பச்சை கற்பூரம் பயன்கள்

Pachai Karpooram Uses In Tamil

பச்சை கற்பூரம் பயன்கள்: இது உணவு, ஆன்மிகம், மருத்துவம், அழகு மற்றும் ஆரோக்கியம் என பல பயன்பாடுகளை கொண்டது.

அன்றைய கால கட்டத்தில் நமது முன்னோர்கள் பச்சை கற்பூரத்தை மிக பிரதானமான ஒரு பொருளாக பயன்படுத்தி வந்துள்ளார்கள்.

இலவங்கப்பட்டை மற்றும் பச்சை கற்பூரம் என்பன ஒரே தாவர குடும்பத்தை சார்ந்தவை.

பச்சை கற்பூரம் மற்றும் தீப ஆராதனைகளுக்கு பயன்படுத்தப்படும் கற்பூரம் இரண்டும் வெவ்வேறானது.

  • Pachai Karpooram Uses In Tamil
  • பச்சை கற்பூரம் பயன்கள்

Pachai Karpooram Uses In Tamil

  • சிறந்த கிருமி நீக்கி
  • சளி தொல்லை குணமாக்கும்
  • சுவாச கோளாறுகளை குணமாக்கும்
  • புத்துணர்ச்சி கொடுக்கும்
  • பாத வெடிப்பு நீக்கும்
  • நேர்மறை எண்ணங்களை வளர்க்கும்
  • சிறந்த நறுமணம் கொடுக்கும்
  • செல்வம் பெருகும்

பச்சை கற்பூரம் பயன்கள்

உணவில் பச்சை கற்பூரம்

முன்னைய காலங்களில் இனிப்பு போன்ற விரைவில் பழுதடையும் உணவுகள் செய்யும் போது பச்சை கற்பூரத்தையும் சேர்த்து வந்தார்கள்.

காரணம் பச்சை கற்பூரம் பங்கஸ் போன்ற கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டதால் உணவுகள் விரைவில் பழுதடையாமல் இருக்கும்.

உதாரணமாக பூந்தி தயாரிக்கும் போது பச்சை கற்பூரமும் சேர்த்தே செய்கிறார்கள்.

கோவில்களில் கொடுக்கப்படும் தீர்த்தங்களில் பச்சை கற்பூரம் சேர்த்தே தீர்த்தம் செய்கிறார்கள்.

இந்த பச்சை கற்பூரத்தை உணவில் சேர்க்கும் போது உணவில் கிருமி தோற்று ஏற்படாது. அதே போல உணவின் சுவையும் அதிகரிக்கும்.

மருத்துவ பயன்கள்

இந்த பச்சை கற்பூரம் சளி தொல்லை மற்றும் சுவாச கோளாறுகளை குணப்படுத்தும் தன்மை கொண்டவை.

பச்சை கற்பூரம் சிறந்த நறுமணம் கொண்டது. இதை வீட்டில் வைத்திருந்தால் காற்றில் பரவி நல்ல நறுமணத்தை தருவதோடு சுவாசத்திற்கும் ஆரோக்கியமானது.

கால் பாத வெடிப்பு உள்ளவர்கள் பச்சை கற்பூரத்தை தடவி வந்தால் பாத வெடிப்பு குணமாகும்.

இந்த பச்சை கற்பூரம் உடலுக்கு புத்துணர்ச்சியை கொடுப்பதுடன் இளமையையும் பாதுகாக்கிறது.

பச்சை கற்பூரம் ஆன்மீக பயன்பாடு

இந்த பச்சை கற்பூரத்தை பூஜை அறையில் வைக்கும் போது மனத்தில் நேர்மறை எண்ணங்களை தூண்டும். மற்றும் பணம் சேர்க்கும் இடங்களில் வைக்கும் போது செல்வம் அதிகமாகும்.

இந்த பச்சை கற்பூரம் மகாலட்சுமி கடவுளுக்கு மிகவும் பிடிக்கும் இதனாலே பச்சை கற்பூரம் இருக்கும் இடத்தில் செல்வம் பெருகும் என்று முன்னோர்கள் குறிப்பிடுகிறார்கள்.

You May Also Like:

பூனைக்காலி விதை பொடி பயன்கள்

குப்பைமேனி இலை பயன்கள்