சந்திர கிரகணம் என்றால் என்ன

santhira kiraganam in tamil

எண்ணற்ற அதிசயங்களை வான்வெளி தாங்கி நிற்கின்றது. இதில் கிரகண நிகழ்வும் ஒன்றாகும். வானியல் சார்ந்த நிகழ்வுகளில் மிகப் பிரதானமாக அமைவது சந்திர கிரகணம் ஆகும்.

சூரியன் பூமி நிலவு ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும்போது கிரகணங்கள் நிகழ்கின்றன. ஆண்டுதோறும் சராசரியாக 7 கிரகணங்கள் வரை நிகழும். ஒவ்வொரு ஆண்டும் இரண்டு அல்லது ஐந்து சந்திர கிரகணம் நிகழும்.

முழு சந்திர கிரகணமானது 30 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் வரை நீடிக்கும். ஒரு நபர் சந்திர கிரகணத்தை பூமியின் எந்தப் பகுதியிலிருந்தும் காண முடியும்.

சந்திர கிரகணத்தின்போது சந்திரனை அடையும் சூரிய ஒளி பூமியின் வளிமண்டலத்தின் வழியாக பயணிப்பதால் நிலவு சிவப்பு நிறமாக மாறுகிறது.

சந்திர கிரகணம் என்றால் என்ன

சூரிய குடும்பத்திலுள்ள அனைத்துக் கோள்களும் நீள்வட்டப் பாதையில் சுற்றி வருவதைப் போல நிலவும் பூமியை 29 1/2 அரை நாட்களுக்கு ஒருமுறை பூமியை நீள்வட்டப் பாதையில் சுற்றிவரும்.

ஆனால் சுற்றிவரும் பாதை கொஞ்சம் சாய்வாக இருக்கும். இப்படிப்பட்ட சாய்வான பாதையில் தான் பூமியும் சூரியனைச் சுற்றி வருகின்றது.

எப்போதும் பூமி தன்னைத் தானே சுற்றிக் கொண்டு வரும் போது சூரியன் படாத ஒரு பக்கத்தில் கண்டிப்பாகப் பூமியின் நிழல் உருவாகும். அப்படி உருவாகும் நிழலை நிலவு எப்போதும் கடப்பதில்லை.

காரணம் நிலவு சாய்வாகப் பூமியைச் சுற்றுகின்றது என்பதனாலாகும். இப்படி நிலவு பூமியின் நிழல்ப் பகுதிக்கு வரும்போது பூமியின் நிழல் நிலவின் மீது விழும். அதே சமயத்தில் சூரியனின் ஒளியும் நிலாவின் மீதுபடும்போது நமக்குத் தெரிவதுதான் சந்திரகிரகணம் ஆகும்.

சுருக்கமாகக் கூறுவதனால் சந்திர கிரகணம் என்பது பூமி சூரியனுக்கும், நிலாவுக்கும் இடையில் வரும்போது பூமியில் இருக்கும் எமக்கு சந்திரன் தெரிவதில்லை. இதனையே நாம் சந்திர கிரகணம் என்கின்றோம்.

அதாவது சூரிய ஒளியால் ஏற்படக்கூடிய பூமியின் நிழலுக்குள் நிலா கடந்து செல்லக் கூடிய நிகழ்வு எனலாம்.

இது சூரியன், பூமி, நிலா மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும்போதுதான் சாத்தியமாகும். இதனால் சந்திர கிரகணம் பௌர்ணமி நாளில் மட்டுமே நடைபெறும்.

நிலவு மறைப்பின் வகைகள்

நிலவின் இடம் மற்றும் அதன் சுற்றுப் பாதையைப் பொறுத்து நிலவு மறைப்பின் வகையும் அது நீடிக்கும் கால அளவும் வேறுபடும். நிலவு மறைப்பானது மூன்று வகைப்படுகின்றது.

  1. புறநிழல் நிலவு மறைப்பு
  2. பகுதி நிலவு மறைப்பு
  3. நடு நிலவு மறைப்பு

என்பவையே அவை மூன்றும் ஆகும்.

புறநிழல் நிலவு மறைப்பு என்பது புவியின் புறநிழல் வழியாக நிலவின் ஒரு பகுதி கடந்து செல்லும் போது ஏற்படுகிறது.

பகுதி நிலவு மறைப்பு என்பது நிலவின் ஒரு பகுதி மட்டும் கருநிழலிற்குள் நுழைவதால் ஏற்படும் நிகழ்வாகும்.

நிலவானது புவியின் கருநிழலிற்குள் முழுமையாக கடந்து செல்லும் போது, முழுமையான நிலவு மறைப்பு ஏற்படுகிறது.

நடு நிலவு மறைப்பு என்பது புவியின் நடு நிழலிற்குள் நிலவு கடந்து செல்லும் போது ஏற்படுகிறது. இது அரிதாக ஏற்படும் நிகழ்வாகும்.

Read more: சூரிய கிரகணம் என்றால் என்ன

கரிநாள் என்றால் என்ன