சிக்கனமும் சிறுசேமிப்பும் கட்டுரை

Sikkanamum Siru Semippu Katturai In Tamil

ஒவ்வொருவருக்கும் கட்டாயம் இருக்க வேண்டிய பழக்கமான சிக்கனமும் சிறுசேமிப்பும் கட்டுரை தொகுப்பை இந்த பதிவில் பார்க்கலாம்.

சிறுக சிறுக சேமிப்பதன் மூலமும் சிக்கனமாக செலவு செய்வதன் மூலமும் நம்மால் பெருந்தொகையை சேர்த்துக்கொள்ள முடியும். இதனை “சிறு துளி பெரும் வெள்ளம்” என்பார்கள்.

சேமிப்பு பழக்கமும் சிக்கனமும் இருந்தால் தான் ஒருவர் வாழ்வில் உயரத்தை அடைய முடியும்.

  • சிக்கனமும் சிறுசேமிப்பும் கட்டுரை
  • Sikkanamum Siru Semippu Katturai In Tamil

தமிழர் பண்பாடும் கலாச்சாரமும் கட்டுரை இங்கே சென்று பாருங்கள்.

சிக்கனமும் சிறுசேமிப்பும் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. சிக்கனவாழ்வும் முன்னேற்றமும்
  3. சேமிப்பு பழக்கவழக்கமும் வாழ்க்கை பாதுகாப்பும்
  4. இன்றைய சேமிப்பு பழக்கவழக்கம்
  5. முடிவுரை

முன்னுரை

“சிறுதுளி பெருவெள்ளம்” என்று கூறுவார்கள். அதாவது சிறுக சிறுக சேமிக்கின்ற பழக்கம் என்றாவது ஒருநாள் எமக்கு உதவும். ஆகவே சேமிப்பு மனித வாழ்க்கையில் அவசியம்.

பொதுவாக மனிதர்கள் இளம் வயதில் அதிகமாக உழைக்க இயலும் ஆனால் முதுமையில் உழைக்க வலு இருக்காது. ஆகவே உழைக்கும் காலத்தில் சிறுதொகையை சேமித்து வைப்பதால் பிற்காலத்தில் அது உதவும் என்பார்கள்.

இந்த அவசர உலகத்தில் நமக்கு திடீரென உருவாகும் நோயாகட்டும் தேவைகளாகட்டும் இவ் அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்க பணம் என்பதே ஒரே தீர்வாகும்.

இன்றைக்கு என்னதான் நல்லவராயிருப்பினும் திறமையுடையவராய் இருப்பினும் பணம் இல்லாதவராயின் அவரை சமூகம் அங்கீகரிக்காது என்பது வேதனையான உண்மையாகும். ஆகவே மக்கள் சிக்கனத்துடன் சேமித்தாக வேண்டும்.

இக்கட்டுரையில் சிக்கன வாழ்வும் முன்னேற்றமும் சேமிப்பு பழக்கவழக்கமும் வாழ்க்கை பாதுகாப்பும் இன்றைய கால சேமிப்பு பழக்க வழக்கங்கள் ஆகிய விடயங்கள் நோக்கப்படுகிறது.

சிக்கன வாழ்வும் முன்னேற்றமும்

“இல்லானை இல்லாளும் வேண்டாள் ஈன்றெடுத்த தாயும் வேண்டாள் செல்லாது அவன் பேச்சு” என்கிறார் ஒளவையார்.

அதாவது பணம் இல்லாதவனுடைய வாழ்க்கை பரிதாபகரமானது. அடுத்தவரை நம்பியோ, கடன், அவமானம், நிராகரிப்பு என பல வலிகளை சந்திக்க நேரிடும். ஒரு மனிதன் உழைப்பின் ஒரு பகுதியை சேமிக்கவேண்டும்.

நாம் காணும் எறும்புகள் கூட தனக்கான உணவை கோடையில் சேமித்து வைக்கும் பின்பு மழை நாட்களில் உணவு கஷ்டம் இன்றி உயிர் வாழும்.

இது போல மனிதர்களும் இடர் வருங்காலங்களில் தம்மை பாதுகாக்கவும் வாழ்க்கையில் எல்லா கட்டங்களிலும் தொழில் முன்னேற்றம் அபிவிருத்தி செலவுகளை சமாளிக்க சேமிப்பதனால் தான் வாழ்க்கையில் முன்னேற முடியும்.

