ஐம்பெரும் காப்பியங்கள் யாவை

aimperum kappiyangal in tamil

இலக்கிய வளம் மிகுந்த மொழி தமிழ் மொழியாகும். இம் மொழியில் பல இலக்கியங்கள் தோன்றியுள்ளன. எட்டுத்தொகை, பத்துப்பாட்டு போன்றவற்றை அடுத்து முழு வரலாற்றைச் சொல்லும் தொடர்நிலைச் செய்யுள்கள் உருவாயின. அவை காப்பியங்கள் என அழைக்கப்பட்டன.

இவை ஐம்பெரும் காப்பியங்கள் ஐஞ்சிறு காப்பியங்கள் என்ற 2 பிரிவினை கொண்டவையாக காணப்படுகின்றன.

அறம், பொருள், இன்பம், வீடுபேறு என்பவற்றோடு ஒரு ஒப்பில்லாத் தலைவனையும் தலைவியையும் கொண்டு அவர்களின் முழு வரலாற்றையும் கூறுவது ஐம்பெருங்காப்பியம் எனப்படும். ஐம்பெரும் காப்பியங்கள் பற்றி இப்பதிவில் காண்போம்.

ஐம்பெரும் காப்பியங்கள் யாவை

  1. சிலப்பதிகாரம்
  2. மணிமேகலை
  3. சீவக சிந்தாமணி
  4. வளையாபதி
  5. குண்டலகேசி

ஐம்பெரும் காப்பியங்கள் ஆசிரியர் பெயர்

சிலப்பதிகாரம்இளங்கோவடிகள்
மணிமேகலைசீத்தலைச் சாத்தனார்
சீவக சிந்தாமணிதிருத்தக்கதேவர்
வளையாபதிபெயர் தெரியவில்லை
குண்டலகேசி நாதகுத்தனார்

ஐம்பெரும் காப்பியங்கள் அணிகலன்கள்

சிலப்பதிகாரம்சிலம்பு என்பது மகளிர் அணியும் காலணி – கண்ணகியின் சிலம்பால் அதிகரித்த வரலாறு
மணிமேகலைஆடை நழுவாமலிருக்க மகளிர் இடுப்பில் அணியும் அணி – இத்தொடர் அன்மொழித்தொகையாக அதனை அணிந்த பெண்ணை உணர்த்தும். இந்தப் பெயர் இடப்பட்ட பெண்ணின் வரலாறு.
குண்டலகேசிகுண்டலம் என்பது மகளிர் அணியும் காதுவளையம். – குண்டலமும் கூந்தல் அழகும் கொண்டவள் குண்டலகேசி – குண்டலகேசி என்பவளின் வரலாற்றை கூறும் நூல்.
வளையாபதிவளையல் அணிந்த பெண் வளையாபதி – வளையாபதியின் வரலாறு கூறும் நூல்.
சீவகசிந்தாமணிசிந்தாமணி என்பது அரசன் முடியில் (கிரீடத்தில்) பதிக்கப்படும் மணிக்கல். – சீவகனை மணிமுடியாக்கி எழுதப்பட்ட வரலாறு

சிலப்பதிகாரம் வேறு பெயர்கள்

  • தமிழின் முதல் காப்பியம்
  • உரையிடையிட்ட பாட்டைச் செய்யுள்
  • முத்தமிழ்க்காப்பியம்
  • முதன்மைக் காப்பியம்
  • பத்தினிக் காப்பியம்
  • நாடகப் காப்பியம்
  • குடிமக்கள் காப்பியம் (தெ.பொ. மீனாட்சிசுந்தரனார்)
  • புதுமைக் காப்பியம்
  • பொதுமைக் காப்பியம்
  • ஒற்றுமைக் காப்பியம்
  • ஒருமைப்பாட்டுக் காப்பியம்
  • தமிழ்த் தேசியக் காப்பியம்
  • மூவேந்தர் காப்பியம்
  • வரலாற்றுக் காப்பியம்
  • போராட்ட காப்பியம்
  • புரட்சிக்காப்பியம்
  • சிறப்பதிகாரம் (உ.வே.சா)
  • பைந்தமிழ் காப்பியம்

மணிமேகலை வேறு பெயர்கள்

  • மணிமேகலைத் துறவு
  • முதல் சமயக் காப்பியம்
  • அறக்காப்பியம்
  • சீர்திருத்தக்காப்பியம்
  • குறிக்கோள் காப்பியம்
  • புரட்சிக்காப்பியம்
  • சமயக் கலைச் சொல்லாக்க காப்பியம்
  • கதை களஞ்சியக் காப்பியம்
  • பசிப்பிணி மருத்துவக் காப்பியம்
  • பசு போற்றும் காப்பியம்

சீவக சிந்தாமணி வேறு பெயர்கள்

  • மணநூல்
  • முக்திநூல்
  • காமநூல்
  • மறைநூல்
  • முடிபொருள் தொடர்நிலைச் செய்யுள்(அடியார்க்கு நல்லார்)
  • இயற்கை தவம்

குண்டலகேசி வேறு பெயர்கள்

  • குண்டலகேசி விருத்தம்
  • அகல கவி

ஐம்பெரும் காப்பியங்கள் விளக்கம்

சிலப்பதிகாரம்

தமிழ் மொழியில் தோன்றிய முதல் பெருங்காப்பியம் சிலப்பதிகாரம் ஆகும். சிலப்பதிகாரத்தின் ஆசிரியர் இளங்கோவடிகள் ஆவார். சிலப்பதிகாரத்தில் பெண்ணுக்கு முதன்மையளிக்கும் வகையில் காப்பியத் தலைவியை முதலில் அறிமுகம் செய்கின்றார்.

