சமூக நீதி என்றால் என்ன

samuga neethi enral enna

சமூக நீதியானது சமூகத்தின் பல அம்சங்சங்களில் நியாயத்தையும் சமத்துவத்தையும் ஊக்குவிக்கின்றது. அதாவது சமமான பொருளாதாரம், கல்வி மற்றும் பணியிட வாய்ப்புக்களை ஊக்குவிக்கின்றது. சமூக நீதியானது சமூகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் பொருந்தும்.

அதாவது இனம், வர்க்கம், சாதி மற்றும் பாலினம் போன்றவற்றில் சமூக நீதி பேணப்பட வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமூக நீதியானது தனிநபர் மற்றும் சமூகங்களின் பாதுகாப்பிற்கு மிகவும் முக்கியமானதாகும்.

சமூக நீதி என்றால் என்ன

சமூக நீதி என்பது சமூகத்தில் வளங்கள், வாய்ப்புகள் மற்றும் சலுகைகள் ஆகியவற்றின் நியாயமான மற்றும் சமமான பிரிவைக் குறிக்கிறது. நீதி என்பது நியாயத்தின் கருத்துஆகும். சமூக நீதி என்பது சமூகத்தில் வெளிப்படும் நியாயம் ஆகும்.

அதில் சுகாதாரம், வேலைவாய்ப்பு, வீடு மற்றும் பலவற்றில் நேர்மையும் அடங்கும். சமூக நீதியுள்ள சமூகத்தில், மனித உரிமைகள் மதிக்கப்படுகின்றன. மற்றும் பாகுபாடு வளர அனுமதிக்கப்படாது. “சமூக நீதி” என்ற சொற்றொடர் 1780களில் முதன்முதலில் பயன்படுத்தப்பட்டது.

தொழில்துறை புரட்சி வீழ்ச்சியடைந்த நிலையில், அமெரிக்க சட்ட அறிஞர்கள் இந்த வார்த்தையை பொருளாதாரத்தில் பயன்படுத்தினர். இன்று அதன் பயன்பாடு உலகளாவிய ரீதியில் பெரும்பாலான நாடுகளில் கணிசமாக விரிவடைந்துள்ளமையை காணக் கூடியதாகவுள்ளது.

சமூக நீதியின் கொள்கைகள்

சமூக நீதி சமூகத்தில் பேண நான்கு தூண்கள் கட்டப்பட வேண்டும். அதாவது மனித உரிமைகள், அணுகல், பங்கேற்பு மற்றும் சமத்துவம் என்பவையே அவை நான்குமாகும். இந்த நான்கு கோட்பாடுகள் இல்லாமல் சமூக நீதியை அடைய முடியாது.

நான்கு கொள்கைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் போது சமூக நீதியுள்ள சமுதாயம் சாத்தியமாகும். சமூக நீதிக்கும் மனித உரிமைகளுக்கும் இடையிலான தொடர்பு பல ஆண்டுகளாக வலுப்பெற்று வருகின்றது.

பலர் “சமூக நீதி” மற்றும் “மனித உரிமைகள்” ஆகியவற்றை ஒன்றுக்கொன்று மாற்றாகப் பயன்படுத்துகின்றனர். ஆனால், ஒன்று இல்லாமல் மற்றொன்று செழிக்க முடியாது என்பதே உண்மை.

ஒரு சமூகம் நீதியாக இருக்கும்போது, அது அனைவரின் மனித உரிமைகளையும் பாதுகாக்கிறது மற்றும் மதிக்கிறது.

ஒரு சமூகம் மனித உரிமைகளை மதித்து ஊக்குவிக்கும் போது, சமூக நீதி செழிக்கும். மனித உரிமைகள் உலகளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளதால் இந்த இணைப்பு அவசியம் ஆகும்.

மேலும் ஒரு நியாயமான சமூகம் தங்குமிடம், உணவு, மருத்துவம் மற்றும் கல்வி போன்ற அத்தியாவசியமான அணுகலைச் சார்ந்துள்ளது. ஒரு சமூகம் புதுமைகளில் முதலீடு செய்வது அல்லது புதிய வாய்ப்புகளை உருவாக்குவது மட்டும் போதாது.

சமூகமும் அணுகலுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். பாலினம், இனம் அல்லது வர்க்கம் போன்ற காரணிகளின் அடிப்படையில் பாகுபாடு பேணப்பட்டால் அது தனிநபர்கள், சமூகங்கள் மற்றும் ஒட்டுமொத்த சமூகத்திற்கும் துன்பத்திற்கு வழிவகுக்கிறது.

சமூகத்தில் ஒருவரது அல்லது குறிப்பிட்டதொரு சமூகத்தின் கருத்தை மட்டும் மதித்து நடத்தல் சமூக நீதியைப் பாதிக்கின்றது.

செல்வந்தர்கள், அரசியல்வாதிகள், உயர்பதவி வகிப்பவர்கள் போன்றவர்களால் பாதிக்கப்படுபவர்களது குரல் சமூகத்தில் மௌனிக்கப்படுகின்ற நிலையையே அதிகம் காணப்படுகின்றது.

இந்நிலை மாறி சமூகத்தில் அனைவரது குரலும் ஒலிக்கும் போதே சமூக நீதியை சிறப்பாக பேண முடியும்.

மேலும் சமூக நீதிக் கொள்கையில் மற்றுமோர் முக்கிய அம்சமாக சமத்துவம் விளங்குகின்றது. சமூகத்தில் சமத்துவம் போணப்படும் போதுதான் எல்லோருக்கும் எல்லாம் கிடைப்பதற்கான வாய்ப்பு ஏற்படும்.

Read more: சமூகம் என்றால் என்ன

இட ஒதுக்கீடு வாயிலாக சமூக நீதி கட்டுரை