும் தெற்கே செங்கடலுக்கும் இடையில் ஆபிரிக்காவிற்கும் தென்மேற்கு ஆசியாவிற்கும் ஒரு நிலப்பாலமாகும். இன்று இந்த தீபகற்பமானது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சுற்றுலா தலமாக காணப்படுகின்றது.
சினாய் தீபகற்பத்தின் பொருளாதாரமானது சுற்றுலாத்துறையை மையமாக வைத்தே காணப்படுகின்றது. அதாவது சினாயில் மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலங்களாக சினாய் மலை திகழ்கின்றது.
Read More: முகப்பரு நீங்க என்ன செய்ய வேண்டும்