எனது தாய் நாடு இந்தியா கட்டுரை

enathu thainadu katturai in tamil

இந்த பதிவில் “எனது தாய் நாடு இந்தியா கட்டுரை” பதிவை காணலாம்.

இன்றைய இந்தியா இளைஞர்களின் சாதனைகளால் உலகத்தாரால் வியந்து பார்க்கப்படுகின்றது.

எனது தாய் நாடு இந்தியா கட்டுரை

எனது தாய்நாடு இந்தியா கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • இந்தியாவின் சிறப்பம்சம்
  • மக்களின் ஒற்றுமை
  • இன்றைய இந்தியா
  • எதிர்கால இந்தியா
  • முடிவுரை

முன்னுரை

இந்திய தேசமானது பலகோடி மக்களின் ஒற்றுமையாலும் தியாகத்தாலும் உருவான தேசமாகும். நீண்ட நெடிய ஒரு வரலாற்றை கொண்ட இந்திய தேசமானது பல கோடி மக்களின் பெருமைக்குரிய தாய் நாடாகும்.

அழகான இயற்கை வளங்களும், தனித்துவமான கலைகளும், செல்வங்களும், மகத்தான பண்பாட்டு விழுமியங்களையும் உடைய இந்தியா நாற்திசைகளிலும் புகழப்படுகின்ற ஒரு சிறந்த நாடாகும்.

உலகத்தின் மிகப்பெரிய ஜனநாயக நாடு எனும் வகையில் இங்கே வாழ்கின்ற இந்தியர்கள் அனைவரும் பெருமைக்குரியவர்கள் ஆவர்.

இந்தியாவின் சிறப்பம்சம்

உலகின் இரண்டாவது சனத்தொகை கொண்ட இந்திய நாடு பன்முக கலாச்சாரங்களை கொண்ட மக்கள் மற்றும் பல மொழிகளை பேசும் மக்களை கொண்ட உலகின் ஓரே நாடு என்ற பெருமை உடையது.

வடக்கே இமயமலையாலும் கிழக்கே வங்க கடலாலும் மேற்கே அரபிக்கடலாலும் தெற்கே இலங்கை தீவாலும் இந்தியா எல்லை படுத்தப்படுகின்றது.

இந்தியாவில் ஏழு புண்ணிய நதிகள் மற்றும் தூய்மையான காடுகள் என இயற்கை வரம் நிறைந்த நாடாகும். இங்கு இந்து, பௌத்தம், இஸ்லாம், கிறீஸ்தவம் என பல மத மக்கள் ஒற்றுமையாக வாழ்கின்றனர்.

மக்களின் ஒற்றுமை

இந்தியா ஆரம்ப காலங்களில் பல தேசங்களாக பிரிந்து காணப்பட்டது. இதன் வளங்களை கண்டு ஆசை கொண்ட அந்நியர்கள் இதன் மீது படையெடுத்து வந்தனர். இதன் வளங்களை அள்ளி சென்றனர் அத்தோடு நாட்டை அடிமைப்படுத்தவும் செய்தனர்.

இறுதியாக பிரித்தானியர்களின் ஆதிக்கத்தின் கீழ் இருந்து வந்த இந்திய தேசம் மக்களின் ஒற்றுமையான பேரெழுச்சியினால் 1947 இல் சுதந்திர இந்தியாவாக பிரகடனம் செய்யப்பட்டது.

இதற்காக பல ஒப்பற்ற தலைவர்கள் தமது உடல், பொருள், ஆவியினை தியாகம் செய்து விலைமதிப்பற்ற சுதந்திரத்தை பெற்று கொடுத்தார்கள். இன்றளவும் இந்த ஒற்றுமை உணர்வு தான் உலக அரங்கில் இந்தியாவை ஒரு தனித்துவ நாடாக காட்டி வருகின்றது.

இன்றைய இந்தியா

இன்றைய இந்தியா இளைஞர்களின் சாதனைகளால் உலகத்தாரால் வியந்து பார்க்கப்படுகின்றது. கடந்த சில நாட்களில் இந்தியாவின் 75 ஆவது சுதந்திர தினம் கோலகலமாக கொண்டாடப்பட்டது.

இதில் உலகமெங்கும் வாழ்கின்ற இந்தியர்களின் தாய்நாட்டின் மீதான பற்று மிக அழகாக வெளிப்படுத்தப்பட்டதனை அவதானிக்க முடிந்தது. வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத அழகியல் இந்தியர்களின் தாய்நாட்டு பற்று என்றால் அது மிகையல்ல.

எதிர்கால இந்தியா

இந்தியா முன்னாள் ஜனாதிபதியும் உலகம் போற்றும் கனவு நாயகனுமான டாக்டர் அப்துலகலாம் அவர்கள் ஒரு கனவு கண்டார் எதிர்கால இந்திய இளைஞர்களது திறமையால் உலக அரங்கில் தலை நிமிரும் என்று விரும்பினார். அதற்கான விதையினையும் அவர் போட்டு சென்றார்.

அவரது கனவுகளை மெய்பிக்கும் வகையில் இன்றைய இளைஞர்கள் விளையாட்டு, கலை, கல்வி, தொழில்துறை, தொழில்நுட்பம், இராணுவம் என பல துறைகளில் இந்தியாவை உலக அரங்கில் முன்னணியில் கொண்டு வந்து சேர்த்து வருவது இந்தியர்கள் அனைவருக்கும் பெருமையாகும்.

முடிவுரை

ஒவ்வொரு மனிதனுக்கும் தனது தாய்நாட்டின் மீது அளவுகடந்த அன்பு இருக்கும் ஏன் என்றால் உலகில் எங்கு சென்றாலும் தாய்நாட்டின் தனித்துவம் எங்கும் கிடைக்காது.

ஆகையால் இந்தியர்கள் அனைவரும் தமது ஒற்றுமையினாலும் திறமையினாலும் இந்த உலகின் பிற நாடுகளுக்கும் ஒரு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்பது அனைவரதும் விருப்பமாகும்.

You May Also Like :
என் கனவு இந்தியா கட்டுரை
இந்தியாவின் சிறப்புகள் கட்டுரை