Table of Contents
ஆதீனம் அறிமுகம்
தமிழ் நாட்டில் சைவ, வைணவ மடங்கள் பல உள்ளன. இந்த மடங்களின் கீழ் பல கோயில்கள் உள்ளன. மடங்களுக்கும், மடங்கள் சார்ந்த கோயிலுக்குமாக பல ஏக்கர் நஞ்சை, புஞ்சை நிலங்கள் உள்ளன.
சைவ சித்தாந்தத்தை வளர்க்கவும், அதை மக்களிடையே பரப்பவும் தோற்றுவிக்கப்பட்ட மடங்களே ஆதீனம். இந்த மடங்களின் தலைவர்கள் ஆதீனகர்த்தர்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.
ஆதீனங்களில் ஞானியாரடிகள், குன்றக்குடி அடிகளார், சகஜானந்தர் போன்ற உன்னதமானவர்கள் பலர் இருந்துள்ளனர்.
ஆதீனம் என்றால் என்ன
சைவ சித்தாந்தத்தை வளர்க்கவும், அதை மக்களிடையே பரப்பவும் தோற்றுவிக்கப்பட்ட மடங்களே ஆதீனம் என்று அழைக்கப்படுகின்றன.
மடம் என்றால் துறவிகள், ஆச்சாரியார்கள் வாழும் இடம் என்று பொருள். பல கிளை மடங்களை, பல கோவில்களை நிர்வகிக்கும் தலைமைப் பீடத்தை ஆதினம் என அழைப்பர். சைவ ஆதினங்களின் முதன்மையானது திருவாவடுதுறை ஆதினம் ஆகும்.
ஆதினங்கள் தோற்றுவித்ததற்கான காரணங்கள்
சைவ சித்தாந்தத்தில் ஆதினங்கள் தோற்றுவித்தற்கு நீண்ட வரலாறு உண்டு. இந்த ஆதினங்கள் தோற்றுவிப்பதற்கான பிரதான நோக்கம் சைவ சித்தாந்தக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்காக ஆகும்.
இது தவிர தமிழ் வளர்ப்பதனையும் நோக்காக ஆதினங்கள் கொண்டுள்ளன என பேராசிரியர் அருணன் கூறுகின்றார்.
திருவாவடுதுறை ஆதினம்
இது கி.பி 14 ஆம் நூற்றாண்டில் குரு நமச்சிவாய மூர்த்தி சுவாமிகளால் திருவாவடுதுறை ஆதினம் தோற்றுவிக்கப்பட்டது.
தென்னிந்தியா முழுவதிலும் சைவ சித்தாந்தத்த வகுப்புக்களை திருவாவடுதுறை ஆதினம் நடத்தி வருகின்றது.
புரட்சி மடாதிபதி என்று அழைக்கப்பட்ட சிவப்பிரகாசம் தேசிங்க சுவாமிகள் திருவாவடுதுறை ஆதீனத்தின் 23வது குரு மகா சந்நிதானமாக இருந்தார்.
இவர் தாழ்த்தப்பட்டோர் வாழ்வுப் பகுதிக்குச் சென்று அவர்களைத் தொட்டு ஆசி வழங்கியதுடன் நீட்சையும் வழங்கி பல உதவிகளையும் செய்திருக்கின்றார். 200ற்கும் மேற்பட்ட மதம் மாறியவர்களை மீண்டும் தாய் மதத்திற்கே கொண்டு வந்திருக்கின்றார்.
தனக்கு வழங்கப்பட்ட ஸ்ரீலஸ்ரீ என்ற மரியாதையை தூய தமிழ்ச் சொல்லாக மாற்றி சீர்வளர்சீர் என்று வைக்கச் சொன்னவராவார்.
மேலும் திருவாவடுதுறை ஆதினமானது தமிழ் வளர்ப்புப் பணியில் குறிப்பிடத்தக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
திருவாவடுதுறை ஆதீனத்தில் ஆசிரியராக இருந்த மீனாட்சி சுந்தரம்பிள்ளையின் சீடரான உ.வே. சாமிநாதர் தமிழ் தாத்தா என்று அழைக்கப்படுகின்றார்.
மதுரை ஆதினம்
தமிழகத்தில் மிகத் தொன்மையான சைவ சமயத் திருமடங்களில் ஒன்றாக மதுரை ஆதினம் காணப்படுகின்றது. இந்த ஆதினமானது மதுரை நகரில் அமைந்துள்ளது.
சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பு சைவசமய நாயன்மார்களில் ஒருவரான திருஞானசம்மந்தரால் தோற்றுவிக்கப்பட்டது. மதுரை ஆதினத்திற்குரிய கோவில்களாக மூன்று கோவில்கள் காணப்படுகின்றன.
இவை தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் போன்ற இடங்களில் உள்ளன. இவ் ஆதினத்திற்குரிய கோவில்களாக கஞ்சனூர் அக்கினீஸ்வரர் கோவில், திருப்புறம்பியர் சாட்சிநாதேஸ்வரர் கோவில், கச்சனம் கைச்சின்னேசுவரர் கோவில் போன்ற கோவில்கள் காணப்படுகின்றன.
ஆதின மடத்தில் தினசரி பூஜைகள் நடைபெற்று மடத்திற்கு வரும் அடியவர்கள், மக்களுக்கு அன்னதானம் வழங்குவது வழக்கமாகும்.
இத்தகைய பல சிறப்புக்களை மதுரை ஆதினம் கொண்டிருந்தாலும் அவ்வப்போது ஆதினம் சார்ந்து விமர்சனங்களும் எழுவதுண்டு என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
You May Also Like : |
---|
வேதங்கள் எத்தனை அவை யாவை |
செவ்வாய் கிழமை செய்ய கூடாதவை |