தகவல் அறியும் உரிமை சட்டம் கட்டுரை

thagaval ariyum urimai sattam katturai

தகவல் அறியும் உரிமை சட்டம் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • பின்னணி
  • தகவல் அறியும் உரிமை சட்டத்தின் அவசியம்
  • தகவல் அறியும் உரிமை சட்டத்தின் பயன்கள்
  • இந்தியாவில் தகவலறியும் உரிமை சட்டம்
  • முடிவுரை

முன்னுரை

தகவலறியும் உரிமை தொடர்பான எண்ணக்கரு 18ஆம், 19ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட அரசியல் மற்றும், அறிவியல் மறுமலர்ச்சியின் விளைவாக எழுச்சி பெற்ற ஒன்றாகும். 1766 ஆம் ஆண்டு சுவிடன் முதன் முதலாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தினை அறிமுகப்படுத்தியது.

பின்னணி

1946 ஆம் ஆண்டு கூடிய ஐக்கிய நாடுகள் சபையின் முதல் அமர்வு “தகவலுக்கான சுதந்திரம் அடிப்படை மனித உரிமையாகும் என்பதுடன் அது அனைத்து சுதந்திரங்களுக்கும் அடிப்படையானது” எனும் தீர்மானத்தை மேற்கொண்டது. ஆனால் 1996 ஆம் ஆண்டு வரை தகவலுக்கான சுதந்திரம் உலக நாடுகளில் வெறும் பேச்சுப் பொருளாகவே இருந்தது.

1996 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் பொது நிர்வாகமும், அபிவிருத்தியும் பற்றிய 50 வது அமர்வில் உரையாற்றிய ஐ.நா செயலாளர் பூட்ரோஸ் காலி தகவல் அறியும் உரிமை பற்றி மீள வலியுறுத்தியதுடன், நல்லாட்சி பிரஜைகளுக்கு தகவல் அறியும் சுதந்திரத்தை சட்டரீதியாக உத்தரவாதம் செய்வது இன்றியமையாதது எனக் குறிப்பிட்டார்.

இதன் பின்பு ஐக்கிய நாடுகள் சபையின் அங்கத்துவம் வகிக்கும் நாடுகள் பலவும் தத்தமது நாடுகளில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை உருவாக்கின. இதுவரை 100 ற்கும் மேற்பட்ட நாடுகளில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் அவசியம்

உயிர்த்துடிப்புள்ள ஜனநாயக நாடுகளில் பிரதிகளுக்கு இருக்க வேண்டிய அடிப்படை மனித உரிமைகளில் ஒன்றாக தகவல் அறியும் உரிமைச் சட்டம் கருதப்படுகின்றது. அரசாங்கத்தின் பல செயல்பாடுகள் பிரஜைகள் வரிப்பணத்திலேயே இடம் பெறுகின்றன.

எனவே அரசாங்கத்திற்கு வரி, பணம் செலுத்துபவர்கள் என்ற வகையில் பிரஜைகள் ஒவ்வொருவருக்கும் அரசாங்கத்தின் செயல்பாடுகள், சேவைகள், சட்டதிட்டங்கள், கொள்கைகள் மற்றும், அதன் நிர்வாகம் தொடர்பாக அறிந்து கொள்ள உரிமை உண்டு.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பயன்கள்

இச்சட்டமானது ஊழலுக்கு எதிராக குரல் கொடுப்பதற்கு, அரசியல் நடவடிக்கைகளில் முழுமையாக பங்கேற்க, பிரதிகளை வலுப்படுத்துவதற்கு, வினைத்திறனுள்ள வகையில் பொதுச் சேவை வளங்களை, அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்ள அரசாங்கத்தை தூண்டுவதற்கு, பிரஜைகளின் அடிப்படை உரிமைகளை அனுமதிப்பதற்கு சிறந்த கருவியாக பயன்படுகிறது.

இந்தியாவில் தகவலறியும் உரிமைச்சட்டம்

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாகவும், மக்கள் சக்தி மிக்க நாடாகவும் விளங்குகின்ற இந்தியாவில் சுதந்திரமான பின்னர் முதல் இன்று வரை பல லட்சக்கணக்கான விடையங்கள் ஆவணங்கப்படுத்தப்பட்டுள்ளன.

அந்தவகையில் மக்களுக்கான சட்டமாக 2005 ஆம் ஆண்டில் இந்திய அரசால் கொண்டுவரப்பட்ட சட்டமே தகவலறியும் உரிமைச் சட்டமாகும்.

இதனை ஆங்கிலத்தில் Right to Information என்பர். RTI என்பது மத்திய, மாநில அரசுகளின் துறைகள், அரசு சார்ந்த துறைகளின் செயல்பாடுகளில் மக்கள் வெளிப்படைத்தன்மையுடன் தெரிந்து கொள்வதற்காகக் கொண்டு வரப்பட்ட சட்டமாகும்.

இதன் நோக்கம் அரசு அதிகாரிகளின் செயல்பாடுகளில் வெளிப்படுத்த தன்மையையும், ஊழலை கட்டுப்படுத்துவதனையும் அதே வேளை, அரசுத்துறைகள் மற்றும், நிறுவனங்கள் ஆகியவைகள் மக்களுக்கு கட்டுப்பட்டுள்ளதை உறுதி செய்யவும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

முடிவுரை

இச்சட்டத்தின் வெற்றியானது இதன் அடிப்படை உரிமைகளை, தத்துவங்களை எந்த அளவிற்கு அரச நிறுவனங்கள் பேணுகின்றன, மதிக்கின்றன என்பதும், தகவல்களை எந்தளவுக்கு சீராக வழங்குகின்றன என்பதிலுமே தங்கி உள்ளது.

Read More: இந்தியாவின் சிறப்புகள் கட்டுரை

எனது தாய் நாடு இந்தியா கட்டுரை