சுவாமி விவேகானந்தர் பற்றிய கட்டுரை

Vivekananda Katturai In Tamil

இந்த பதிவில் ஆன்மீகத்தில் சிறந்து விளங்கிய “சுவாமி விவேகானந்தர் பற்றிய கட்டுரை” பதிவை காணலாம்.

மனிதர்கள் தெய்வீகமானவர்கள் என்பதையும் இந்த தெய்வீகத்தை வெளிப்படுத்துவதே மனித வாழ்வின் சாராம்சம் என்பதை தொடர்ந்து வலியுறுத்தியவர்.

சுவாமி விவேகானந்தர் பற்றிய கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. ஆரம்ப வாழ்க்கை
  3. இந்தியாவில் சுவாமி விவேகானந்தர் பயணம்
  4. உயர்கல்வியும் ஆன்மீக ஈடுபாடும்
  5. இறப்பு
  6. முடிவுரை

முன்னுரை

விவேகானந்தர் போற்றுதற்குரிய துறவியாவார். இவரது தத்துவங்களும்⸴ தத்துவக் கருத்துக்களாலும் உலக புகழ் பெற்றவராவார். 100 இளைஞர்களை தாருங்கள் இந்த தேசத்தை மாற்றிக் காட்டுகிறேன் என்று கூறி இளைஞர்கள் மீது அவர் கொண்ட நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.

ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டிருந்த அன்றைய இந்தியா மீதான மேலை நாட்டவரின் பார்வையை மாற்றும் விதமாக இவரது சிகாகோ உரை இருந்தது.

அஞ்ஞானம் என்னும் இருளில் உலகம் இருந்த காலத்தில் மிகப்பெரிய ஆன்மீக ரிஷிகள் பலர் தோன்றி மனிதனின் ஆத்மாவை ஆராய்ந்து மனிதனின் விஸ்வரூபம் என்னவென்று தெளிந்து அதையே வேதங்களாக வடிவமைத்து தந்தனர்.

அந்தப் பரம்பரையில் வந்தவர் தான் சுவாமி விவேகானந்தர். சுவாமி விவேகானந்தர் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

ஆரம்ப வாழ்க்கை

சுவாமி விவேகானந்தர் அவர்கள் கல்கத்தாவில் ஜனவரி 12 1863ல் விஸ்வநாத் தத்தா என்பவருக்கும்⸴ புவனேஸ்வரி தேவிக்கும் மகனாகப் பிறந்தார். இவரது இயற்பெயர் நரேந்திரநாத் தத்தா.

துறவியாக மாறிய போது தனது இயற்பெயரை சுவாமி விவேகானந்தர் என்று மாற்றிக்கொண்டார்.

இவர் கல்வி மற்றும் விளையாட்டில் மிகச் சிறந்து விளங்கினார். சிறிய வயதிலேயே வாய்மொழி⸴ இசைக் கருவி⸴ தியானம் போன்றவற்றில் பயிற்சி மேற்கொண்டு பயின்றார்.

இந்தியாவில் சுவாமி விவேகானந்தர் பயணம்

1890ம் ஆண்டில் சுவாமி விவேகானந்தர் அவர்கள் மிக நீண்ட சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அவருடைய இந்த பயணத்தில் நாட்டின் அனைத்து இடங்களுக்கும் சென்றார்.

தனது பயணத்தில் வாரநாசி⸴ அயோத்தி⸴ ஆக்ரா⸴ பிருந்தாவன் ஆழ்வார் போன்ற பல இடங்களுக்கு சென்றார். நல்லது மற்றும் கெட்டது என்று பகுத்தறியும் திறனுக்காக மகாராஜா கேத்ரி என்பவர் இவருக்கு விவேகானந்தர் என்று பெயரிட்டார்.

இவரது பயணத்தில் மன்னர்களின் அரண்மனைகளிலும் ஏழைகளின் குடிசைகளிலும் தங்கினார். இந்திய பயணத்தில் பல வகையான கலாச்சார மக்களுடனும் தொடர்பினை ஏற்படுத்திக் கொண்டார்.

உயர்கல்வியும் ஆன்மீக ஈடுபாடும்

சுவாமி விவேகானந்தர் அவர்கள் 1879ல் மெட்ரிக் பள்ளிப் படிப்பினை முடித்து கல்கத்தாவிலுள்ள பிரசிடென்சி கல்லூரியில் சேர்ந்தார். ஒரு வருடம் கழித்து கல்கத்தாவிலுள்ள ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியில் சேர்ந்து தத்துவப் பாடத்தைப் படித்தார்.

கடவுள் இருப்பது பற்றியான சந்தேகங்கள் அவர் மனதில் எழத் தொடங்கின. இதுவே அவரை கேசவ்ஒப் சந்திராஸ் தலைமையிலான முக்கிய மத இயக்கமான பிரம்ம சமாஜாவில் இணைய வைத்தது.

இந்நேரத்தில் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் பற்றி தெரியவந்தது. இவர் ராமகிருஷ்ணரை தனது குருவாக ஏற்றுக் கொண்டு இரட்டைத் தன்மை இல்லாத அத்வைத வேதாந்தத்தில் ஐந்து ஆண்டுகள் அவரின் கீழ் பயிற்சி மேற்கொண்டார்.

இறப்பு

மேலை நாடுகளுக்குச் சென்று பயணம் மேற்கொண்டு இந்தியா திரும்பிய சுவாமி விவேகானந்தர் அவர்கள் கல்கத்தா அருகில் வேலூரில் அவரால் நிறுவப்பட்ட ஸ்ரீராமகிருஷ்ண மடத்தில் ஜூலை 4 1902 ஆம் ஆண்டு தனது 39 ஆவது வயதில் இறந்தார்.

முடிவுரை

மனிதர்கள் தெய்வீகமானவர்கள் என்பதையும் இந்த தெய்வீகத்தை வெளிப்படுத்துவதே மனித வாழ்வின் சாராம்சம் என்பதையும் தனது அனைத்து சொற்பொழிவுகளிலும்⸴ எழுத்துக்களிலும் வலியுறுத்தியவர்.

சமூகத்தில் ஒரு குறிப்பிட்டவர்களிடம் மட்டும் இருந்த ஆன்மீகத்தை அனைவருக்கும் உரியதாகவும் மாற்ற மிகப்பெரிய அடித்தளத்தை இட்டவர் இவர் என்று கூறினால் அது மிகையாகாது.

You May Also Like :
நம்பிக்கை தரும் தன்னம்பிக்கை கட்டுரை
உண்மையே உயர்வு தரும் கட்டுரை