“இளைச்சவனுக்கு எள்ளு கொளுத்தவனுக்கு கொள்ளு” என்ற பழமொழி உண்டு. இந்த பழமொழிக்கேற்ப எள்ளில் ஏராளமான சத்துக்கள் உண்டு. எலும்பு வளர்ச்சிக்கு உதவுவதுடன் நீரிழிவு நோயாளிகளுக்கும் உகந்தது.
உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் இதனை அடிக்கடி பயன்படுத்தி வந்தால் நன்மை கிடைக்கும். இப்படிப்பட்ட எள்ளு உருண்டை எப்படி செய்வது என தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது அல்லவா? இப்போது சுவையான எள்ளு உருண்டை செய்வது எப்படி என்று இந்தப் பதிவில் பார்க்கலாம் வாங்க!
Table of Contents
தேவையான பொருட்கள்
எள்ளு – ஒரு கப்
சர்க்கரை – ஒரு கப்
எள்ளு உருண்டை செய்முறை
மிதமான சூட்டில் அடுப்பை வைத்துக் கொள்ளவும். பின் அதில் ஒரு கடாயை வைத்து சூடாக்கிக் கொள்ளவும்.
அதில் எள்ளைப் போட்டு கைவிடாமல் நன்கு வறுத்து எடுத்துக் கொள்ளவும். பின்பு ஆறியதும் ஒரு மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும். பின்னர் அதில் கரும்பு சர்க்கரையை சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
பின் ஒரு தடவை கலந்து விட்டு தேவையான அளவில் உருண்டை பிடித்து எடுத்துக்கொள்ளவும்.
இப்போது சுலபமான மற்றும் சுவையான சத்துள்ள எள்ளு உருண்டை ரெடி!!!
Read more: ஜாங்கிரி செய்வது எப்படி