பாசறை என்றால் என்ன

pasarai in tamil

பாசறையானது சங்ககாலத்தில் மட்டுமன்றி இன்றும் கள வீரர்களுக்கு முக்கியமான ஒன்றாக உள்ளது. நம் முன்னோர்கள் வீரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தவர்களாவர்.

வீரமிகு மன்னர்கள் பல போர்களை முன்னெடுத்துச் சென்று வெற்றியும் கண்டுள்ளனர். இவர்களின் போர் நடவடிக்கைகளுக்குப் பாசறைகள் முக்கியமானவையாகக் காணப்பட்டன. இதனைச் சங்ககாலப் பாடல்கள் தெளிவுபடுத்துகின்றன.

இன்று பாசறையானது பல துறைகளிலும் உள்ளது. அத்தோடு அவை பல பாசறை அமைப்புக்களை நிறுவிச் செயற்பட்டு வருகின்றமையையும் காண முடிகின்றது. பாசறை அமைப்புக்கள் தமது நோக்கங்களையும், பணிகளையும் முன்னெடுத்துச் செல்கின்றன.

பாசறை என்றால் என்ன

பாசறை என்பது ஏதேனும் ஒரு பணிக்காக கூட்டாக திட்டமிட்டு இயங்கும் இடமாகும்.

பா என்றால் பிரிவு, பாசறை என்பது பிரிந்து சென்று ஒரு குறிப்பிட்ட பணிக்காக உழைக்கும் இடம் என்பதால் பாசறை என்று அழைக்கப்படுகின்றது.

முல்லைப்பாட்டில் குறிப்பிடப்படும் பாசறை பற்றிய கருத்துக்கள்

பத்துப்பாட்டுள் ஒன்றாகிய முல்லைப்பாட்டில் பாசறையின் அமைப்பு (24-28), அரசனுக்கு அமைத்த பாசறை (43-44), பாசறையின் நாற்சந்தியில் நிற்கும் யானையின் நிலை (29-36), பாசறையில் வீரர்களின் அரண்கள் (37-42), பாசறையில் வெற்றி முழக்கம் (77-79) போன்றவை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளன.

பாசறை திரும்புதல்

இந்திய குடியரசு தின விழாக் கொண்டாட்டத்தின் நிறைவாக “படைகள் பாசறை திரும்புதல்” நிகழ்வு கொண்டாடப்படுகின்றது.

பாசறை திரும்புதல் என்பது குடியரசு நாள் அணிவகுப்பில் கலந்துகொண்ட முப்படை வீரர்களும் தங்கள் முகாமிற்கு திரும்பும் நிகழ்வே “பாசறை திரும்புதல்” எனப்படும்.

குடியரசு நாள் கொண்டாட்டங்கள் நிறைவைக் குறிக்கும் இந்த நிகழ்ச்சியானது ஆண்டுதோறும் ஜனவரி 29 ஆம் திகதி நடைபெறும்.

இந்நிகழ்ச்சியில் முப்படைகளான ராணுவம், கடற்படை, விமானப்படை மற்றும் மத்திய ஆயதக் காவல் படையினர் பங்கேற்பர். “சாரே ஜகான் சே அச்சா” என்ற மெட்டுடன் நிகழ்ச்சி நிறைவடையும்.

Read more: மகர ராசி குணங்கள்

பல்லி விழும் பலன்