ஐ வகை திணைகளுள் ஒன்றாக உரிப்பொருள் காணப்படுகின்றது. இது ஐந்திணைகளுள் முக்கியத்துவமிக்க ஒன்றாக காணப்படுகின்றது.
Table of Contents
உரிப்பொருள் என்றால் என்ன
உரிப்பொருள் என்பது சொற்களினால் உணரப்படும் மூன்று பொருள்களில் ஒன்றே உரிப்பொருள் ஆகும். அதாவது முதற்பொருள், கருப்பொருள் போன்றன இவற்றின் பிற வகைகளாக காணப்படுகின்றன.
அதாவது மக்கள் நிகழ்த்தும் ஒழுக்கமே உரிப்பொருளாகும். ஐந்திணை ஒழுக்கங்கள் பற்றிய செய்யுள்களுக்கு உரிய பாடுபொருளாக உரிப்பொருள் அமைந்துள்ளது. அகத்திணை பாடல் என்ன திணையை சார்ந்தது என தீர்மானிப்பதாக உரிப்பொருள் காணப்படுகின்றது.
உரிப்பொருளின் முக்கியத்துவம்
உரிப்பொருளானது அகப்பொருள் பாடல்களில் பிரதானமாக இடம்பெற்று வரக்கூடியதாக காணப்படுகின்றன. அதாவது உரிப்பொருளானது நிலத்திற்குரிய பொருளை சுட்டுவதாக காணப்படுகின்றது.
உரிப்பொருள் இன்றி ஒரு பாடலானது அமையப்பெறாது என்பதே நிதர்சன உண்மையாகும். அதாவது முதற்பொருள், கருப்பொருள் இன்றி பாடலானது அமையப்பெற்று காணப்படலாம்.
ஆனால் உரிப்பொருள் இன்றி பாடலானது அமையப்பெறாது. அக்கால மக்களுடைய ஒழுக்கத்தை பற்றியதாக உரிப்பொருள் அமையகின்றபோது எம்மால் இலகுவாக அது பற்றிய தெளிவினை பெற்றுக்கொள்ள முடியும்.
உரிப்பொருளும் ஐந்திணைகளும்
குறிஞ்சியும் புணர்தலும்
தலைவனும் தலைவியும் தனிமையில் ஒருவரை ஒருவர் கூடி மகிழும் நிலையினை சுட்டிக்காட்டுவதாக புணர்தல் காணப்படுகின்றது.
முல்லையும் இருத்தலும்
முல்லைத்திணையில் இருத்தல் என்பது தலைவன் தலைவி மற்றும் தலைவன் கூறிய பருவம் வரை தன் கற்புத்திறம் காத்துக்கொள்வதோடு அப்பருவம் வந்தவுடன் தன் தலைவனோடு இன்புற இல்லத்தில் இருக்கும் நிலையே இருத்தலாகும்.
மருதமும் ஊடலும்
ஊடலில் தலைவன் மாறுபட்டு போவதென்பது இயல்பானதாகும். இவ்வாறு மாறுபட்டு போகின்ற தலைவனை தன் வழிப்படுத்துவதற்காக தலைவி கையாலும் கருவியே ஊடலாகும். அதாவது வயல் நிலம் வாழ்வுக்கு வேண்டிய பொருள் தந்து வளம் சேர்ப்பது போலவே ஊடலும் இன்பதிற்கு மேலும் இன்பமூட்டி வாழ்வில் புத்தெழில் சேர்க்கிறது.
நெய்தலும் இரங்கலும்
இரங்கலானது கடல்மேல் சென்ற தலைவன் வராமையினால் அவன் நிலை குறித்து தலைவிக்கு ஏற்படும் ஏக்கமாக இரங்கல் காணப்படுகின்றது.
பாலையும் பிரிதலும்
பாலையில் பிரிதல் என்பதானது கூடிய பின்னும் பிரிதலும், இல்லத்திலிருந்து பிரிதலும் பிரிவின் நிமித்தமாக இரங்கல் ஏற்படும் காரணத்தால் பிரிவு என்பது பாலையாக காணப்படுகின்றது. இவ்வாறாகவே ஐந்திணைகளுள் உரிப் பொருளானது அமைந்து காணப்படுகின்றது.
உரிப்பொருளின் விளக்கம்
தொல்காப்பியர்
புணர்தல், பிரிதல், இருத்தல், இரங்கல், ஊடல் இவற்றின் நிமித்தம் என்று இவை தோறும் காலத்திணைக்கு உரிப்பொருளே.
நம்பியகப்பொருள் விளக்கம்
புணர்தலும் பிரிதலும் இருத்தலும் ஊடலும் இரங்கலும் இவற்றின் நிமித்தமும் என ஆங்கு எய்திய உரிப்பொருள்.
உரிப்பொருளில் தலைவன் தலைவியின் சிறப்புக்கள்
உரிப் பொருளானது பிரதானமாக தலைவன் தலைவிக்கு இடையேயான நிகழ்வுகளை சுட்டுவதாக அமைந்து காணப்படுகின்றது. அதாவது தலைவன் தலைவி இருவருக்குமிடையிலான புரிதல்களை விளக்குவதில் உரிப்பொருளானது சிறப்பு பெற்று காணப்படுகின்றது.
தலைவனானவன் தலைவியை கூடி மகிழ்வதில் இருந்து பிரிந்து செல்தல் வரையான நிகழ்வுகளை விளக்க கூடியதாகவே உரிப்பொருளானது அமைந்து காணப்படுகின்றது. இந்த உரிப்பொருளின் ஊடாக சிறந்த முறையில் தலைவன் தலைவியின் சிறப்புக்களானது வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
அதாவது தலைவனுடன் மகிழ்வுறும் தலைவி, தலைவனின் பிரிவை தாங்கி கொள்ள முடியாத தலைவியின் நிலை என மிகவும் முக்கியமான விடயங்களினை உள்வாங்கியதாக இந்த ஐந்திணைகளும் காணப்படுகின்றன.
உரிப்பொருளானது ஐந்திணைகளில் மிக முக்கியமானதொன்றாக காணப்படுவதோடு மாத்திரமல்லாது சிறந்த ஒழுக்கங்களை குறிப்பிடக்கூடியனவாகவும் காணப்படுகின்றது.
Read More: இதர தொழில் என்றால் என்ன