அமில மழை காரணங்கள் மற்றும் விளைவுகள்

amila malai vilaivugal in tamil

உலகம் பல பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றது. அதில் அமில மழையும் ஒன்றாகும். அமில மழை என்பது சாதாரண மழை போன்றது அல்ல.

சாதாரண மழைநீரின் கார அமில நிலை அளவு 5 மற்றும் 6 என்ற அளவில் இருக்கும். ஆனால், அமிலம் கலந்த மழையின் கார அமில அளவு அதிகமாக இருக்கும்.

அமில மழையானது அதிகமாகக் காற்றை மாசுபடுத்தும் சல்பர் டை ஆக்சைடு மற்றும் நைட்ரஜன் ஆக்சைடு போன்றவற்றின் தாக்கத்தால் உருவாகிறது. அமில மழை காரணங்கள் மற்றும் விளைவுகள் பற்றி இப்பதிவில் காண்போம்.

அமில மழை காரணங்கள்

சல்பர் டை ஆக்சைடு மற்றும் நைட்ரஜன் ஆக்சைடும் மழையுடன் கலப்பதாலேயே அமிலமழை உண்டாகிறது.

சல்பர் டை ஆக்சைடு, நைட்ரஜன் ஆக்சைடு, நீர், ஆக்சிஜன் மற்றும் காற்றிலுள்ள மற்ற ரசாயனங்கள் கலக்கும்போது நிச்சயமாக ஒரு ரசாயன வினை நிகழும். அந்த ரசாயன மாற்றம் கந்தக மற்றும் நைட்ரிக் அமிலங்களாக மாறி மழையாகப் பொழிகிறது.

எரிமலை வெடிப்பு.

எரிமலை வெடிப்பு என்பது இயற்கையான நிகழ்வாகும். எரிமலை வெடிப்பின் போது இயற்கையாகவே இம்மழை உண்டாகும்.

அதாவது எரிமலை வெடிப்பின்போது அமில மழைப்பொழிவிற்கு காரணமான மாசுபடுத்திகள் அதிகளவு வெளியிடப்படுகிறது. இம்மாசுபடுத்திகள் மழையாகவோ, பனியாகவோ, பனிபுகையாவோ அமில மழைப்பொழிவினை ஏற்படுத்துகின்றன.

மின்னல் தாக்கம்.

மின்னல்கள் ஏற்படும் போது நைட்ரஜன் ஆக்சைடுகள் இயற்கையில் அதிகளவு உருவாகி அமில மழையைத் தோற்றுவிக்கின்றன.

வாகனங்களிலிருந்து வெளியாகும் புகை.

மனிதனால் இயக்கப்படும் மற்றும் தானியங்கி வாகனங்களின் செயற்பாடுகளின் போது எரிபொருட்களிலுள்ள கந்தகம் மற்றும் நைதரசனின் கூறுகள் எரியும் போது முறையே கந்தகவீரொக்சைட்டையும் நைதரசனின் ஒக்சைட்டுகளையும் தோற்றுவிக்கும். இவை மழை நீரில் கரைந்து அமில மழை உருவாகும்.

தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகை

மனித தொகைக்கேற்ப வளங்களின் தேவைகளும் அதிகரித்து வருகின்றன. இதனால் உலகளாவிய ரீதியில் பல தொழிற்சாலைகளில் உருவாக்கம் அதிகரித்துள்ளன. தொழிற்சாலைகளில் கந்த-டை-ஆக்சைடு, நைட்ரஜன் ஆக்சைடுகளை அதிக அளவு வெளியேற்றுகின்றன. இவற்றிலிருந்து வரும் புகை அமில மழையை ஏற்படுத்துகின்றன.

மின் சக்தி ஆக்கம்.

அமில மழைப் பொலிவுக்கு, முதன்மையானதும் அதிக பங்களிப்பை வழங்குவதும் நிலக்கரியை எரித்து செய்யப்படும் மின் உற்பத்தியே ஆகும். இவற்றினால் வெளியிடப்படும் வாயுக்கள் அமிலமாக மாறி வளிமண்டலத்தில் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர்கள் எடுத்துச் செல்லப்படுகிறது.

அமில மழையினால் ஏற்படும் விளைவுகள்.

மரங்கள் மற்றும் காடுகள் அழிக்கப்படுகின்றன.

அமில மழை காரணமாக மரங்களிலுள்ள இலைகளை பட்டுப்போகச் செய்து மரங்கள் மற்றும் வனப்பகுதிகள் அழிய நேரிடும். மேலும், மரங்களில் நோய்களை உண்டாக்கியும் மரப்பட்டைகளை சேதப்படுத்தியும் அவற்றை அழிக்கின்றது.

நீர்வாழ் விலங்குகள் பாதிப்படைகின்றன.

அமில மழைப்பொழிவானது நீர்நிலைகளில் விழும்போது, நீர்நிலைகளின் சூழ்நிலைகளில் பெரும் பாதிப்பு ஏற்படுகின்றது. குறிப்பாக நீரின் பி.எச் மதிப்பு குறையும் போது மீன் முட்டைகள் பொரிப்பதில்லை. மேலும் மீன்களும் இறக்கின்றன.

மண்ணின் சிறப்புத் தன்மை குறைவடைகின்றது.

மண்ணில் கால்சியம் மற்றும் மெக்னீசியம் போன்றன உள்ளன. இவை மண் வளத்துக்கு துணைபுரிபவையாகும். அமில மழைப்பொழிவால் மண்ணின் வேதியியல் பண்புகளில் பெரிய மாற்றம் ஏற்படுகிறது. இதனால் மண்வளம் சிதைவுறுகின்றது.

மனிதனுக்குச் சுவாச நோய்கள் ஏற்படுகின்றன.

அமில மழை பொழிவால் மனிதர்களுக்கு உடல் நலக் கேடுகள் ஏற்படுகின்றன. குறிப்பாக, மூச்சு குழாய் அழற்சி நோய், ஆஸ்துமா உள்ளிட்ட சுவாசக் கோளாறுகள் ஏற்படுகின்றன.

கட்டடங்கள் சிதைவடைகின்றன.

அமில மழை காரணமாக, கல்சியம் கார்பனேற்றுடன் அமிலம் தாக்கமடைவதால் இவற்றாலான கட்டடங்களும் சிலைகளும் கலை வடிவங்களும் சிதைவடைகின்றன.

You May Also Like :
நார்ச்சத்து மிக்க உணவுகள்
குழந்தை தொழிலாளர் உருவாக காரணம்