திசை வேறு பெயர்கள்

திசை வேறு சொல்

திசை (direction) என்பது ஒரு இடத்தை மையமாக வைத்து மற்றொரு இடத்தைப் பற்றி அவற்றின் இடைப்பட்ட தூரத்தை கணக்கில் கொள்ளாமல் அவ்விடங்களை மட்டுமே சார்ந்து கூறப்படும் செய்தி ஆகும்.

பொதுவாக திசைகளை குறிக்க அம்புக்குறி போன்ற பலகைகள் பயன்படுத்துகின்றன. திசையை அறிய உதவும் கருவி திசைகாட்டியாகும்.

இவற்றை ஆரம்ப கால மக்கள் சூரியன் உதிக்கும் திசை, கீழான பள்ளமான திசை என்பதனால் கீழ் திசை அதாவது கிழக்கு திசை என்றும்

வடபாகத்தில் வட மரங்கள் அதாவது ஆல மரங்கள் மிகுதியாக வளர்ந்திருந்தமையினால் அதனை வடதிசை என்றும்

தென் கண்டத்தில் அதிகளவான தென்னை மரங்கள் வளர்ந்து காணப்படுவதினால் அதனை தென் திசை எனவும் மற்றும் தென்றல் காற்று அத்திசையில் வீசுவதனால் தென் திசை எனவும் சூரியன் மறையும் திசையை மேற்கு திசையெனவும் கொண்டனர்.

இவ்வாறு நான்கு திசைகளும் புழக்கத்தில் வர ஆரம்பித்தன. இவ்வாறான திசை என்ற சொல்லுக்கு தமிழிலும் வட மொழியிலும் பல பெயர்கள் வழங்கப்படுகின்றன.

திசை வேறு பெயர்கள்

  • திக்கு
  • மாதிரம்
  • வம்பல்
  • விசும்பே
  • காட்டை
  • அரிதம்
  • ககுபம்
  • புலம்

இவ்வாறான பெயர்கள் திசைக்கு வழங்கப்படுகின்றன.

Read more: புதினம் என்றால் என்ன

ஊட்டச்சத்து என்றால் என்ன