கம்யூனிசம் என்றால் என்ன

communism endral enna

அறிமுகம்

அரசறிவியல் மற்றும் சமூக அறிவியல் ரீதியில் பொதுவுடமை ஒரு உளவியல், சமூகவியல், அரசறிவியல், பொருளாதாரக் கருத்தியலாகும்.

பொதுவுடமைக் கொள்கையில் கூறப்படுவது யாதெனில் ஏற்றத்தாழ்வில்லாத சமூகம் மற்றும் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கப்பெற வேண்டும் என்பதுதான் இதனது கொள்கையாகும்.

இக் கொள்கையை உலகறியப் பரப்பியவர்கள் கார்ல் மார்க்ஸ் மற்றும் அவரது நண்பனான ஏங்கல்ஸ் ஆவார்கள்.

மேலும், இவ்வியக்கம் சமூகப் பொருளாதார ரீதியில் அனைவருக்கும் சமமாக பொருளைப் பகிர்ந்தளிப்பதையும் மற்றும் வகுப்புவாதத்தை இல்லாது ஒழித்தலையும் முக்கிய கோட்பாடுகளாகக் கொண்டுள்ளது.

பொதுவுடமையானது மாக்சியம், அரசியல்வாதம் போன்ற சிந்தனைகளை உள்ளடக்கியுள்ளது.

முதலாளித்துவத்தில் இரு சமூக வகுப்புக்கள் உள்ளன. ஒன்று பாட்டாளி வர்க்கம் மற்றயது முதலித்துவ வர்க்கம் ஆகும்.

பாட்டாளி வர்க்கமானது வாழ்வதற்காகவே உழைத்தேயாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளவர்களும், சமூகம் ஒன்றில் பெரும்பாலான எண்ணிக்கையைக் கொண்டிருப்பவர்களும் ஆவர்.

முதலாளி வர்க்கம் என்பது பாட்டாளி வர்க்கத்தின் உழைப்பையும், உற்பத்தியையும் தனிப்பட்ட ரீதியில் உரிமைகோரி அதன் மூலம் இலாபம் ஈட்டும் சமூகத்தின் சிறுபாண்மையினர் ஆவர்.

இவ்விரு தரப்பினருக்குமிடையிலான முரண் சமூகத்தில் ஏற்றத்தாழ்வை ஏற்படுத்துகின்றன. கிடைக்கின்ற உற்பத்தி மற்றும் சொத்துக்களை சமூகத்தின் பொதுவுடமையாக்குவதை இம்முரணுக்கான தீர்வாக கம்யூனிச சித்தாந்தம் முன்வைக்கின்றது.

கம்யூனிசம் என்றால் என்ன

மக்கள் அனைவரும் சமம், அனைத்து வளங்களும் அனைவருக்கும் பொது, ஒன்றாக உழைத்து வரும் பலன்களை சமமாக பகிர்ந்து கொள்ள வேண்டும், அம்மக்கள் குழு தங்களை தாங்களே நிர்வாகம் செய்துகொள்ளும் இந்த வாழ்க்கை முறைக்கு கம்யூனிசம் என்று பெயர்.

மேலும், உரிடைக்காகப் போராடுவது கம்யூனிசம் எனலாம். அதிகாரத்தை முடக்கக் கூடிய அரசியல் கம்யூனிசம் ஆகும். அதாவது கம்யூனிசம் என்றால் பொதுவுடமைக் கொள்கை என்பதாகும்.

பொதுவுடமை என்னும் சொல்லாடலானது பிரான்ஸ் அறிஞரும், எழுத்தாளருமான விக்டர் ரீ கூபேயால் 1777ல் எழுதப்பட்ட நூல் ஒன்றில் முன்மொழியப்பட்டது.

இந் நூலில் ஒருவர் விரும்புகின்ற வாழ்க்கை முறையை பொதுமை என்று முன்மொழிகின்ற விக்டர் பொருளாதார மற்றும் பௌதீக உற்பத்திகளை பொதுமைச் சமூகத்தின் சகல அங்கத்தவர்களிடையேயும் பகிர வேண்டும் என்றும் இதனால் ஒவ்வொருவரினதும் உழைப்பின் மூலமும் கிடைக்கும் பலனை சமமாகப் பகிர்ந்து கொள்ளலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

கார்ல் மார்க்ஸ்

1818 மே மாதம் 5ஆம் திகதி ஜேர்மனியில் நடுத்தர வர்க்கக் குடும்பத்தில் கார்ல்மார்க்ஸ் பிறந்தார். 18 ஆம் நூற்றாண்டின் இறுதியில் நிகழ்ந்த பிரன்ஸ் புரட்சியின் அதிர்வுகள் ரயின் மாகாணத்தில் மார்க்ஸ் பிறந்த காலத்திலும் சூடு தணியாமலும் மெல்லதிர்வுகளைப் பரப்பியவாறுதான் இருந்தது.

கார்ல்மார்க்சின் தந்தையும், வழக்கறிஞருமான கென்றிமார்க்சம் ஓரளவு இத்தாக்கத்திற்கு உட்பட்டவராய் முற்போக்காளராக இருந்தார்.

மக்களுக்காக வாழ வேண்டும் என்ற விருப்பம் மார்க்சின் பள்ளிப் பருவம் முழுவதுமே வேரூன்றியிருந்தது. பொதுவுடமைச் சித்தாந்தத்திற்கு செயல் வடிவம் கொடுத்த மாபெரும் புரட்சியாளராக மார்க்ஸ் விளங்குகின்றார்.

கார்ல் மார்க்ஸ் தனது நண்பனான ஏங்கல்சுடன் இணைந்து தொழிலாளர் நலனை மேம்படுத்த திட்டம் தீட்டினார். தங்கள் உரிமைகளை எப்படிப் பெறுவது என்பதை விளக்கும் துண்டுப் பிரசுரங்களை பொதுவுடமை அறிக்கை என்ற பெயரில் இருவரும் வெளியிட்டனர்.

அதில் முதலாளித்துவ சமூதாய அமைப்பினை புரட்சிகளால் உடைத்தெறியுமாறு கார்ல்மார்க்ஸ் தொழிலாளர்களுக்கு அறிவுறுத்தினார்.

முன்னேறிய முதலாளித்துவ அபிவிருத்திகளின் அடிப்படையில் சமூகவுடைமையும், பொதுவுடமையும் கட்டியெழுப்பப்படலாம் என்பதை மார்க்ஸ் முன்மொழிந்தார்.

இன்றைய உலகில் ஒரு தொழிலாளியின் நலன் காக்கப்படும் ஒவ்வொரு கணமும் மார்க்ஸ்க்குத்தான் நன்றி சொல்கின்றது வரலாறு.

You May Also Like :
மொழி என்றால் என்ன
சூழல் என்றால் என்ன