காப்பியத்தில் அறம், பொருள், இன்பம் மூன்றும் இடம் பெறுகின்றன. இயல், இசை, நாடகம் என்ற மூன்று தமிழையும் பயன்படுத்தியுள்ளார். அதனால் சிலப்பதிகாரம் முத்தமிழ்க் காப்பியம் எனப் போற்றப்படுகிறது.

மணிமேகலை

சிலப்பதிகாரத்தை தொடர்ந்து எழுந்த காப்பியம் மணிமேகலையாகும். மணிமேகலை ஐம்பெரும் தமிழ் காப்பியங்களுள் ஒன்று. மணிமேகலைக் காப்பியத்தை இயற்றியவர் மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார்.

சிலப்பதிகாரத்தின் முப்பெரும் கதை மாந்தர்களாம் கண்ணகி, கோவலன், மாதவி மூவரில் கோவலன் மாதவி இருவருக்கும் பிறந்த ஒரே மகளே மணிமேகலை. இவளே மணிமேகலைக் காப்பியத்தின் தலைவி.

சீவக சிந்தாமணி

இது சோழர் காலத்தில் எழுதப்பட்டது. கி.பி. 9ம் நூற்றாண்டில் குணபத்தரன் எழுதிய உத்திரப்புராணத்தை அடிப்படையாகக் கொண்டெழுந்தது. திருத்தக்கதேவர் என்னும் சமண முனிவரால் இயற்றப்பட்ட இக்காப்பியம் சீவகன் என்பவனின் அக வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது.

திருத்தக்கதேவர் திருத்தகு முனிவர், திருத்தகு மகா முனிவர் என்று அழைக்கப் பெறுவார். இலக்கியச் சிறப்பு மிக்க இந்நூலில் 3145 பாடல்கள் உள்ளன. விருத்தம் என்னும் பாவகையால் பாடப் பெற்றது.

மணநூல், முக்தி நூல், காமநூல், இயற்கை தவம், முதல் விருத்தப்பா
காப்பியம், தமிழ் இலக்கிய நந்தாமணி முடி, பொருள் தொடர்நிலைச் செய்யுள் எனப் பல்வேறு பெயர்களைக் கொண்டு அழைக்கப்படுகின்றது.

வளையாபதி

இந்நூல் தற்போது வரை முழுமையாகக் கிடைக்கப் பெறவில்லை. நூலைப் போலவே நூல் ஆசிரியர் யார்? எந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர்? காப்பியத்தின் தலைவன் யார்? என்பதும் அறியப்படவில்லை.

வளையாபதி கதை இன்னதுதான் என்பது அறியப்படாத ஒன்று. இந்நூற் பாடல்கள் மொத்தம் 72 கிடைத்துள்ளன. அவற்றில் 66 பாடல்கள் 14 ஆம் நூற்றாண்டில் தோன்றிய புறத்திட்டிலும், 3 பாடல்கள் சிலம்பின் அடியார்க்கு நல்லார் உரையில் மேற்கோளாகவும்,

2 பாடல்கள் யாப்பருங்கலக்காரிகை எனும் இலக்கண நூலின் பெயர் தெரியாத ஓர் அறிஞனால் இயற்றப்பட்ட விருத்தியுரையில் மேற்கோளாகவும், இளம்பூரணரின் தொல்காப்பிய உரையில் மேற்கோளாகவும், எஞ்சிய 1 பாடல் நச்சினார்க்கினியர் உரையின் மேற்கோளாகவும் கிடைத்துள்ளது.

குண்டலகேசி

தமிழில் ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்றாகக் கருதப்படும் நூலான குண்டலகேசி பௌத்தம் சார்ந்த நூலாகும். 10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்நூலை எழுதியவர் நாதகுத்தனார் என்பவராவார்.

இதற்கு குண்டலகேசி விருத்தம் என்ற பெயருமுண்டு. இந்நூலின் முழுமையான பாடல்களாக 19 பாடல்கள் மட்டுமே கிடைத்துள்ளன.

இக்காப்பியத்தின் கருப்பொருளாக தன்னைக் கொல்ல முயன்ற கணவரைக் கொண்றுவிட்டு பிக்குணியாகி பொளத்த சமயத்தின் பெருமையை பரப்புவதில் ஈடுபட்ட வணிககுலப் பெண்ணான குண்டலகேசி எனும் பெண்ணிண் கதையைக் கூறுவதே ஆகும்.

You May Also Like :
சிலப்பதிகாரம் பற்றிய கட்டுரை
ஐம்பெரும் காப்பியங்கள் பற்றி கட்டுரை
ஐஞ்சிறு காப்பியங்கள் யாவை
மணிமேகலை காப்பியத்தின் சிறப்புகள்