மனிதனுக்கு ஏற்படும் உணர்வுகளில் சோர்வு என்ற உணர்வும் ஒன்றாகும். ஒருவர் தொடர்ந்து வேலை செய்து விட்டு ஓய்வு வேண்டும் என்ற நிலை ஏற்படும் போதே சோர்வு என்ற நிலை ஏற்படும்.
சுருக்கமாகக் கூறின் மேலும் பணிகள் செய்ய முடியாத நிலையே சோர்வு எனலாம். சோர்வு ஏற்பட்டால் ஒருவன் கட்டாயம் ஓய்வெடுக்க வேண்டும். சோர்வு என்பது பலவீனம் அல்லது மேலும் தொடர்ந்து வேலை செய்வதற்கு சலிப்பான நிலை எனலாம்.
சோர்வு என்பது மன ரீதியாகவும் ஏற்படலாம் மற்றும் உடல் ரீதியாகவும் ஏற்படலாம். இவ்வாறான சோர்வு என்பதற்கு வேறு பெயர்களும் காணப்படுகின்றன.
சோர்வு வேறு சொல்
- அசதி
- களைப்பு
- அயர்வு
- அயர்ப்பு
- அயர்தி
- அற்றம்
- தளர்ச்சி
- சலிப்பு
சோர்வின் வகைகள்
- மன ரீதியான சோம்பல்
ஒரு விடயத்தில் ஆழ்ந்த சிந்தனையில் தொடர்ச்சியாக ஈடுபட்டால் அதனால் மன ரீதியான சோம்பல் உண்டாகும்.
- உடல் ரீதியான சோம்பல்
இது ஒருவர் மிக அதிகமாக உடற்பயிற்சியில் ஈடுபட்டாலோ அல்லது கடினமான வேலைகள் செய்வதனாலோ உருவாகும் உணர்வாகும். இதன் மூலம் சோர்வு என்ற சொல்லினைப் பற்றி அறியலாம்.
Read more: கரும்புள்ளிகள் மறைய டிப்ஸ்