பயணங்கள் பலவகை கட்டுரை

payanangal palavagai katturai tamil

இந்த பதிவில் “பயணங்கள் பலவகை கட்டுரை” பதிவை காணலாம்.

நாளுக்கு நாள் மனிதனுடைய தேவையும் பயணங்களும் அதிகரித்த வண்ணமே உள்ளன எனலாம்.

பயணங்கள் பலவகை கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. பயணத்தின் தேவை
  3. தரைவழிப் பயணம்
  4. கடல்வழிப் பயணம்
  5. வான்வழிப் பயணம்
  6. முடிவுரை

முன்னுரை

முற்காலத்தில் மனிதன் தன்னுடைய பல்வேறு தேவைகளை பூர்த்தி செய்ய பயணங்களை மேற்கொண்டான். உணவிற்காக பல்வேறு இடங்களுக்கு கால்நடையாக இடம்பெயர்ந்தான். இதுவே பயணங்களின் ஆரம்பமாக இருந்தது.

இன்று தேவைகளை பூர்த்தி செய்ய மட்டுமன்றி பலகாரணங்களுக்காகவும் பயணங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இக்கட்டுரையில் பயணங்கள் மற்றும் அவற்றின் வகைகள் பற்றி காண்போம்.

பயணத்தின் தேவை

இன்றைய உலகில் மனிதர்கள் பலரும் பலவிதமான தேவைகளுக்காக பயணம் செய்கின்றார்கள்.

உதாரணமாக கல்வி, தொழில், விழாக்கள், பண்டிகைகள், சுற்றுலாக்கள் போன்ற வேறுபட்ட காரணங்களுக்காக மனிதன் உள்நாட்டிற்குள்ளேயோ அன்றி வெளிநாடுகளுக்கோ இன்று பயணித்து கொண்டிருக்கின்றார்கள்.

நாளுக்கு நாள் மனிதனுடைய தேவையும் பயணங்களும் அதிகரித்த வண்ணமே உள்ளன எனலாம்.

தரைவழிப் பயணம்

மனிதன் பயணம் மேற்கொள்ள தேர்ந்தெடுத்த முதல் வழி இதுவாகும். ஆரம்ப காலங்களில் கால்நடையாகவும்

பின்னர் சில்லு கண்டுபிடிக்கப்பட்டு மிதிவண்டிகள், மாட்டுவண்டில்கள், குதிரைவண்டில்கள், இருசக்கர வாகனம் என வளர்ச்சியடைந்த பயணம் மகிழூந்து, பேரூந்து, தொடர்வண்டி என்று உருவாகி பயணங்கள் இலகுவாக துவங்கின. தரைவழிப் பயணமே எளிய வகையான பயணமாகவும் கருதப்படுகின்றன.

கடல்வழிப் பயணம்

“முள்நீர் வழக்கம்” என்ற தொல்காப்பிய வரிகள் மூலம் பழங்கால தமிழ்ர்களுடைய கடல் வழிப்பயணத்தினுடைய தொன்மையானது புலனாக்கப்படுகின்றது.

முற்காலங்களில் வெளிநாடுகளுடனான வர்த்தக நடவடிக்கைகள் கடல் வழி கப்பல்கள் வாயிலாகவே இடம்பெற்றன. நாடுகாண் பயணிகள் கீழைத்தேய நாடுகளை வந்தடைய கடல்மார்க்கத்தையே பயன்படுத்தினர்.

இன்று அதிவேக கப்பல்கள், நீர்மூழ்கிகள், விசைப்படகுகள் என நீர்வழி போக்குவரத்து வளர்ச்சி கண்டுள்ளது.

வான்வழிப் பயணம்

பறவையினை கண்டு வியந்த மனிதனின் ஆசையின் விளைவால் கண்டுபிடிக்கப்பட்டது தான் வான் வழிப்பயணமாகும்.

“ரைட் சகோதரர்ரகள்” உலகின் முதல் விமானத்தை வடிவமைத்தனை தொடர்ந்து உலகின் எல்லா மூலைகளிற்கும் மனிதன் மிகவேகமாக பறந்து செல்ல முடிந்தது.

மிக விரைவானதும் சௌகரியம் நிறைந்ததாகவும் விமான பயணங்கள் விளங்குகின்றன. சில மணி நேரங்களில் உலகின் எந்த பகுதிக்கும் செல்ல இவையே பங்காற்றுகின்றன.

முடிவுரை

இன்றைய நவீன உலகில் மனிதனின் மிக விரைவான முன்னேற்றத்துக்கு போக்குவரத்து மிகவும் முக்கிய பங்கை வழங்குகின்றது. மனித உழைப்பு மற்றும் நேரம் என்பன மிச்சமாக்கப்படுகின்றது.

சாத்தியமற்ற பல விடயங்களை இன்று மனிதன் சாதித்து காட்ட போக்குவரத்து துறையினுடைய அபரிமிதமான வளர்ச்சி மிக முக்கிய காரணமாக உள்ளது என்றால் யாராலும் மறுத்து விட முடியாது.

You May Also Like :
சுற்றுலா செல்வதால் ஏற்படும் நன்மைகள்
இளைஞர்கள் பற்றிய கட்டுரை