சங்க காலத்தில் வெண்பா, ஆசிரியப்பா, வஞ்சிப்பா, கலிப்பா என்ற நால்வகை பாக்கலிலும் அகமாகவும், புறமாகவும் பொருள் கொண்டு இயற்றப்பட்ட சங்கப் பாடல்களுக்கு பின்னர் இலக்கியங்களாகி, காப்பியங்களாகி, சிற்றிலக்கியங்களாகி, சந்தக் கவிதைகளாகி, பொதுக் கவிதையாகி தற்போது நவீன கவிதையில் வந்து நிற்கின்றன.
உரைநடையின் வளர்ச்சியானது சிறுகதை, கட்டுரை புதினம் என வளர்ச்சி அடைந்து வந்துள்ளன.
Table of Contents
உரைநடையின் அணிநலன்கள் கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- உவமையும், உருவகமும்
- இணை ஒப்பு
- எதுகை மோனை
- இலக்கணை
- எதிரிணை இசைவு
- முடிவுரை
முன்னுரை
பேசினால் உரையாடல் அதனை எழுதினால் உரைநடை என குறிப்பிடப்படும். அதாவது ஓரளவுக்கு பேசுவது போல் எழுதப்படும் ஓர் எழுத்து வடிவமே உரைநடை எனப்படுகின்றது.
இந்த உரைநடைகளிலும் சொல்ல வந்த விடயத்தை அழகுபடுத்தி கூறுவதற்காகவும், இலக்கிய நயத்துடன் கூறுவதற்காகவும் இந்த அணிகலன்கள் பயன்படுத்தப்படுகின்றன.
உவமையும் உருவகமும்
உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதற்கு ஏற்ற ஓர் அணிகலனாகவே இந்த உவமையணி காணப்படுகின்றது.
அதாவது ஒரு பொருளின் சிறப்பினை இன்னொரு பொருளோடு ஒப்பீடு செய்வதனை காண முடியும் எடுத்துக்காட்டாக “நிலைக்கண்ணாடிகள் போல் நீர் நிலைகள்” என குறிஞ்சி மலர் உரைநடையில் குறிப்பிடப்பட்டிருப்பதனைக் காணலாம்.
ஒரு பொருளைப் போல் இன்னொரு பொருள் உருவகித்துக் கூறப்படுதல் உருவகம் எனப்படும். அதாவது இலக்கியங்களில் உணர்வுகளை தூண்டுவதில் உவமையை விட உருவகமே மிகவும் முக்கியமானதாகும்.
எடுத்துக்காட்டாக “முகமாகிய நிலவில் வியர்வை ஆகிய முத்துக்கள் துளிர்ந்தன” என குறிஞ்சி மலரில் குறிப்பிடப்பட்டிருப்பதன் ஊடாக முகம் நிலவாகவும் வியர்வை துளிகள் முத்துக்களாகவும் உருவாக்கப்பட்டுள்ளமையைக் காணலாம்.
இணை ஒப்பு
உவமைக்கும் பொருளுக்கும் இடையே உவமை உருபு இல்லாமல் வந்தால் அதை எடுத்துக்காட்டு உவமையணி ஆகும். இதனை உரைநடையில் பயன்படுத்தும் போது இணை ஒப்பு எனப்படுகின்றது.
வா.ராமசாமியின் “ஊர் கூடிச் செக்கு தள்ள முடியுமா? , புரோகிதருக்காக அமாவாசை காத்திருப்பதில்லை” என்ற வரிகளில் இதற்கு எடுத்துக்காட்டாகும்.
எதுகை மோனை
தங்களுடைய கருத்துக்களை இனிய ஓசை இன்பத்துடன் கூறுவதற்கு பயன்படுவதே இந்த எதுகை மோனை ஆகும். இரண்டாம் எழுத்து ஒன்றிவரின் எதுகை எனவும் முதல் எழுத்து ஒன்றி வரேன் மோனை எனவும் குறிப்பிடப்படுகின்றது.
சொல்லின் செல்வர் இரா.பி சேதுப்பிள்ளை அவர்களின் “தென்றல் அசைந்து வரும் தென்தமிழ் நாட்டில் அமைந்த திருக்குற்றாலம் மலைவளம் படைத்த பழம் பதியாகும். அம்மலையில் கோங்கும் வேங்கையும் ஓங்கி வளரும். குறவரும் முல்லையும் நறுமணம் கமலும். கோலமயில் தோகை விரித்தாலும்…” எ ன்ற உரைநடை வரிகளில் எதுகை மோனையைக் காணலாம்.
இலக்கணை
ஒரு கேட்காத பொருளை கேட்பது போலவும் பேசாத பொருள் ஒன்றை பேசுவது போலவும் கூறுவது செய்யுளின் மரபாகும். இதனை உரைநடையில் பயன்படுத்துவோமாயின் அது இலக்கணை எனப்படும்.
வி. கல்யாண சுந்தரனாரின் “சோலையில் புகுவேன் மரங்கள் என்னை கூப்பிடும். விருந்து வைக்கும். ஆல், என் விழுதை பார். அந்த அரசுக்கு இது உண்டோ என்று கேட்கும். என்ற உரைநடைப்பகுதி இலக்கணைக்கு சிறந்த உதாரணமாகும்.
எதிரிணை இசைவு
சொல்ல வந்து விடயத்தை எதிரும் புதிருமான முரண்படும் கருத்துக்களை அமைத்து எழுதுவது எதிரினை இசைவோ எனப் எனப்படும்.
அதாவது குடிசைகள் ஒரு பக்கம் கோபுரங்கள் மறுபக்கம், பசித்த வயிறுகள் ஒரு பக்கம் புளிச்செய்தக்காரர்கள் மறுபக்கம், மெலிந்த எலும்புக்கூடுகள் ஒரு பக்கம் பெருத்த தொந்திகள் மறுபக்கம் என ப.ஜீவானந்தம் எழுதிய உரைநடை இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.
முடிவுரை
உலகில் எல்லா மொழிகளை விடவும் தமிழ் மொழி கவிநயம் மிக்கதாக காணப்படுவதற்கு அணிகலன்களே மிகவும் முக்கியமானதாக அமைந்துள்ளன.
அந்த வகையில் உரைநடைகளில் மேலே குறிப்பிட்ட அணிகலன்களோடு சேர்த்து உச்ச நிலை, முரண்பாட்டு மெய்மை, சொல்முரண் போன்ற அணிகலன்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. எனவே அணிகலன்கள் உரைநடைகளுக்கும் உதவியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
You May Also Like :