ஊட்டச்சத்து என்றால் என்ன

ootachathu in tamil

உயிர்கள் அனைத்தின் வளர்ச்சிக்கும் ஊட்டச்சத்துக்கள் மிகவும் முக்கியமானவையாகும். குறிப்பாக மனிதனுக்கு ஊட்டச்சத்துக்கள் மிகமிக அவசியமானதாகும்.

ஊட்டச்சத்து உயிர் வாழ்வதற்கும், வளர்ச்சி அடைவதற்கும் இன்றியமையாத பொருளாகும். ஊட்டச்சத்துக்கள் குறைவாக இருந்தாலும் அதேவேளை அதிகமாக இருந்தாலும் அது பிரச்சினைக்குரியதாகும்.

எனவே ஆரோக்கியான வாழ்விற்கு அளவான ஊட்டச்சத்துக்களே தேவையாக உள்ளன.

ஊட்டச்சத்து என்றால் என்ன

ஊட்டச்சத்துக்கள் என்பது ஆங்கிலத்தில் Nutrition என்று அழைக்கப்படுகின்றது. வாழ்க்கைக்கு ஆதாரமான அத்தியாவசிய மூலப்பொருட்களை உயிரணுக்களுக்கும், அதன் மூலம் உயிரினங்களுக்கும் வழங்குகின்ற உணவு ஊட்டச்சத்துக்கள் எனப்படுகின்றன.

ஊட்டச்சத்தின் வகைகள்

ஊட்டச்சத்துக்களான சிறு நுண்ணூட்டச் சத்துக்கள், தெரு நுண்ணூட்டச் சத்துக்கள் என பிரதானமாக இரண்டு வகைப்படுகின்றன.

இதில் பெரும் நுண்ணூட்டச் சத்துக்கள் என்பது உடலுக்கு அதிகம் தேவைப்படுகின்றது. இப்பெரு நுண்ணூட்டச் சத்துக்களாக கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்பு போன்றவை உள்ளன.

சிறு நுண்ணூட்டக் சத்துக்கள் என்பவை குறைந்தளவு உடலுக்கு தேவைப்படும் ஊட்டச்சத்துகள் ஆகும். சிறு நுண்ணூட்டச் சத்துக்களான விட்டமின் A, B, C, D, K மினரல்ஸ், கால்சியம், சோடியம், பொட்டாசியம், மெக்னீசியம், காப்பர் போன்றவை அடங்கும்.

ஊட்டச்சத்து முக்கியத்துவம்

நாம் செய்யும் வேலைக்கு தேவையான சக்தியை வழங்குவதற்கு ஊட்டச்சத்துக்கள் முக்கியமானதாகும். மனிதனது தசை, எலும்பு வளர்ச்சிக்கு ஊட்டச்சத்துக்கள் தேவையாக உள்ளன.

உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோய்களை அண்டவிடாமல் உடலை பாதுகாப்பதற்கு ஊட்டச்சத்துக்களே மிகவும் அவசியமானதாகும்.

இதய நோய், சர்க்கரை நோய், பக்கவாதம் மற்றும் சில புற்றுநோய்கள் போன்ற நோய்களிலிருந்து நம்மைக் காப்பதற்கு ஊட்டச்சத்துக்கள் தேவைப்படுகின்றன.

மூளையின் வளர்ச்சிக்கும், ஞாபக சக்திக்கும் ஊட்டச்சத்துக்கள் முக்கியமானவை ஆகும்.

பார்வைத் திறனை அதிகப்படுத்துவதற்கு ஊட்டச்சத்துக்களின் பங்களிப்பு இன்றியமையாததாகும். இவற்றிற்கு விட்டமின் A, C, D, E உதவுகின்றன.

இரத்த ஓட்டத்தை சீராக வைத்திருப்பதற்கு ஊட்டச்சத்துக்கள் தேவையாக உள்ளன. இவற்றிற்கு விட்டமின் C, விட்டமின் D மற்றும் கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம் போன்றன உதவுகின்றன.

இதயம் பலமாக இருப்பதற்கும் ஊட்டச்சத்துக்களே துணைபுரிகின்றன. எனவே மனிதன் நோயின்றி ஆரோக்கியத்துடனும் நீண்ட ஆயுளுடனும் வாழ்வதற்கு ஊட்டச்சத்துக்கள் இன்றியமையாதவையாகும்.

குறை ஊட்டச்சத்து அறிகுறிகள்

ஊட்டச்சத்து பற்றாக்குறை ஏற்படின் அது உடலில் பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்தும். எளிதில் நகம் மற்றும் முடி உடையும். விட்டமின் B7 குறைவின் காரணமாகவே இது ஏற்படுகின்றது. அது மட்டுமன்றி அதிக உடற்சோர்வு, தசைகளில் வலி போன்றவை ஏற்படும்.

வாய்ப்புண், உதடு ஓரங்களில் வெடிப்பு ஏற்படும். விட்டமின் B2 குறைபாட்டால் இது ஏற்படுகிறது. விட்டமின் உள்ள உணவுகளை அதிக அளவில் எடுத்துக் கொண்டால் இதனை தவிர்க்கலாம்.

ஈறுகளில் ரத்தக் கசிவு ஏற்படும். இதற்குப் பிரதான காரணம் விட்டமின் C குறைபாடேயாகும். விட்டமின் C ஆனது உடலின் நோய் எதிர்ப்பு சக்திக்கும், காயங்களை விரைவில் குணப்படுத்துவதற்கும், உடலில் இரும்புச் சத்துக்கள் சேர்வதற்கும் தேவையானதாக உள்ளது.

ஊட்டச்சத்துக் குறைபாட்டால் கண்பார்வை மங்கலாதகத் தெரியும். விற்றமின் A குறைபாட்டால் இது ஏற்படுகின்றது. இக்குறைபாடுள்ளவர்கள் மஞ்சள் ஆரெஞ்சு நிறங்களிலுள்ள பழங்களை அதிகளவாக உண்ண வேண்டும்.

Read more: நார்ச்சத்து மிக்க உணவுகள்

கபம் என்றால் என்ன