சாமை அரிசி பயன்கள்

samai arisi benefits in tamil

இந்தியாவில் அதிகளவில் விளைவிக்கப்படுகின்ற சிறுதானியங்களில் ஒன்றாகச் சாமை காணப்படுகின்றது. இது சிறுதானியங்களிலே மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். சாமையை ஆங்கிலத்தில் ‘Little Millet’ என அழைப்பர்.

சாமை தானியமானது 5000 ஆண்டுகளுக்கு முன்னரே தெற்கு ஆசியக் கண்டத்தில் தோன்றியது. எனினும் இந்தியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளின் பல பிரதேசங்களில் கி.மு காலத்திலிருந்தே இந்த தானியம் பயிரிடப்பட்டு வந்துள்ளது.

இந்த தானியம் 30 செ.மீ முதல் 1 மீட்டர் வரை உயரமாகவும், நேராகவும் வளரக் கூடியது. இதன் இலையானது ஒரே அளவாக ஒடுங்கி நீளமாகவும், மேற்பரப்பில் சுணை போன்ற முடிகளும் கொண்டு காணப்படும்.

சாமையில் அதிகப்படியான சுகாதார நன்மைகள் உள்ளன. இது எல்லா வயதினருக்கும் ஏற்றதாகும்.

சாமை அரிசி பயன்கள்

1. உடலுக்கு வலிமையைப் பெற்றுத் தரும். பொதுவாகச் சிறுதானியங்கள் உடலுக்கு வலுவூட்டக் கூடியவை ஆகும். அதில் முக்கியமானதாகவும் முதன்மையானதாகவும் சாமை விளங்குகின்றது. சாமையில் அதிகப்படியான கால்சியம் உள்ளது. இதனால் எலும்புகள் வலு பெறுகின்றன. மேலும் உடலின் தசைகளையும் வலிமை பெறச் செய்கிறது.

2. மாரடைப்பு வராமல் தடுக்கும். சாமை உடலுக்கு நன்மை தரும் கொழுப்புகளை உள்ளடக்கியுள்ளது. இதனால் இதயம் சம்பந்தமான நோய்களிலிருந்து பாதுகாத்து, மாரடைப்பு வராமல் தடுக்கும்.

3. சளி, தடிமன், ஆஸ்துமா போன்ற நுரையீரல் தொந்தரவுகளை சீர்செய்ய உதவும். இதற்கு சாமையை உணவாக எடுத்துக் கொண்டால் நல்ல பலன் கிடைக்கும்.

4. சாமையில் உள்ள ஃபோலிக் அமிலம், மூளை வளர்ச்சிக் குன்றிய குழந்தைகள் உருவாகாமல் தடுக்கும்.

5. உடல் பலத்தைப் பேணும். இதில் உள்ள புரதச்சத்து மற்ற தானியங்களை விட அதிகம் என்பதால் குழந்தைகளுக்கும், விளையாட்டு வீரர்களுக்கும் சாமைச் சோறு, சாமை இடியாப்பம், சாமை புட்டு, சாமை ரொட்டி, கேக், பிஸ்கட் என்று பலவிதமாக செய்து கொடுத்தால் பலன் கிடைக்கும்.

6. எலும்பு முறிவு மற்றும் எலும்பு சம்மந்தமான நோய்களைக் குணமாக்க உதவுகின்றது. சாமையில் உள்ள இயற்கையான சுண்ணாம்பு சத்தானது எலும்பு தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வாகுவதுடன் எலும்புகளுக்கு இடையில் இருக்கும் தசைகள் வலிமை பெறவும் உதவுகிறது.

7. மலச்சிக்கலைப் போக்கும் சாதாரண அரிசியை விட நார்ச்சத்துக்கள் ஏழு மடங்கு அதிகம் உள்ளது. இதன் காரணமாக மலச்சிக்கலை சீர்செய்ய உதவும்.

8. ஆண்மைக் குறைபாட்டை நீக்கும். ஆண்களின் இனப்பெருக்க விந்தணுவை அதிகரிக்க செய்யும் ஆற்றலானது சாமை அரிசியில் உள்ளதால் ஆண்மை குறைபாட்டையும் நீக்குவதோடு, தாதுப் பொருட்களை உடலில் அதிகரிக்கச் செய்து உயிரணுக்களின் எண்ணிக்கையைக் கூட்டுகிறது.

9. சக்கரை நோயைக் குணப்படுத்தும். சாமையில் உள்ள நார்ச்சத்தானது சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க பெரும் உதவியாக இருக்கிறது. சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சாமை அரிசியை சமைத்து உண்டால் நன்மை கிடைக்கும்.

10. இரத்த சோகையைக் குணப்படுத்தும். சாமையில் உள்ள இரும்புச்சத்து இரத்த சோகை உள்ளவர்களுக்கு சிறந்த மருந்தாக அமையும்.

11. காய்ச்சலின் போது ஏற்படுகின்ற நாவறட்சியை போக்கும்.

12. வயிறு தொடர்பான அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வாக அமையும் சாமை அரிசியை உணவாக எடுத்துக் கொண்டால் இப்பிரச்சினைகளில் இருந்து விடுபடலாம்.

You May Also Like:
கற்பூரவள்ளி இலையின் பயன்கள்
கிவி பழம் நன்மைகள்