சிலப்பதிகாரம் வேறு பெயர்கள்

சிலப்பதிகாரத்தின் வேறு பெயர்கள் யாவை

சங்க மருவிய காலத்தில் அறம் போற்றும் காப்பியங்களில் சிலப்பதிகாரமும் ஒன்று. இது ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றாகவும் போற்றப்படுகின்றது. இக்காப்பியம் இளங்கோவடிகளால் இயற்றப்பட்டது.

இக்காப்பியத்தில் 3 காண்டங்களும், 30 காதைகளும், 51 அடிகளும் காணப்படுகின்றது. இதில் இயல், இசை, நாடகம் என்பன ஒன்றிணைந்து காணப்படுகின்றன.

கோவலன் கண்ணகி போன்றோரின் கதையை கூறுவதோடு “அறம் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்” என்ற மகுடவாசகத்தினையும் அடிப்படையாகக் கொண்டது.

பொதுவாக இக்காலத்தில் தோன்றிய நூல்கள் எல்லாம் தெய்வங்களையோ அரசனையோ பாட்டுடை தலைவனாக கொள்ள இக்காப்பியம் மட்டும் கோவலன் எனும் குடிமகனை பாட்டுடைத் தலைவனாக கொண்டது.

இவ்வாறு பல சிறப்புகளை உடைய சிலப்பதிகாரம் பல பெயர்களால் அழைக்கப்படுகின்றது.

சிலப்பதிகாரம் வேறு பெயர்கள்

  1. தமிழின் முதல் காப்பியம்
  2. உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்
  3. முத்தமிழ்க்காப்பியம்
  4. முதன்மைக் காப்பியம்
  5. பத்தினிக் காப்பியம்
  6. நாடகப் காப்பியம்
  7. குடிமக்கள் காப்பியம் (தெ.பொ.மீ)
  8. புதுமைக் காப்பியம்
  9. பொதுமைக் காப்பியம்
  10. ஒற்றுமைக் காப்பியம்
  11. ஒருமைப்பாட்டுக் காப்பியம்
  12. தமிழ்த் தேசியக் காப்பியம்
  13. மூவேந்தர் காப்பியம்
  14. வரலாற்றுக் காப்பியம்
  15. போராட்ட காப்பியம்
  16. புரட்சிக்காப்பியம்
  17. சிறப்பதிகாரம் (உ.வே.சா)
  18. பைந்தமிழ் காப்பியம்

சிலப்பதிகாரம் பெயர் காரணம்

சிலம்பு+அதிகாரம்=சிலப்பதிகாரம். இதில் மகர ஒற்று வலித்தல் விகாரம் ஆயிற்று. சிலம்பினால் அதிகரித்த வரலாற்றைக் கூறுவது ஆதலின் “சிலப்பதிகாரம்” எனும் பெயரைப் பெற்றது.

சிலப்பதிகாரம் சிறப்புகள்

“நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்” என பாரதியார் கூறுகிறார்.

“சிலபதிகாரச் செய்யுளைக் கருதியும்……..தமிழ்ச் சாதியை அமரத்தன்மை வாய்ந்தது என்று உறுதியும் கொண்டிருந்தேன்” என கூறுகிறார் பாரதியார்.

“யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல் வள்ளுவனைப் போல் இளங்கோவைப் போல் பூமிதனில் யாங்கணமே பிறந்ததில்லை” என்றார் பாரதியார்.

“முதன் முதலாகத் தமிழ் மக்கள் எல்லோரையும் ஒருங்கே காணும் நெறியில் நின்று நூல் செய்தவர் இளங்கோவடிகள்” – மு.வரதராசனார்

பாவின் வளர்ச்சிக்கு வித்திட்ட நூல் சிலப்பதிகாரம்.

சிலப்பதிகாரம் நூல் அமைப்பு

  • காண்டங்கள் = 3 (புகார் காண்டம், மதுரைக் காண்டம், வஞ்சிக் காண்டம்)
  • காதைகள் = 30
  • முதல் காதை = மங்கல வாழ்த்துப் பாடல்
  • இறுதி காதை = வரந்தருகாதை

சிலப்பதிகாரத்தில் கூறப்படும் மூன்று உண்மைகள்

  • ஊழ்வினை உறுத்துவந்து ஊட்டும்.
  • அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்.
  • உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்துவர்.

சிலப்பதிகாரத்தின் கதா பாத்திரங்கள்

  • கோவலனின் தந்தை மாசாத்துவான்
  • கண்ணகியின் தந்தை மாநாய்கன்
  • கோவலனின் தோழன் மாடலன்
  • கண்ணகியின் தோழி தேவந்தி
  • மாதவியின் தோழி சுதமதி, வயந்தமாலை
  • கோவலனுக்கும் மாதவிக்கும் பிறந்தவள் = மணிமேகலை
  • கண்ணகி கோவில் கட்டியவன் சேரன் செங்குட்டுவன்
  • கோவில் உள்ள இடம் திருவஞ்சிக்களம் (குமுளி)
  • சேரன் செங்குட்டுவன் போர் செய்த இடம் குயிலாலுவம்

இவ்வாறான பல சிறப்பம்சங்களை உடையதே சிலப்பதிகாரமாகும்.

Read more: சிலப்பதிகாரம் சிறப்புகள்

இரட்டை காப்பியங்கள் கட்டுரை