இன்றைய சேமிப்பு நாளைய பாதுகாப்பு கட்டுரை

Indraya Semippu Nalaiya Pathukappu

இந்த பதிவில் “இன்றைய சேமிப்பு நாளைய பாதுகாப்பு கட்டுரை” பதிவை காணலாம்.

திடீரென ஏற்படும் அவசர தேவைகளுக்கு சேமிப்பு தான் கை கொடுக்கும். எனவே அனைவரும் சேமிப்பு பழக்கத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

இன்றைய சேமிப்பு நாளைய பாதுகாப்பு கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. சேமிப்பின் அவசியம்
  3. சேமிப்பு பழக்கவழக்கமும் வாழ்க்கைப் பாதுகாப்பும்
  4. சேமிக்கும் வழிகள்
  5. சேமிப்பின் பயன்கள்
  6. முன்னுரை

முன்னுரை

“சிறு துளி பெரு வெள்ளம்ˮ என்பர். சேமிப்பு என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் மிகவும் அவசியமான ஒன்றாகும். தற்காலத்திலேயே சேமிக்கும் போது தான் அது எதிர்காலத்தில் பயன்படுவதாக அமையும்.

சிறப்பான வாழ்வு வாழ சேமிப்பு மிக அவசியமாகும். சிறுவயதிலிருந்தே சேமிப்பு பழக்கத்தைக் கற்றுக் கொள்ள வேண்டும். சேமிப்பு இல்லாத வாழ்க்கை கூரை இல்லாத வீட்டுக்குச் சமம்.

நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட வாழ்க்கைக்கு சேமிப்பு அவசியம். இன்றைய சேமிப்பே நாளைய பாதுகாப்பாக அமையும். இக்கட்டுரையில் சேமிப்பு பற்றி காண்போம்.

சேமிப்பின் அவசியம்

எதிர்காலப் பயன்பாட்டிற்கும் எதிர்காலத்தின் பாதுகாப்பிற்கும் சேமிப்பு அவசியமாகும். அவசரத் தேவைகள் ஏற்படுகின்ற போது சேமிப்பு அவசியமாகின்றது. திடீரென உருவாக்கின்ற மருத்துவத் தேவைக்கும் சேமிப்பு இன்றியமையாதாக ஆகின்றது.

வாழ்வில் முன்னேற சேமிப்பு அவசியமாகின்றது. வாழ்வில் நிம்மதியாகவும்⸴ சவால்களைச் சமாளித்து மகிழ்வாக வாழவும் சேமிப்பு அவசியமாகும்.

சேமிப்பு பழக்கவழக்கமும் வாழ்க்கைப் பாதுகாப்பும்

மனித வாழ்வானது இன்ப⸴ துன்பம் நிறைந்ததாகும். பல பிரச்சினைகள் நிறைந்ததே மனித வாழ்வாகும். வாழ்வில் பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து அதிலிருந்து மீள்வதற்குப் ஏதுவான வழி இருக்கும் என்றால் அது சேமிப்பு மட்டுமே.

சேமிப்பால் வாழ்வில் பாதுகாப்பினை உணர முடியும். அன்றாடத் தேவை முதல் ஆடம்பர தேவை வரை பணத்திலேயே தங்கியுள்ளது. இதனால் தான் “பணம் இல்லாதவன் பிணம்ˮ என்று கூறுவர். உயிர்காக்கும் மருத்துவச் சேவையும் இன்று வியாபாரமாகவே பார்க்கப்படுகின்றது.

எனவே நமது உயிரைக் காத்துக் கொள்ள பணம் தேவைப்படுகின்றது. இவ்வாறாக வாழ்வில் அனைத்துப் பாதுகாப்பிற்கும் பணம் என்பது இன்றியமையாததாகின்றது. எனவே சேமிப்பு வாழ்வினைப் பாதுகாத்துக் கொள்ளும் ஒரு வழியாகும்.

சேமிக்கும் வழிகள்

சேமிப்பினை மேற்கொண்டு பயன் பெற பல வழிகள் உண்டு. ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சிக்கனமாக வாழும் போது சேமிப்பு பழக்கம் அதிகரிக்கும். வங்கிகளில் பணத்தைச் சேமிக்கலாம். வரவுக்கு மீறிச் செலவினைச் செய்தல் கூடாது.

உண்டியலில் தினமும் சிறு தொகைப் பணத்தை போட்டு சேமிக்கலாம். ஆடம்பரச் செலவு செய்யாமல் தேவைக்கு ஏற்ப செலவு செய்து கொள்ளும் போது சேமிப்பதற்கு வழி ஏற்படுகின்றது.

சேமிப்பின் பயன்கள்

நாம் சேமிக்கும் பணம் நமக்கு வட்டியுடன் கிடைக்கும். சேமிப்பானது வீட்டுக்கு மட்டுமன்றி நாட்டிற்கும் பயன்படுகின்றது. அவசர தேவைகளின் போது சேமிப்போ உதவுகின்றது. மருத்துவத் தேவைகள் ஏற்படும் போது சேமிப்பு பணம் நமக்கு உறுதுணையாக அமையும்.

திடீர் விபத்துகள் ஏற்படும் போதும் சேமிப்பு உதவுகின்றது. நமக்குத் தேவையான மற்றும் விரும்பிய பொருட்களை வாங்கிக் கொள்ள முடியும். பணத்திற்காக யாரிடமும் கையேந்தி நிற்க வேண்டிய நிலை ஏற்பட மாட்டாது.

முடிவுரை

சேமிப்புப் பழக்கமானது எச்சமயத்திலும் நம் வாழ்வில் பாதுகாப்பாக அமையும். எதிர்கால வாழ்வை ஒளிமயமாக்கும். இளமையில் சேமிப்பு முதுமையில் கைகொடுக்கும். அடுத்தவரை நம்பி வாழாமல் வாழ சேமிப்பு உதவும்.

எனவே சிறுவயதிலிருந்தே சேமிப்புப் பழக்கத்தை கற்றுக் கொள்வோம் வாழ்வில் நலம் பெறுவோம்.

You May Also Like:

சிறுதுளி பெருவெள்ளம் கட்டுரை

சிக்கனமும் சிறுசேமிப்பும் கட்டுரை