பூனைக்காலி விதை பொடி பயன்கள்

Poonaikali Vidhai Powder Benefits In Tamil

பூனைக்காலி விதை பொடி பயன்கள் (Poonaikali Vidhai Powder Benefits In Tamil): நரம்பு தொடர்பான நோயால் பாதிக்கப்பட்டவர்கள், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் ஆண்மை தன்மை பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த பூனைக்காலி அருமையான மருந்து ஆகும்.

  • பூனைக்காலி விதை பொடி பயன்கள்
  • Poonaikali Vidhai Powder Benefits In Tamil

Poonaikali Vidhai Powder Benefits In Tamil

  • நரம்பு தளர்ச்சி
  • கைகால் நடுக்கம்
  • பக்கவாதம்
  • நீண்ட நேர தாம்பத்தியம்
  • ஆண்குறி விறைப்பு பிரச்சனை

பூனைக்காலி விதை பொடி பயன்கள்

நரம்பு தளர்ச்சி மற்றும் கை கால் நடுக்கம்

பூனைக்காலி நரம்பு தளர்ச்சியை நீக்கி நரம்பு மண்டலதைபலமாக்குவதோடு பக்கவாத பிரச்சனையையும் குணப்படுத்த உதவுகிறது.

நரம்பு தளர்ச்சியால் ஏற்படும் கைகால் நடுக்கத்தை குணப்படுத்தவும் பூனைக்காலி மூலிகை பயன்படுகிறது.

தாம்பத்தியம்

ஆண்களுக்கு ஏற்படக்கூடிய நரம்பு பலவீனங்கள் மற்றும் உயிரணு குறைபாடுகள் போன்றவற்றை குணப்படுத்துகிறது.

ஆண்களுக்கு விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதில் பூனைக்காலி மூலிகை சிறப்புமிக்கது.

தூக்கத்தில் விந்தணு வெளியேறும் பிரச்சனை உள்ளவர்களுக்கு இந்த பூனைக்காலி சிறந்த தீர்வாக அமைகிறது.

நீண்ட நேரம் தாம்பத்திய உறவில் ஈடுபட முடியாமல் அவதிப்படுபவர்கள் இந்த பூனைக்காலி விதை பொடியினை எடுத்து வந்தால் விரைவில் இந்த பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

வயது முதுமையால் ஆண்களுக்கு ஏற்படும் ஆண்குறி விறைப்பு தன்மை பிரச்சனையை குணப்படுத்தவும் பூனைக்காலி உதவுகிறது.

பூனைக்காலி விதை பொடி செய்யும் முறை

பூனைக்காலி விதைகளை எடுத்து நன்றாக சுத்தம் செய்து பின்னர் அதனை சிறிது நேரம் லேசாக வறுக்க வேண்டும். அப்படி வறுத்தால் தான் பூனைக்காலி விதையின் மேல் இருக்கும் ஓட்டினை நீக்க முடியும்.

இவ்வாறு ஓடு நீக்கிய பின் கிடைக்கும் பூனைக்காலி விதையின் பருப்பினை பாலில் சிறிது நேரம் வேகவைத்து பின்னர் நன்றாக உலர வைக்க வேண்டும்.

நன்றாக உலர்ந்த பின்னர் பொடியாக்க வேண்டும்.

பூனைக்காலி விதை பொடி சாப்பிடும் முறை

அரை தேக்கரண்டி பூனைக்காலி விதை பொடி அளவு எடுத்து தினமும் பாலில் கலந்து அல்லது தேனில் கலந்து காலையிலும் இரவிலும் குடித்து வந்தால் சிறந்த பலன் கிடைக்கும்.

பூனைக்காலி விதை எங்கு கிடைக்கும்

பூனைக்காலி விதை பொடி மற்றும் பூனைக்காலி விதை சாதாரணமாக நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.

நீங்கள் பூனைக்காலி விதையினை வாங்கியும் உங்கள் தேவைக்கு ஏற்ப பொடியாக்கி கொள்ள முடியும்.

எவ்வாறு பூனைக்காலி விதை பொடி தயாரிப்பது என்பது மேலே குறிப்பிடப்பட்டுள்ளது.

You May Also Like:

அஸ்வகந்தா வின் பயன்கள்

குப்பைமேனி இலை பயன்கள்