உண்மையினை கண்டறியும் ஒரு பகுதியினை நாம் ஆய்வாக கொள்ளலாம். அந்தவகையில் ஆய்வானது இன்று பல கிளைகளாக வளர்ச்சியடைந்து வருகின்றமை முக்கியமானதொன்றாகும். இன்று ஆய்வின் மூலம் பல்வேறு சிறந்த விடயங்கள் கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
Table of Contents
ஆய்வு என்றால் என்ன
ஆய்வு எனப்படுவது அறிவை தேடுவதாகும். அதாவது அவதானிக்கப்பட்ட தரவுகளை வகைப்படுத்தல் மற்றும் நிரூபித்தல் போன்ற முறைமைகளை ஒழுங்குபடுத்துவதற்கு வழிவகுக்கின்ற ஒரு செயல்முறையே ஆய்வாகும்.
ஆய்வு என்பது ஒரு பிரச்சினைக்கான தகவல் மற்றும் கருத்துக்களை உண்மையாகவும் யதார்த்தபூர்வமானதாகவும், அறிவுபூர்வமானதாகவும் இணங்காண்பதே ஆய்வு ஆகும்.
ஆய்வின் அவசியம்
ஒரு பிரச்சினை ஏற்படுகின்ற போது அப்பிரச்சினைக்கான தீர்வுகளை கண்டறிவதற்கு ஆய்வானது அவசியமாகின்றது. புதிய விடயங்கள் மற்றும் கோட்பாடுகள், விதிகள் போன்றவற்றை சிறந்த முறையில் நிறுவுவதற்கும் அதனூடாக பல புதிய விடயங்களை பெற்றுக் கொள்வதற்கும் ஆய்வானது அவசியமாகின்றது.
இன்றைய அறிவியல் காலகட்டத்தில் பல்வேறு புதிய விடயங்களை தெளிவாக பெற்றுக் கொள்வதற்கு ஆய்வானது அத்தியவசியமாகின்றது.
பல்வேறு வரலாற்று ரீதியான பிரச்சினைகளுக்கு தீர்வு காணக்கூடியதொன்றாக ஆய்வானது காணப்படுகின்றது.
மேலும் ஆராய்ச்சி துறையில் செயற்பாடுகளை முன்னெடுக்கும் ஒருவருக்கு அறிவாற்றலை சிறப்பாக பெற்றுக்கொள்வதற்கு ஆய்வானது துணைபுரிகின்றதோடு ஆய்வின் போது ஏற்படும் பல்வேறு முடிவுகளின் தன்மைகளை பொறுத்து அதனை விளங்கிக் கொள்வதற்கு ஆய்வானது அவசியமாகின்றது.
ஆய்வின் இயல்புகள்
ஆய்வானது பொருத்தமான தரவுகளை கொண்டிருப்பது மாத்திரமல்லாமல் தரவின் அடிப்படையிலேயே முடிவுகள் காணப்படும். மேலும் ஆய்வினுடைய தர்க்கமானது தெளிவுடையதாக காணப்படும்.
தகவல்கள் மற்றும் தரவுகள் போதுமானதாகவும் பல்வேறு திரட்டல்களை உள்ளடக்கியதாகவும் காணப்படுவது இதன் இயல்புகளில் ஒன்றாகும். பொருத்தமான முறைமைகளை பயன்படுத்தக்கூடியதாகவும் நன்கு திட்டமிடப்பட்டதாகவும் ஆய்வானது காணப்படும்.
ஒரு ஆய்வு முறைமையானது பக்கச்சார்பற்றதாகவும் முற்சாய்வு கொள்ளாததுமான பண்புகளை கொண்டமைந்துள்ளதோடு ஆய்வொன்றின் முடிவானது சிறந்ததாக அமையும்.
ஆய்வின் அடிப்படை விதிகள்
ஆய்வானது குறிப்பிட்ட சில அடிப்படைகளை கொண்டமைந்து காணப்படுவது சிறப்பிற்குரியதாகும். அந்த வகையில் ஆய்வொன்றின் அடிப்படைகளை பின்வருமாறு நோக்கலாம்.
ஆய்வொன்றின் போது எடுத்துக் கொள்ளப்படும் பொருள் பற்றி தெளிவான தன்மை காணப்படுவதோடு அதன் முடிவுகளை சிறந்த முறைமையில் தொகுத்து கொள்தல் போன்றவை இதன் அடிப்படைகளுள் ஒன்றாகும்.
ஆய்வாளர் ஒருவர் ஆய்வுப்பொருள் பற்றிய முன்னனுபவம் மற்றும் மதிப்பீட்டினை கொண்டிருத்தல் வேண்டும். மேலும் ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்படும் எண்ணக்கரு அல்லது பிரச்சினை பற்றிய தெளிவினை கொண்டிருத்தல் அவசியமானதொன்றாகும்.
போதியளவு தகவல் திரட்டல் மற்றும் பொருத்தமான முறைமைகளை பயன்படுத்தி ஆய்வுகளை முன்னெடுத்தல் போன்றவற்றை ஆய்வு முறைமையின் அடிப்படைகளாக கருதலாம்.
ஆய்வாளரானவர் ஆய்வு தொடர்பான நன்றாக தெரிந்த விடயங்கள் எவை, தெரியாத விடயங்கள் எவை, ஊகித்த விடயங்கள் எவை, ஓரளவு தெரிந்து கொண்டவை எவை என்பது பற்றிய ஓர் தெளிவு காணப்படல் வேண்டும்.
ஆய்வின் போது பல்வேறுபட்ட முடிவுகளை எம்மால் பெற்றுக்கொள்ள முடியும் முடிவு எதுவாக இருப்பினும் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒருவராக ஆய்வாளர் திகழ வேண்டும். மேலும் ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட பொருள் பற்றி இதுவரை ஆய்வு செய்யப்படாத விடயங்களையும் தொகுத்து கொள்ளல் வேண்டும்.
மேற்குறிப்பிட்ட வகையில் ஆய்வின் அடிப்படைகள் காணப்படுவதோடு சிறந்த ஆய்வின் மூலம் பல சிறந்த முடிவுகளை பெற்றுக் கொள்ள முடியும்.
Read More: பஞ்சலோகம் என்றால் என்ன