குடுவை வேறு சொல்

குடுவை வேறு பெயர்கள்

குடுவை என்ற சொல் ஆரம்ப காலம் முதல் இன்று வரை தமிழில் பயன்படுத்தப்பட்டு வரும் சொல்லாக காணப்படுகின்றது.

குறுகிய வாயையுடைய கலம் குடுவை எனப்படும். குடுவை என்பது ‘வயிறு’ என்னும் பொருளில் கன்னியாகுமரி மாவட்டம் புதூர் வட்டார வழக்காக உள்ளது.

குறுகிய குடல் வழியாகப் பெருங்குடல் வயிறு என உணவு செல்வதால் குடுவைப் பொருள் கொள்ள வாய்த்துள்ளது. வைப்புழி (வைக்கும் இடம்) என்றும் வள்ளுவத்தை எண்ணலாம்.

குடுவை என்பதற்குப் பதனீர்ப்பெட்டி என்னும் நெல்லை வழக்கும் உண்டு. குடுவை என்பதை பூக்குடலை, செப்புக்குடம் என்பனவும் கருதலாம்.

குடுவை என்பது விஞ்ஞான ரீதியில் பரிசோதனை செய்யு பயன்படும் பொருட்களில் ஒன்றும் குடுவை எனப்படும். இவ்வாறு பல பொருள்படும் குடுவைக்கு பல பெயர்கள் உள்ளன.

குடுவை வேறு சொல்

  1. கூஷா
  2. குடுக்கை
  3. குப்பி
  4. பூக்குடலை
  5. செப்புக்குடம்
  6. குடம்

குடுவை உதாரணங்கள்

  1. சுரைக் குடுவை
  2. கூம்புக் குடுவை

இவற்றின் மூலம் குடுவை பற்றி அறியலாம்.

Read more: பித்த வெடிப்பு நீங்க டிப்ஸ்

கரும்புள்ளிகள் மறைய டிப்ஸ்