உயர்தனில் செம்மொழியாம் தமிழ்மொமியில் பல இலக்கியங்கள் படைக்கப்பட்டுள்ளன.
தமிழர்களின் அழகுணர்வு மலரும் மணமும் போலக் கவிதையுடன் இரண்டறக் கலந்துள்ளது. கவிதையின் இயங்காற்றல்தான் நடை மொழிக்குள் இருக்கும் ஒரு வலிமைமிக்க ஆற்றல். கவிதைக்காக இலக்கியத்துக்காகத் தன்னை வெளிப்படுத்திக் கொள்வதே நடை எனப்படுகின்றது.
பாட்டு அல்லது கவிதையின் நடையியல் கூறுகளில் ஒலிக்கோலங்களும் சொற்களின் புலமும் தொடரியல் போக்குகளும் மிக முக்கியமானவை ஆகும்.
கவிதையானது அதாவது எழுத்துக்கள் சேர்ந்து சொற்களாகின்றன. அந்தச் சொற்கள் ஒன்றோடொன்று தொடுத்து தொடையாகின்ற அந்தத் தொடை என்பது தொடராக மாற்றப்படுகின்றது. அந்தத் தொடர்களின் அமைப்பு முறையில் இசைதான் கவிதையினுடைய இயங்காற்றல் என்கின்றோம். இதைத் தொல்காப்பியம் பிற இலக்கியங்களும் கூட இவ்வாறே கருதுகின்றன.
எந்தத் தொன்மையான மொழியும், சமிக்ஞையிலிருந்தும் இசையிலிருந்தும் தான் தொடங்குகின்றன.
மொழி என்பது ஆரம்ப காலத்திலேயே கண்டுபிடிக்கவில்லை. ஆரம்பத்தில் மனிதன் தன் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வதற்கு சைகைகளை பயன்படுத்தினான் இதையே சமிக்ஞை என்கின்றோம்.
தன்னுடைய கருத்துக்களை மற்றவர்களுக்கு தெரிவிப்பதற்கு சைகைகள் மூலமாகவே தெரிவித்துக் கொண்டு இருந்தான். பின்னர் அவற்றிற்குப் ஒலி வடிவம் கொடுக்க ஆரம்பித்தான். அவ்வாறு ஒலி வடிவம் கொடுத்து அதன்பின் அந்த மொழிக்கு எழுத்து வடிவம் கொடுக்க ஆரம்பித்தான். அப்போது பேச்சு மொழியானவை எழுத்து வடிவமாக மாறியது.
இவ்வாறு மொழி சார்ந்த கவிதை இசையோடும் இசைக் கவியோடும் தான் பிறக்கின்றது.
ஓசையும் (ஓசை என்பது எழுத்துக்களின் உச்சரிப்பு முறை) பொருளும் இணைந்து கலை வடிவம் கொள்கின்றன.
அதாவது தமிழ்மொழியில் ஒரே ஒலியுடைய சொற்கள் அதிகம் உண்டு. ஆனால் அந்த ஒலிகளை எவ்வாறு நாம் உச்சரிக்கவேண்டும் என்று சொல்லக்கூடியதும், இந்த ஒலியுடைய சொற்களுக்கு என்ன பொருள் என்பதை உணர்ந்து பயன்படுத்துவதும் இவ்வாறு ஓசையும் பொருளும் இணைந்து கலை வடிவம் கொள்கின்றன.
Table of Contents
ஒலிப்பின்னல் என்றால் என்ன
ஒலிப்பின்னல் என்பது ஆங்கிலத்தில் Sound Texture எனப்படுகின்றது. தொன்மையான மொழிகள் யாவும் சமிக்ஞையிலிருந்தும் இசையிலிருந்தும் தான் தொடங்குகின்றன. இசையும் பொருளும் இணைந்து கலை வடிவம் கொள்கின்றன. இதையே அந்தப் பனுவலின் – பாடலின் ஒலிப்பின்னல் எனப்படுகின்றது.
புறநானூற்றுப் பாடலில் வன்மையான உணர்ச்சிகளைக் காட்டுகின்ற விதத்தில் க த ட ற முதலிய வல்லின மெய்கள் பிற மெல்லின இடையின மெய்களைக் காட்டிலும் அதிகமாக வருதலை அறிந்து கொள்ளலாம்.
சங்கப் பாடல்களில் ஒலிக்கோலம்
சங்க இலக்கியப் பாடல்கள் பலவற்றிலும் ஒலிக்கோலம் இடம்பெற்றிருப்பதனை நாம் காண முடிகின்றது. ஒலிக்கோலமானது சங்கப் பாடல்களில் முக்கியமான ஒரு பண்பாகக் காணப்படுகின்றது.
“கடந்தடு தானை மூவிருங் கூடி
உடன்றனிர் ஆயினும் பறம்பு கொளற்கரிதே”
எனும் வரிகளில் வல்லின க த ட ற என்ற வல்லின மெய்கள் உணர்ச்சியின் ஒலிக்கோலம் காணப்படுகின்றது.
“படாஅம் ஈத்த கெடாஅ நல்லிசைக்
கடாஅ யானைக் கலிமான் பேக”
சொற்களின் இடையில் அமைந்தள்ள உயிர் நெடில் எழுத்துகள் செய்யுளின் ஓசை நயத்தினை ஏற்படுத்த நீண்டு ஒலிக்கின்றன.
இவ்வாறாகச் சங்கப் பாடல்களில் ஒலிக்கோலங்கள் அமைந்துள்ளமையினைக் காண முடிகின்றது.
Read more: மொழி என்றால் என்ன