முன்னை நாட்களில் நெல் போன்ற தானியங்கள் அதிகம் விளையும் காலங்களில் அவற்றை கோபுரங்களில் சேமித்து வைப்பார்கள். இது அனர்த்தங்கள், பஞ்சம், பட்டினி வருகின்ற வேளைகளில் அதனை எடுத்து பயன்படுத்துவார்கள்.

இந்த உலகத்தில் பிறவி பணக்காரர்களாக பிறப்பவர்கள் குறைவு படிப்படியாக உழைப்பும் சேமிப்பும் என முன்னேறியவர்களே அதிகமாக உள்ளனர்.

மனிதன் தன் வாழ்வில் ஊதாரி தனத்தை விடுத்து சேமிப்பதன் மூலம் உழைப்பும் தழைப்பும் உண்டாகும்.

சேமிப்பு பழக்க வழக்கமும் வாழ்க்கை பாதுகாப்பும்

மனிதனுடைய வாழ்க்கை முழுவதும் பிரச்சனைகளால் நிறைந்தது. வாழ்வின் எக்காலப்பகுதிகளிலும் எமக்கு பிரச்சனைகளோ நோயோ ஏற்படலாம்.

இன்றைக்கு எமது பிரச்சனைகளை தீர்க்க எம்மிடம் போதுமான வசதி இருந்தால் நாம் பாதுகாப்பாக உணரலாம். இல்லாதவிடத்து அப்பிரச்சனையை தீர்க்க நாம் பல பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டும்.

இதற்கு “ஈட்டி எட்டின மட்டும் பாயும் பணம் பாதாளம் வரைக்கும் பாயும்” என்ற பழமொழி கூறுவார்கள்.

இன்றைக்கு ஒரு மனிதன் உயிர்காக்கும் மருத்துவம் பணமாகிவிட்டது. உணவும் குடிநீரும் வியாபாரமாகி விட்டது. கல்வி பெரும் பணம் புரளும் தொழிலாகி விட்டது. தவறே செய்யாத போதும் நீதி கிடைக்கவும் பணம் தான் வேண்டும்.

இலஞ்சமும் ஊழலும் மலிந்து விட்டன. ஒருவன் இறந்தால் அவனது இறுதி கிரியை செய்யக்கூட பணம் தான் வேண்டும்.

எனவே எம்மை நாம் பாதுகாக்க உத்தரவாதம் இல்லாத இவ்வுலகில் சேமிப்போம். எம் வாழ்க்கையை பிழைத்துகொள்ள முயல்வோம்.

இன்றைய சேமிப்பு பழக்கவழக்கம்

இன்றைக்கு நவீனம் அடைந்து விட்ட உலகில் ஆடம்பரத்துக்கும் பகட்டுக்கும் வீண்செலவு செய்வோர் அதிகம்.

அடுத்தவர்களுக்கு தாங்கள் குறைவில்லை என்று காட்டவே தேவையற்ற வீண் செலவுகளை செய்யும் வழக்கம் எம் சமூகத்தில் உள்ளது.

இன்றைய காலத்தில் அதிக வங்கிகள், தனியார் ஆயள்காப்புறுதி நிறுவனங்கள் என பல தோன்றி பல சேமிப்பு திட்டங்கள், ஆயுள் காப்புறுதி என மக்களின் சேமிப்பை ஊக்குவிக்கின்றனர்.

உழைக்கின்ற பணத்தின் ஒரு பகுதியை பாதுகாப்பாக முதலிடும் பழக்கம் இன்று அதிகமாக காணப்படுகிறது. வீண் செலவுகளை தவிர்த்து சேமிப்பதனால் பல நன்மைகளை சமூகம் அடைந்து கொள்ளும்.

முடிவுரை

மனித வாழ்க்கையில் பிரச்சனைகள் தோன்றும் போது தான் சேமிப்பின் அருமையும் புரியும். அதாவது கோடையில் நீரின் அருமை தெரிவதை போல் வாழும் காலத்தில் சேமிப்பு பழக்கம் உடையவர்களாக இருப்பதனால் சக மனிதர்களிடம் கடமைப்படாது சுயமாக தலைநிமிர்ந்து வாழவும் பிறருக்க உதவி செய்யவும் எம்மால் முடியும்.

அடுத்த தலைமுறை குழந்தைகளுக்கு வெறுமனே பணத்தை மட்டும் சேமிக்காமல் கொஞ்சம் தண்ணீரையும் காற்றையும் இயற்கையையும் சேர்த்தே பாதுகாத்து வைப்போம்.

You May Also Like:

கல்வி வளர்ச்சி கட்டுரை

விருந்தோம்பல் பற்றிய கட்டுரை