செவ்வாய் கிழமை செய்ய கூடாதவை

செவ்வாய் கிழமை என்ன செய்யலாம்

ஒவ்வொரு வாரத்திலும் வருகின்ற செய்வாய் கிழமையானது கிரகங்களின் படி செய்வாய் பகவானுக்கு உரிய நாளாகும்.

இந்த நாளை பொதுவாக அனைவரும் எந்த நல்ல காரியங்களையும் ஆற்ற உகந்த நாளாக கருதுவதில்லை. ஆனால் இது தவறான கருத்து என்று சொல்லப்படுகின்றது.

இறைவனுக்கு மிகவும் உகந்த இந்நாளில் நல்ல காரியங்களை ஆற்றுவது வெற்றியளிக்கும் என ஆன்றோர்கள் தெரிவிக்கின்றனர்.

செவ்வாய் கிழமை செய்ய கூடாதவை

எமது உடலில் இருக்கின்ற குருதியாக செவ்வாய் பகவான் விளங்குவதனால் இத்தினத்தில் இரத்தம் சம்பந்தப்பட்ட விடயங்களை செய்யக்கூடாது என்று கூறப்படுகின்றது. அதாவது தலை முடி வெட்டுதல், நகம் வெட்டுதல், ஷேவிங் செய்தல் இவை போன்ற காரியங்களை இந்த நாளில் ஆற்றக்கூடாது என்று கூறப்படுகின்றது.

இந்த நாளில் தலை முடி வெட்டுதல் தோசமாகும். இதனால் இரத்தம் சம்பந்தப்பட்ட நோய்கள் நமக்கு ஏற்படும் எனவும் ஜோதிடம் தெரிவிக்கின்றது.

இந்த செவ்வாய் கிழமையானது செல்வத்தின் அதிபதியான லட்சுமி தேவிக்கு விசேடமான நாளாக இருப்பதனால் இந்த தினத்தில் செல்வத்தை செலவு செய்யக்கூடாது என்று கூறப்படுகின்றது. இந்த நாளில் லட்சுமி கடாட்சம் எம்மை தேடி வருவதனால் இந்த நாளில் வீண் செலவுகளை செய்ய கூடாது என கூறப்படுகின்றது.

இந்த நாளில் வீட்டில் உள்ள பொருட்களை வெளியில் தூக்கி எறிவது கூடாது இவ்வாறு செய்வதனால் லட்சுமி வீட்டில் இருந்து வெளியேறிவிடும் என்று சொல்லப்படுகின்றது.

இந்த நாளில் விவாதம் செய்தல் வீண்வார்த்தை பேசுதல் ஆகியவற்றை தவிர்த்து கொள்ளுதல் வேண்டும் இல்லாவிடில் அது தீமையில் சென்று முடியம் என்றும் கூறப்படுகின்றது.

செவ்வாய் கிழமை என்ன செய்யலாம்

ஜோதிடத்தின் படி செவ்வாய் கிரகத்தினை மங்களகாரகன் என்று அழைப்பார்கள். ஆகவே இந்த நாளானது மங்கள காரியங்களை ஆற்ற மிகவும் உகந்த நாளாக உள்ளது.

இத்தினத்தில் முருகன் துர்க்கை சக்தி ஆகிய தெய்வங்களுக்கு மிகவும் உரித்தான நாளாகும்.

இத்தினத்தில் இறை வழிபாடுகளை ஆற்ற சிறப்பான நாளாகும். இத்தினத்தில் யார் ஒருவர் மௌனவிரதம் இருக்கின்றார்களோ அவர்களுக்கு செவ்வாய் பகவானுடைய முழுமையான அருள் கிட்டும் என்பது வேதத்தில் குறிப்பிடப்படுகின்றது.

மேலும் இந்த நாளில் புதிய வீடு அமைக்க எண்ணுபவர்கள் அதற்கான திட்டத்தை மேற்கொள்ளலாம். இந்த நாளிலே ஆரம்பிக்கின்ற காரியங்கள் சிறப்பாக முடியும் என்பதனால் இந்த நாளில் நல்ல காரியங்களை ஆரம்பிப்பார்கள்.

அதாவது ஒருவர் வீடு கட்ட வேண்டுமாயின் செவ்வாய் கிரகத்தின் அனுக்கிரகம் அவர்களுக்கு இருந்தால் தான் அது சாத்தியமாகும் என்று கூறுவார்கள்.

செவ்வாய் கிழமை முருகனுக்கு உரிய விசேட நாளாகும். முருகனை வணங்கி துவங்கும் காரியங்கள் சிறப்பாக முடியும் என்பது நம்பிக்கை. கேரள மக்கள் செவ்வாய்க்கிழமையில் திருமணம் நடத்துகின்றனர்.

முருகனையும் பூமாதேவியையும் வழிபட்டு செவ்வாயில் மங்கல பொருட்கள் வாங்கினால் அது பன்மடங்காக பெருகும் என்பது நம்பிக்கையாகும். இந்த நாளில் துர்க்ககைக்கு கோமம் செய்து வழிபட்டால் செவ்வாய் தோசம் நீங்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

பொதுவாக கேட்கப்படும் கேள்விகள்

1. செவ்வாய் கிழமை கடன் வாங்கலாமா?

செவ்வாய் கிழமையில் கடன் வாங்கவே கூடாது எனவே முடிந்தவரை செவ்வாய் கிழமையில் கடன் வாங்குவதை தவிர்த்து கொள்ளுங்கள். மாற்றாக கடன் அடைப்பது சிறந்ததாகும்.

2. செவ்வாய் கிழமை தங்கம் வாங்கலாமா?

தங்கத்தை அடகு வைப்பதை செவ்வாய் கிழமைகளில் தவிர்த்து கொள்ளுங்கள். ஆனால் தங்கம் வாங்க செவ்வாய் கிழமை சிறந்த நாளாகும்.

3. செவ்வாய் கிழமை வீடு துடைக்கலாமா?

செவ்வாய் கிழமைகளில் வீட்டையும் பூஜை அறையையும் சுத்தம் செய்து கொள்ளலாம்.

You May Also Like :
பூஜை அறையில் விளக்கு ஏற்றுவது எப்படி
மாசி மாதம் சிறப்புகள்