செம்மொழியான தமிழ் மொழியாம் கட்டுரை

Semmozhiyana Tamil Mozhi Katturai In Tamil

இந்த பதிவில் “செம்மொழியான தமிழ் மொழியாம் கட்டுரை” பதிவை காணலாம்.

நம் மொழியின் சிறப்பினை மங்கவிடாது பேணிக் பாதுகாப்பதே தமிழர்களாகிய நமது தலையாய கடமையாகும்.

செம்மொழியான தமிழ் மொழியாம் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. செம்மொழி அந்தஸ்தை அடைவதற்கு தமிழ் மொழி கடந்து வந்த பாதை
  3. செம்மொழிக்கான தகுதிகள்
  4. தனித்தியங்கும் தமிழ்
  5. தமிழ்மொழியின் சிறப்புகள்
  6. முடிவுரை

முன்னுரை

கருத்துகளைப் பரிமாறிக் கொள்ள உதவும் கருவியே மொழி. இந்தவகையில் உலகின் மிகத் தொன்மையான மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்றாகும்.

செந்தமிழ் என்று தொல்காப்பியர் காலத்திலேயே அழைக்கப்பட்ட மொழி தமிழ் மொழியாகும். இக்கட்டுரையில் செம்மொழியான தமிழ் மொழியாம் பற்றி காணலாம்.

செம்மொழி அந்தஸ்தை அடைவதற்கு தமிழ் மொழி கடந்து வந்த பாதை

தமிழ்மொழி செம்மொழி என்ற பெருமையை அடைய பல்வேறு பாதைகளில் பயணித்து வந்து இருக்கிறது. பல்வேறு அறிஞர்கள் குரல் கொடுத்து வந்ததுடன் பல மாநாடுகளில் தீர்மானம் இயற்றப்பட்டது.

கி.பி. 1856ல் தமிழ் உயர்தனிச் செம்மொழி என அறிஞர் கால்டுவெல் பிரகடனம் செய்தார். 1902ல் பரிதிமாற் கலைஞர் தமிழ் செம்மொழி என்கிற கட்டுரையை எழுதினார். 1918ல் தமிழை செம்மொழியாக அறிவிக்கக்கோரி மறைமலை அடிகள் தலைமையில் தீர்மானம் இயற்றப்பட்டது.

1919-1920ல் கரந்தையில் நடந்த தமிழ்ச் சங்கத்தில் செம்மொழி கோரிக்கை தீர்மானம் முன்வைக்கப்பட்டது. அதன் பிறகு, 1988ல் அண்ணாமலைப் பல்கலைக்கழத்தில் தமிழை செம்மொழியாக்க அறிஞர்கள் தீர்மானம் இயற்றினர்.

மேலும்இ 1995, 1998, 2002 ஆண்டுகளில் நடந்த தமிழ் மாநாடுகளிலும் தமிழை செம்மொழியாக அறிவிக்கக்கோரி தீர்மானம் இயற்றப்பட்டது.

தமிழறிஞர்களின் தொடர் முன்னெடுப்புகளால், 2004ம் ஆண்டு ஜுன் 6ம் திகதி தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டது.

செம்மொழிக்கான தகுதிகள்

செம்மொழிக்கான தகுதிகள் பதினோரு விதிகள் உள்ளன. அவையாவன

  1. தொன்மை
  2. தனித்தன்மை
  3. பொதுமைப் பண்பு
  4. நடுவு நிலைமை
  5. தாய்மைப் பண்பு
  6. பண்பாட்டுக் கலை அறிவு பட்டறிவு வெளிப்பாடு,
  7. பிற மொழித் தாக்கமில்லா தன்மை
  8. இலக்கிய வளம்
  9. உயர் சிந்தனை கலை
  10. இலக்கியத் தனித்தன்மை
  11. மொழிக் கோட்பாடு

தனித்தியங்கும் தமிழ்

தனித்தன்மை என்பது ஒரு மொழி மற்ற மொழிகளின் செல்வாக்கு இன்றித் தனித்து இயங்கும் தன்மையைக் குறிக்கும். தமிழ் மொழியோ வேறு எம்மொழியின் உதவியும் இல்லாமல் தனித்துப் பேசுவதற்குரிய தன்மை பெற்றது.

பிற மொழிச் சொற்கலப்பு இல்லாமல் தூய தமிழில் பேசவும் எழுதவும் முடியும். ஆனால் உலகில் உள்ள பல மொழிகள் இப்படி அமையவில்லை. எனவேதான் தமிழைத் தனித்தியங்கும் மொழி என்று கூறினர்.

தமிழ் மொழியின் சிறப்புகள்

தமிழ் மொழியானது 2000 ஆண்டுகள் பழமையானது மட்டுமல்லாமல் ஒவ்வொரு காலகட்டத்திற்கு ஏற்ப தன்னை தகவமைத்து வருகிறது. பழமை மட்டுமன்றி இனிமையும் கொண்டது.

உலக அளவில் போட்டிபோடக் கூடிய இலக்கியங்கள் இன்றும் தமிழில் வெளியாகி வருகிறது. இலக்கிய வளமும், இலக்கண நுட்பமும் கொண்ட மொழியாகத் திகழ்கின்றது.

முச்சங்கம் அமைத்து மொழி வளர்த்த பெருமை தமிழ் மொழிக்குண்டு. பிற மொழிகளைக் காட்டிலும் தமிழ் மொழியைக் கற்பது எளிதாகும்.

முடிவுரை

உலகில் பழமையான மொழிகள் என்று கூறப்படும் அரபிக், பெர்சியன் ஆகிய மொழிகளுக்குக் கூட செம்மொழி அந்தஸ்து வழங்கப்படவில்லை.

ஆனால் நம் தாய் மொழியாம் தமிழ் மொழி செம்மொழிச் சிறப்பு பெற்றுள்ளது. நம் மொழியின் சிறப்பினை மங்க விடாது பேணிக் பாதுகாப்பதே தமிழர்களாகிய நமது தலையாய கடமையாகும்.

You May Also Like :
தமிழ் மொழியின் தனித்தன்மை கட்டுரை
மொழியும் பண்பாடும் கட்டுரை