சூழ்நிலை மண்டலம் என்றால் என்ன

soolnilai mandalam enral enna

சூழல் மண்டலமானது நிலச்சூழல் மண்டலம், நீர்ச் சூழல் மண்டலம் என்று இரு பெரும் பிரிவுகளைக் கொண்டுள்ளது.

நிலச்சூழல் மண்டலமானது காட்டுச்சூழல் மண்டலம், பாலைவனச்சூழல் மண்டலம், புல்வெளிச்சூழல் மண்டலம், மலைப்பகுதிச்சூழல் மண்டலம் என நான்கு பெரும் பகுதிகளைக் கொண்டுள்ளது.

நீர்ச் சூழல் மண்டலம் நன்னீர்சூழல் மண்டலம், கடல்சூழல் மண்டலம் என இரண்டு பிரிவுகளை கொண்டுள்ளது. நீரினை பயன்படுத்தி வாழும் உயிரினங்கள் இங்கு காணப்படும்.

சூழ்நிலை மண்டலம் என்றால் என்ன

உயிருள்ள கூறுகளும் உயிரற்ற கூறுகளும் ஒருங்கிணைந்து செயல்பட கூடிய அமைப்பே சூழ்நிலை மண்டலம் ஆகும்.

தாவரங்களும், விலங்குகளும் சுற்றுச்சூழலின் முக்கியக் கூறுகளாகும். இவை காற்று, நீர், மண், சூரிய ஒளி போன்ற உயிரற்ற கூறுகளுடன் தொடர்பு கொண்டுள்ளன.

எடுத்துக்காட்டு: ஒளிச்சேர்க்கை அதாவது ஒளிச்சேர்க்கை என்பது சூரிய ஒளி, நீர், காபன்டை ஆக்சைடு பொருட்கள் ஆகியவற்றை பயன்படுத்தி ஆக்சிஜனை வெளிவிடுகின்றது. இதிலிருந்து உயிருள்ள கூறுகளுக்கும், உயிரற்ற பொருளுக்கும் இடையே நடைபெறும் பொருட்களின் பரிமாற்றங்களை அறிய முடிகின்றது.

சூழல் மண்டலம் என்ற சொல்லானது A.G டான்ஸ்லி என்பவரால் 1935ஆம் ஆண்டு முன்மொழியப்பட்டது.

இவர் சூழல் மண்டலத்தை “சுற்றுச்சூழலின் அனைத்து உயிருள்ள மற்றும் உயிரற்ற காரணிகளை ஒருங்கிணைப்பதன் விளைவாக அமைந்த அமைப்பாகும்” என வரையறுத்துள்ளார்.

1962 ஆம் ஆண்டு ஓடம் என்பவர் “சூழ்நிலையியலின் அமைப்பு மற்றும் செயற்பாட்டு அலகு” என்று வரையறுத்துள்ளார்.

சூழ்நிலை மண்டலம் எதிர்நோக்குகின்ற பாதிப்புக்கள்

பொதுவாக சூழ்நிலை மண்டல பாதிப்பு என்கின்ற போது நிலமாசுபாடு, காற்று மாசுபாட்டின் காரணமாக நிலச்சூழல் மண்டலம் பெரிதும் பாதிப்படைகிறது. நீர்மாசுபாடு, காற்று மாசுபாட்டால் நீர்ச்சூழல் மண்டலம் சீர்கேடு அடைகிறது.

சூழல்மண்டலத்தின் உற்பத்தித்திறன்

ஓர் அலகு காலத்தில் ஓர் அலகுப் பரப்பில் உற்பத்தி செய்யப்படும் உயிரித்திரள் வீதமே உற்பத்தித்திறன் எனப்படுகின்றது.

இது கிராம் அல்லது சதுரமீற்றர் அல்லது வருடம் அல்லது கிலோ கலோரி அல்லது சதுரமீற்றர் அல்லது வருடம் ஆகிய அலகுகளால் குறிப்பிடப்படுகின்றது. இது கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தப்படுகின்றது. அதாவது,

  1. முதல்நிலை உற்பத்தித்திறன்
  2. இரண்டாம்நிலை உற்பத்தித்திறன்
  3. குழம உற்பத்தித்திறன்

முதல்நிலை உற்பத்தித்திறன் என்பது ஒளிச்சேர்க்கை மற்றும் வேதிச்சேர்க்கைச் செயற்பாட்டின் மூலம் தற்சார்பு ஊட்ட உயிரிகளினால் உற்பத்தி செய்யப்படும் கரிம கூட்டுப்பொருட்கள் முதல் நிலை உற்பத்தித்திறன் எனப்படும்.

சார்பூட்ட உயிரிகள் அல்லது நுகர்வோர்களின் திசுக்களில் சேமித்து வைக்கப்படும் ஆற்றலின் அளவே இரண்டாம் நிலை உற்பத்தித்திறன் எனப்படுகின்றது.

ஓர் அலகு இடத்தில் ஓர் அலகு காலத்தில் ஒரு தாவரக் குழமத்தினால் உற்பத்தி செய்யப்படும் நிகர கரிம பொருட்களின் உயிரித்திரள் விகிதமே குழம உற்பத்தித்திறன் எனப்படுகின்றது.

Read more: சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வழிமுறைகள் கட்டுரை

சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு கட்டுரை