சுற்றுலா செல்வதால் ஏற்படும் நன்மைகள்

சுற்றுலா நன்மைகள்

மனிதன் தான் வாழும் இடத்தை விட்டு வேறு இடத்திற்குச் சென்று, தங்கி, மகிழ்ந்து, புத்துணர்வு பெற்று திரும்புதல் சுற்றுலாவாகும். வாழ்வில் அனுபவத்தை பெற்றிட சுற்றுலா செல்வது மிக அவசியம்.

சுற்றுலாத் தலங்களாக உலகில் பல ஆயிரக்கணக்கான இடங்கள் உள்ளன. அதாவது சுற்றுலா தளங்கள் என்பவை அதிக மக்கள் விரும்பும், ரசிக்கும், வரவேற்கும் அங்கீகாரத்தையும் சிறப்புகளையும் மதிப்புகளையும் மற்றும் வரலாற்றையும் பெற்ற இடங்கள் ஆகும்.

சுற்றுலா செல்வதால் மனதளவிலும், அறிவுப்பூர்வமாகவும் பல நன்மைகளை அளிக்கின்றன. சுற்றுலா செல்வதால் ஏற்படும் நன்மைகள் பற்றி இப்பதிவில் காண்போம்.

சுற்றுலா செல்வதால் ஏற்படும் நன்மைகள்

#1. ஒரு நாட்டின் பழக்கவழக்கங்களைத் தெரிந்துகொள்ள முடியும்.

ஓரிடத்தில் வாழும் மக்களின் பாரம்பரியம், பண்பாடு, வரலாறு, பழக்க வழக்கங்கள், வழிபாட்டு முறைகள், திருவிழாக்கள், சடங்குகள் போன்றவற்றைத் தெரிந்து கொள்ளலாம்.

#2. சுற்றுலாவின் மூலமே ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொள்ளும் வாய்ப்பு உண்டாகிறது.

சுற்றுலா மூலம் புதிய புதிய மனிதர்களுடன் உரையாடுவதற்கு வாய்ப்புகள் ஏற்படும். இதனால் வேறு நாடுகளில் வசிக்கும் மனிதர்களின் இயல்புகளைப் பற்றி புரிந்து கொள்ள வாய்ப்புகள் ஏற்படும்.

#3. மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.

பல புதிய இடங்களுக்குச் செல்வதும், பல்வேறு மக்களை காண்பதும் நம் உணர்வை மட்டுமில்லாது உடலுக்கும் புத்துணர்ச்சி தரும். மேலும், அன்றாடம் உழைத்து, உழைத்து அலுத்துப் போன தொழிலாளிக்கு சுற்றுலா இன்பம் தருகிறது.

#4. இயற்கையின் அழகை ரசிக்க முடியும்.

இயற்கையில் படைப்பில் இருக்கும் அழகுகள், உயிரினங்கள், பாய்ந்து செல்லும் ஆறுகள், பரந்து விரிந்த கடல்கள், மலைக்காட்சிகள், மண்ணின் வளங்கள், குகைகள் போன்றவற்றை சுற்றுலா செல்வதன் மூலம் ரசிக்க முடியும்

#5. நாட்டின் பொருளாதாரத்தையும் மேம்படுத்துகின்றன.

அரசுகள் ஒவ்வொன்றும் அந்நியச் செலாவணியை ஈட்டிக் கொள்ள சுற்றுலாத்துறை பயன்படுத்தப்படுகின்றன. சுற்றுலா மூலம் நாட்டின் பொருளாதாரம் மேலும் வளர்ச்சி பெறும்.

#6. வேற்றுமையில் ஒற்றுமை காண முடியும்.

உலக நாடுகள் யாவும் பல மத, மொழி, கலாசார, பண்பாட்டு விழுமியம் போன்றவற்றில் பல வேற்றுமைகளை கொண்டுள்ளன. உலக மக்கள் அனைவரிடமும் நிலவும் பேதம் மற்றும் வேற்றுமையை நீக்கிட சுற்றுலாத்துறை கைக்கொடுக்கிறது.

#7. தேசிய ஒருமைப்பாடு வளர்கிறது.

சுற்றுலா செல்லும் பயணி பிற மாநிலங்களில் வாழும் மக்களுடன் கூடிப்பேசி மகிழ வாய்ப்புகள் ஏற்படுகின்றது. மாநிலங்களுக்கு இடையில் மக்கள் சுற்றுலா சென்று வரும்போது தேசிய ஒருமைப்பாட்டு உணர்ச்சி வளர்கின்றது. இதனால் தேசிய ஒருமைப்பாடு வலுவடைகிறது.

#8. வாழ்க்கைத்தரம் உயர்கிறது.

சுற்றுலா அதிக வேலைவாய்ப்பை பெற்று தருவதால், புதிய வேலை வாய்ப்புக்கள் பல கிடைக்கப் பெறுகின்றன. இதனால் குறைந்த வருமானம் உடையவர்களுக்கு அதிக வருமானம் கிடைக்கின்றது. இது தனி மனித வருமானத்தை உயர்த்தி வாழ்க்கைத்தரத்தை உயர்த்துகிறது.

#9. தனி மனித அறிவு பெருகுகிறது.

பிற நாடுகளுக்கு அல்லது, தமது நாடுகளில் உள்ள இடங்களுக்கு செல்லும்போது சுற்றுலா பயணியின் அறிவு வளர்ச்சி அடைகின்றது. நவீன அறிவியல் முன்னேற்றத்தையும், தொழில் வளர்ச்சியையும் அறிந்து கொள்ள முடியும். இதன் மூலம் அறிவு விருத்தி அடையும்.

#10. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச் சின்னங்கள் பேணிப் பாதுகாக்கப்படுகின்றன.

பெரும்பாலான சுற்றுலா பயணிகள் ஒரு நாட்டினுடைய வரலாற்றுச் சின்னங்கள், கலைகள், வரலாற்று பாரம்பரிய பண்பாட்டு விழுமியங்கள் போன்றவற்றையே பார்வையிட அதிகம் ஆர்வம் கொள்கின்றனர்.

இதனால் குறித்த நாட்டினுடைய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சின்னங்கள் சுற்றுலாப் பயணிகளின் வருகையை கவர்வதற்குப் பேணிப் பாதுகாக்கப்படுகின்றன.

You May Also Like :
இளைஞர்கள் பற்றிய கட்டுரை
மரம் வளர்ப்போம் பயன் பெறுவோம் கட்டுரை