சிட்டா என்றால் என்ன

chitta enral enna

பல பட்டாக்களின் ஒரு தொகுப்பாக சிட்டாவானது காணப்படுகின்றது. கிராம நிர்வாக நில உடமையை குறிக்கும் முக்கிய ஆவணமாக சிட்டா காணப்படுகிறது.

சிட்டா என்றால் என்ன

சிட்டா என்பது யாதெனில் ஒருவருக்கு குறிப்பிட்ட கிராமத்தில் எவ்வளவு நிலம் இருக்கிறது என்பதனை குறிப்பிடுவதனை சிட்டா எனலாம். சிட்டாவில் சொத்தின் உரிமையாளர் பெயர், பட்டா எண்கள், என்ன வகையான நிலம், நிலத்திற்கான தீர்வை போன்ற விபரங்கள் காணப்படுகின்றன.

அதாவது குறிப்பிட்ட நிலத்தின் பரப்பளவு யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது என்பது தொடர்பான விடயங்களை உள்ளடக்கிய வருவாயத்துறை ஆவணமே சிட்டா ஆகும்.

சிட்டா அடங்கல்

சிட்டா அடங்கல் என்பது ஒரு கிராமத்தில் உள்ள மொத்த சர்வே எண்கள் அடங்கிய பதிவேடுகளையே சிட்டா அடங்கல் எனலாம்.

இந்த சிட்டா அடங்களினுள் குறிப்பிடப்பட்டுள்ள சர்வே எண்களுக்குரிய நிலம் யாருடைய பெயரில் உள்ளது, பட்டா எண், நிலத்தின் தன்மை போன்ற விடயங்களை உள்ளடக்கியதாக காணப்படுகிறது.

சிட்டா பராமரிப்பு

சிட்டா பராமரிப்பானது கிராம நிர்வாக அலுவலகரால் மேற்கொள்ளப்படுகிறது. அதாவது நில உடமையானது மாற்றமடையும் சந்தர்ப்பங்களில் வட்டாட்சியார் அலுவலகத்திலிருந்து வரப்பெற்ற நில உரிமையானது மாற்ற உத்தரவின்படி தக்க மாறுதல் பெற்று, உத்தரவு எண், உத்தரவு நாள் போன்றவற்றை பதிவு செய்து கிராம நிர்வாக அலுவலகரின் ஒப்பம் மற்றும் நாள் இடப்பட்டு காணப்படும்.

தற்போது தமிழ் நாட்டில் வருவாயத்துறையின் நில உடமை ஆவணங்கள் அனைத்தும் கணிணிமயமாக்கப்பட்டு காணப்படுகிறது.

மேலும் நில உடமையாளர்கள் தங்களின் நில விபரங்களின் பதிவுகள் பற்றிய விபரங்களை தெரிந்துகொள்ள விரும்பினால் கிராம நிர்வாக அலுவலகரால் வழங்கப்படாமல் வட்டாட்சியார் அலுவலகத்திற்கு உரிய கட்டணங்களை செலுத்துவதன் மூலமாக அது பற்றிய விபரங்களை பெற்றுக்கொள்ள முடியும்.

பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை வரிசை கிரமமாக புதிதாக உரிய மாற்றங்களுடன் எழுதி வட்டாட்சியாரின் ஒப்புதலுக்கு பின் கிராம நிர்வாக அலுவலகரால் பராமரிக்கப்படுகிறது.

சிட்டாவின் முக்கியத்துவம்

குறிப்பிட்ட கிராமத்தில் ஒருவருக்கு இருக்கும் நிலம் மற்றும் அதனுடைய விபரங்களை அறிந்து கொள்வதற்கும் சிட்டாவானது முக்கியத்துவம் பெறுகின்றது.

மேலும் சொத்து பரிமாற்றமானது இரு நபர்களுக்கிடையேயான பரிமாற்றமாக காணப்படாது ஒரு நாட்டினுடைய பொருளாதார வளர்ச்சியின் முக்கிய அளவுகோளாகவும் பார்க்கப்படுகின்றது.

எனவே பொருளாதார ரீதியில் சொத்து பரிமாற்றங்களை ஆவணப்படுத்தும் செயன்முறை மிக முக்கியத்துவமானதொன்றாகவே காணப்படுகிறது.

ஒரு நிலத்தின் பரப்பளவு அது யாருடைய கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது என்பது தொடர்பான விடயங்களை அனைவரும் அறிந்து கொள்வதற்கு மிக முக்கியத்துவம் வாய்ந்ததொன்றாகவே சிட்டா காணப்படுகிறது.

சிட்டா மற்றும் பட்டா மூலம் சொத்து வாங்குபவர்கள், சொத்து வாங்குவதற்கு முன் சொத்துரிமையாளர்களின் உரிமையினை சரிபார்த்துக் கொள்ள முடியும்.

மேலும் அங்கீகரிக்கப்படாத ஒப்பந்தங்கள், மோசடியான பரிவர்த்தனைகள் போன்றவற்றில் இருந்து நிலப் பதிவேடுகளை பாதுகாத்து கொள்ள முடியும்.

சிட்டாவில் தேவையான அனைத்து ஆவணங்களும் வழங்கப்பட்டிருப்பதனால் வங்கிகளானவை வீட்டு கடன் விண்ணப்பங்களை எளிதாக அங்கீகரிக்கின்றன. சிட்டாவானது வெளிப்படையாக ஓர் அரசு ஆவணமாக காணப்படுகிறது. இதன் காரணமாக இலகுவாக ஆவணங்களின் தன்மையை பெற்றுக் கொள்ள முடியும்.

பட்டா மற்றும் சிட்டாவானது ஒரு பட வடிவத்தில் உருவாக்கப்பட்டு வழங்கப்படுவதால் சொத்து உரிமையாளர்கள் தங்கள் நிலம் தொடர்பான விடயங்கள் பற்றி ஒரே நேரத்தில் அறிந்து கொள்வதற்கு துணைபுரிகின்றது.

சிட்டாவானது சொத்துரிமை பற்றிய விபரங்களை உள்ளடக்கிய சிறந்ததொரு ஆவணமாக காணப்படுகிறது.

Read More: மொழிபெயர்ப்பு என்றால் என்ன

நிலக்கிழார் என்றால் என்ன