இட ஒதுக்கீட்டில் சமூக நீதி கலைஞரின் சாதனை கட்டுரை

தமிழக அரசியல் வரலாற்றில் கலைஞர் கருணாநிதிக்கு தனித்துவமான இடமுண்டு. தமிழக மக்களுக்கு பயனுள்ள பல திட்டங்களை அன்றே உருவாக்கி தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியுள்ளார்.

இட ஒதுக்கீட்டில் சமூக நீதி கலைஞரின் சாதனை கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • இட ஒதுக்கீடு என்பது
  • மகளிர்க்கான இட ஒதுக்கீட்டில் கலைஞரின் சாதனைகள்
  • முடிவுரை

முன்னுரை

இந்தியாவில் காலம் காலமாகச் சில சமூகத்தினரது அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு அவர்கள் பின்தங்கிய நிலையிலேயே வைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் சுயமாகச் சிந்தித்து முன்னேறும் அளவுகூட வளர்ச்சியடையாமல் சிந்தனையிலும், அறிவிலும், கலாச்சாரத்திலும் மிகவும் பின்தங்கிய நிலையியேயே இருந்து வந்தனர்.

இவ்வாறு சில சமூகங்களுக்கு காலம் காலமாக இழைத்த அநீதிக்கு முடிவுகட்டி, சலுகைகளை அவர்களுக்கு அளிப்பதுதான் சமூகநீதி என்று சுகந்திரமடைந்த பின்னர் நாட்டு மக்களின் நன்மைக்காக பாடுபட்ட தலைவர்கள் இதைச் சட்டமாக்கினர்.

அந்த வகையில் கலைஞர் கருணாநிதி அவர்களின் சாதனை சமூக நலத்திட்டங்களை நிறைவேற்றியதில் அளப்பெரியதாகும்.

இட ஒதுக்கீடு என்பது

இட ஒதுக்கீடு என்பது சமுதாயத்தில் அழுத்தப்பட்ட மக்களுக்கு கல்வி வேலைவாய்ப்பு அரசியல் பதவிகள் என பல்வேறு துறைகளில் இடங்களை அவர்களது பாதிப்புநிலை, பங்கு பெற்றுள்ள நிலை மற்றும் மக்கள் தொகைக்கேற்ப ஒதுக்கி அவர்களுக்குரிய பிரதிநிதித்துவத்தைப் பெறச் செய்து சமுதாய சமத்துவத்தை ஏற்படுத்துவதாகும்.

மகளிர்க்கான இட ஒதுக்கீட்டில் கலைஞரது சாதனைகள்

திறமையும், அறிவும் இருந்தும் கூட பெண்கள் விரும்பிய துறையில் செல்ல குடும்பங்கள் அனுமதிப்பதில்லை. எவ்வளவு படித்திருந்தாலும் குடும்பச்சுமைகளை தாங்கி பெண்கள் வீட்டு வேலைகளை செய்யும் அடிமைகளாக வழிநடத்தப்பட்டனர்.

வீட்டுக்குள்ளே பெண்களைப் பூட்டி வைப்போம் என்று விந்தை மனிதர்கள் வாழ்ந்த அந்தக் காலகட்டத்தில் முத்தமிழ் அறிஞர் மு.கருணாநிதி அவர்கள் பெண்களுக்காக அரசு பள்ளிகளில் 30 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்கினார்.

இதுவே பின்னர் பரிணாம வளர்ச்சி அடைந்து மகளிருக்கான 69% இட ஒதுக்கீடாக வளர்ந்தது. அந்த நிகழ்வுக்கு பின்னரே ஆளுமை என்பது ஆண்களுக்கு மட்டுமே என்ற எண்ணம் தவிடுபொடியாகியது.

அது மட்டுமல்லாது 1989 ஆம் ஆண்டு கலைஞரது ஆட்சிக் காலத்தில் பெண்களுக்கு சொத்தில் சம உரிமை கொண்டுவர சட்ட திருத்தம் செய்யப்பட்டது. பெற்றோரது சொத்தில் மட்டுமின்றி, பூர்வீக சொத்திலும் சம உரிமை கிடைக்க இந்த சட்டம் வழிவகுத்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

தமிழக அரசியல் வரலாற்றில் தனது பேராற்றலாலும் பெரும் பணிகளாலும் அவரது உழைப்பினாலும் ஆற்றல் மிக்க படைப்புகளினாலும் தனக்கென ஒரு தனி முத்திரையை பதித்தவர் கலைஞர் கருணாநிதி அவர்களாவர்.

முடிவுரை

அனைத்து சமூகத்திலும் அடித்தட்டு மக்களது கல்வி, வேலை வாய்ப்புகளை உறுதி செய்ததனால் மானிட மேம்பாட்டுக் குறியீட்டில் இந்திய மாநிலங்களிலேயே தமிழ்நாடு மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்த சாதனைக்கு சொந்தக்காரர் கலைஞர் அவர்களே ஆவார்.

சமத்துவம் என்பது நமது சமுதாயத்தின் மனசாட்சியில் ஊடுருவி இருக்க வேண்டும். அப்போதுதான் அனைத்து மக்களும் தமக்கான அடிப்படை உரிமைகள் கிடைக்கப்பெற்று மகிழ்வான வாழ்க்கையை வாழ முடியும் என்பதனை உணர்ந்து செயற்பட்ட தலைவர் கருணாநிதியாவார்.

Read More: பரந்து கிடக்கும் தொழில் உலகு கட்டுரை

கடமை கண்ணியம் கட்டுப்பாடு கட்டுரை