சொடக்கு தக்காளி நன்மைகள் (Sodakku Thakkali Benefits): இந்த சொடக்கு தக்காளியில் வைட்டமின்கள், தயாமின், ரிபோப்ளோவின், நியாசின், பொட்டாசியம், பாஸ்பரஸ், கால்சியம், மக்னீசியம், இரும்புசத்து மற்றும் புரதம் என பல ஊட்ட சத்துக்கள் நிறைந்திருக்கின்றன.
Table of Contents
சொடக்கு தக்காளி நன்மைகள்
இரத்த சோகை
இரத்த சோகை பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கு சொடக்கு தக்காளி சிறந்த மருந்தாகும்.
இதிலுள்ள அதிகபடியான இரும்பு சத்து புதிய இரத்த செல்கள் உற்பத்திக்கு உதவி செய்யும். இதனால் அதிகபடியான இரத்தம் உடலில் உற்பத்தியாவதோடு இரத்தமும் சுத்தமாகும்.
கல்லீரல் புது பொலிவு பெறும்
இந்த சொடக்கு தக்காளி பழத்தை சாப்பிட்டு வந்தால் கல்லீரலில் உள்ள கழிவுகள் அனைத்தும் வெளியேறி கல்லீரல் சுத்தமாகும்.
அதுமட்டுமின்றி கல்லீரலில் புதிய செல்கள் உருவாகும் கல்லீரல் சம்பந்தமான பிரச்சனை உள்ளவர்களுக்கு இந்த சொடக்கு தக்காளி சிறந்த மருந்தாகும்.
நரம்பு மண்டலம் பலம் பெறும்
உடலில் நரம்பு மண்டலம் சீராக செயல்படுவதற்கு தேவையான வைட்டமின்கள் இந்த சொடக்கு தக்காளியில் நிறைந்திருக்கின்றன.
நரம்பு சம்பந்தமான பிரச்சனை உள்ளவர்கள் சொடக்கு தக்காளி சாப்பிட்டு வந்தால் விரைவில் பயன் கிடைக்கும்.
குறிப்பாக கீல்வாத நோயால் உண்டாக கூடிய மூட்டு வீக்கம், மூட்டுவலி போன்றவற்றை குணமாக்கும்.
மூளையின் செயல்திறன் அதிகரிக்கும்
சொடக்கு தக்காளி சாப்பிட்டு வந்தால் மூளைக்கு தேவையான இரத்த ஓட்டம் சீராக கிடைக்கும்.
இதனால் ஞாபக சக்தி அதிகரிக்கும் அத்தோடு மூளை சுறு சுறுப்பாகவும் இயங்குகிறது.
கண்கள் ஆரோக்கியம்
கண்களுக்கு தேவையான ஊட்ட சத்துக்கள் சொடக்கு தக்காளியில் நிறைந்திருக்கின்றன.
கண் சம்பந்தமான பிரச்சனை உள்ளவர்கள் மற்றும் அதிக நேரம் கணினி முன் இருப்பவர்கள் சொடக்கு தக்காளியை சாப்பிட்டு வந்தால் சிறந்த பயனை பெறலாம்.
சர்க்கரை நோய்
மரபு ரீதியாக ஏற்படும் சர்க்கரை நோயை தடுக்கும் சக்தி இந்த சொடக்கு தக்காளிக்கு இருப்பதாக பல்வேறு ஆய்வுகள் கூறுகின்றன.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
இந்த சொடக்கு தக்காளி இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மை கொண்டவை.
இரத்த அழுத்தம்
நமது உடலில் ஏற்படும் இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் சக்தி சொடக்கு தக்காளிக்கு உண்டு.
கெட்ட கொலஸ்ட்ரோல்
சொடக்கு தக்காளியில் இருக்கும் வேதி பொருள் உடலில் இருக்கும் கெட்ட கொலஸ்ட்ரோலை கரைக்கும் இதனால் இருதயம் சீராக இயங்க உதவியாக இருக்கிறது.
இதனால் அதிகபடியான உடல் எடையை குறைக்கவும் உதவுகின்றது.
எலும்புகள் வலு பெறும்
சொடக்கு தக்காளியில் இருக்க கூடிய கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் எலும்புகளுக்கு தேவையான சத்துக்களை கொடுக்கின்றன. இதனால் எலும்புகள் வலுப்பெற்று பலம் பெறும்.
செரிமானம் சீராகும்
உணவு செரிமானத்துக்கு தேவையான நார்ச்சத்துக்கள் அதிகளவு சொடக்கு தக்காளியில் இருப்பதனால் செரிமானம் சீராக நடைபெற உதவுகிறது இதனால் மலச்சிக்கல் பிரச்சனையும் சீராகும்.
மற்றும் சொடக்கு தக்காளி சிறந்த வலி நிவாரணியாகவும் புற்று நோயை எதிர்க்கும் சக்தி கொண்டதாகவும் இருக்கிறது.
சொடக்கு தக்காளி அறிவியல் பெயர்
இந்த சொடக்கு தக்காளியின் அறிவியல் பெயர் “பைசாலிஸ் இக்சோகர்பா” ஆகும்.
சொடக்கு தக்காளி ஆங்கில பெயர்
“Physalis minima” என்பது சொடக்கு தக்காளியின் ஆங்கில பெயர் ஆகும்.
சொடக்கு தக்காளி கீரை சாப்பிடலாமா
நம்மில் பலருக்கு இருக்கும் கேள்வி சொடக்கு தக்காளி கீரை சாப்பிடலாமா? இதற்கு பதில் ஆம் சாப்பிடலாம்.
சொடக்கு தக்காளியின் பழம் மற்றும் இலைகள் மருத்துவ குணங்கள் கொண்டவை. இவற்றை சாப்பிடுவதன் மூலம் நமது உடலுக்கு ஆரோக்கியம் கிடைக்கும்.
இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்து பயன் பெற செய்யுங்கள்.