கல்வெட்டு என்றால் என்ன

kalvettu in tamil

தற்காலத்தில் நாம் பல வழிகளிலும் ஆவணங்களை பாதுகாக்க முடிகின்றது. ஆனால் மன்னர் காலத்திலும், பிரித்தானியர் நம்மை ஆள முற்பட்ட காலத்திலும் பத்திரப்பதிவுகள் கிடையாது.

பெரும்பாலும் அக்காலத்திலேயே திருக்கோயில்களில் உள்ள மதில்களில் தான் அதை பொறித்து வைத்த செய்திகள்தான் கல்வெட்டுகளாக நமக்கு இன்று கிடைக்கின்றன.

கல்வெட்டுக்கள் மட்டும் அன்று பொறிக்கப்படா விட்டால் இன்று வரலாறு என்ற சொல்லுக்கே பொருள் தெரியாமல் போயிருக்கும். வரலாற்றுச் செய்திகளின் அடிப்படையே கல்வெட்டுக்கள் தான்.

கல்வெட்டை நன்கு அறிந்தவர்கள் தான் உண்மையான வரலாற்றுச் செய்திகளை கொடுக்க முடியும். இவை தவிர பல நூல்களும் உள்ளன. அவை யாவற்றையும் அகச்சான்றுகள் என்று அழைப்பர்.

இதுபோன்ற அகச்சான்றுகள் காவியங்களிலும், கவிதைகளிலும் இருக்கின்றன. அவற்றையும் சேர்த்தே வரலாறு எழுதப்படுகின்றது.

பண்டைய தமிழில் வேந்தர்களின் அரசியல் முறைகளும், ஆட்சியும், சமுதாய வாழ்க்கையும், சமநிலையும், நாகரீகமும், கல்வி, கைத்தொழில், வாணிப முதலியவையும் அந்நாளில் எவ்வாறு இருந்தது என்பதனை கல்வெட்டுக்கள் மூலம் நன்றாக அறியலாம்.

கல்வெட்டுக்கள் இந்தியாவில் எவ்விடம் தோன்றியுள்ளன என நாம் ஆராய்ந்து பார்ப்போமானால்.

பகைவர் முன்நின்று ஆற்றலோடு போர் புரிந்து உயிர் துறந்த வீரர்களை நினைவு கூறுதல் பொருட்டு அவர்களை இழந்த இடங்களில் அல்லது அவர்களுடன் தொடர்புடைய இடங்களில் நடுகல் ஒன்றை அமைத்து விழா நடத்தி பாராட்டுதல் முற்காலத்தில் தமிழர்களது பழக்கமாக இருந்தது. இதனை பழமையான நூலான தொல்காப்பியத்தில் இருந்து அறியலாம்.

“காட்சி கால்கோள் நீர்ப்படை
நடுகல்
சீர்த்தகு சிறப்பிற் பெரும்படை
வாழ்ந்தலென்
றிருமூன்று வரையிற்
கல்லொடு புணர்”

எனும் வரிகளின் மூலம் அறியலாம்.

நாடுகளின் மீது போர்க்களத்தில் இறந்த மன்னரின் பெயரும் பெருமைகளும் அறியப்படும் வழக்கம் பண்டைய காலத்தில் இருந்தது என்பதைக் கடைச்சங்கப் புலவர்களின் பாடல்களில் அறியலாம்.

“நல்லமர் கடந்த நாணுடை
மறவர்
பெயரும் வீடும் எழுதி
யதர் தொறும்
பீலி சூட்டிய பிறங்கு நிலை
நடுகல்”

என அகநானூற்றுப் பாடல் அடிகளும் உணர்த்துகின்றன.

இவ்வாறு பகைவர் முன்னின்று அஞ்சாமல் போர் புரிந்து புகழுடன் இறந்த வீரர்களின் நடுகற்களில் மேல் பொறிக்கப்பட்ட அவர்களின் பெயரும், வீரமும் நம் நாட்டின் முதலில் தோன்றிய தமிழ் கல்வெட்டு என்பது ஐயமின்றி தெளிவாகின்றது.

தமிழ்நாட்டின் சமணமுனிவர்கள் தங்கி ஆங்காங்கே சங்கங்கள் அமைத்து நம் சமயத்தை ஆண்டு பரப்பி வந்தனர்.

அம் முனிவர்கள் உண்ணா நோன்பிருந்து உயிர் தீர்த்த இடங்களில் அவர்கள்பால் அன்பு கொண்ட அரசியல் தலைவர்கள், அரசர்கள், அவர்களது மாணவர்கள் அன்னாரின் பெயர்களையும், அவர்களது அருஞ் செயல்களையும் பொறித்து வைத்திருக்கின்றனர். இத்தகைய கல்வெட்டுக்களை மலை பாறைகளிலும், குன்றுகளிலும், குகைகளிலும் பார்க்கலாம்.

நெஞ்சிக்கு அடுத்துள்ள திருநாதர் கோட்டிலும், திருநெல்வேலி மாவட்டத்திலும் உள்ள ஆணை மலையிலும், திருச்சிராப்பள்ளிக் குன்றிலும் அக்கால கல்வெட்டுக்களை இக்காலத்திலும் காணலாம்.

கல்வெட்டு என்றால் என்ன

கல்வெட்டு என்பது நிகழும் காலத்தில் நிகழ்ந்த செய்திகள், வரலாறுகளை எடுத்துரைக்கும் வண்ணம் திருக்கோவில்களில் சுற்றியுள்ள இடங்களிலும், பிற முக்கிய இடங்களிலும் கற்களில் பொறிக்கப்படுவது தான் கல்வெட்டு ஆகும்.

அதாவது, பண்டைக் காலத்தில் நீண்ட காலம் அழியாதிருக்க வேண்டும் எனக் கருதப்பட்ட செய்திகள் கற்களில் வெட்டப்பட்டன. இவ்வாறு கல்லில் பொறிக்கப்பட்ட செய்தியே கல்வெட்டு எனப்படுகின்றது.

கல்வெட்டுக்களை நாம் நன்றாக நோக்கின் ஸ்வஸ்திஸ்ரீ என்ற மங்கல வாசகத்துடன் பின்னர் அக்கல்வெட்டு தோன்றிய காலம் குறித்தும் கல்வெட்டுச் செய்திகளும் வரும்.

Read more: இதிகாசம் என்றால் என்ன

செப்பேடுகள் என்றால் என்ன