உத்தராயணம் என்றால் என்ன

uttarayanam in tamil

மிகவும் புண்ணியம் வாய்ந்த காலப்பகுதிகளில் உத்தராயணக் காலமும் ஒன்றாகும்.

உத்தராயணம் என்றால் என்ன

உத்தராயணம் என்பது கதிரவன் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி செல்லும் காலமாகும். அதாவது தை, மாசி, பங்குனி, வைகாசி, ஆனி ஆகிய ஆறு மாதங்களுமே உத்தராயண காலமாகும்.

உத்தராயண கால ஆரம்பமாக தை மாதம் காணப்படுகிறது. அதாவது தைப்பொங்கல் திருநாளாக கருதப்படுகிறது.

உத்தராயணம் மற்றும் தட்சிணாயனம் ஆகிய இரு காலங்களிலும் உத்தராயணம் மிகவும் புனிதமான காலமாக காணப்படுகிறது.

உத்தராயணத்தின் சிறப்புகள்

உத்தராயணக் காலமானது ஈரப்பதன் நிறைந்த ஒரு குளிர்காலமாக காணப்படுகிறது. அதாவது புது உயிர்கள் பிறக்கும் காலமாகவும், விதைத்த பயிர்கள் செழித்துவரும் ஒரு காலமாகவும் காணப்படுகின்றமை சிறப்பிற்குறியதாகும்.

சூரியனானது மகரம் இராசியில் பிரவேசிக்கும் போது உத்தராயண காலம் பிறக்கின்றது. இக்காலப் பகுதியிலேயே தைப்பொங்கல் தினமாக கொண்டாடப்படுகிறது.

அதாவது தைப்பொங்கல் நாளானது சூரிய பகவானின் கருணை வேண்டி பொங்கலிட்டுப் படைத்து வழிபடும் நாளாகவும் தேவர்களுக்கு இராப்பொழுது கழிந்து பகல் பொழுதில் ஆரம்பமான உத்தராயணத்தை வரவேற்று பொங்கலிடும் நாளாகவும் இது திகழ்கின்றது.

உத்தராயண காலப்பகுதியில் பிறப்பவர்கள் புண்ணியம் செய்தவர்களாக கருதப்படுவதோடு இக்காலப்பகுதியில் இறப்பவர்களையும் புண்ணியம் செய்தவர்களாகவே கருதுகின்றனர். மேலும் சுபகாரியங்களை மேற்கொள்வதற்கான சிறந்ததொரு காலமாகவும் இந்த உத்தராயண காலப்பகுதியே திகழ்கின்றது.

உத்தராயணமும் சங்கிராந்திக்கும் இடையிலான தொடர்பு

உத்தராயணமும் சங்கிராந்திக்கும் இடையிலான தொடர்பினை பார்த்தோமேயானால் சூரியன் ஒரு அரைக்கோளத்திற்கு மிக அருகில் காணப்படுகிற போது உலகின் ஒரு பகுதிக்கு அதிக நாள் இருக்கும் அதே வேளையில் மறுபுறம் குறுகிய நாள் இருக்கும் போதே சங்கிராந்தி ஏற்படுகிறது.

எனினும் ஏற்கனவே உத்தராயணத்தில் சூரியனானது பூ மத்திய ரேகைக்கு அருகிலேயே காணப்படும் என்பதினூடாக இவை இரண்டும் தொடர்புபட்டவையாகவே காணப்படுகிறது. மேலும் இரவும் பகலும் ஒரே நீளமாக காணப்படும்.

சூரியன் தன் அதிகபட்ச வரம்பை வடக்கு அல்லது தெற்கில் அடையும் போது கோடை மற்றும் குளிர்கால சங்கிராந்திகள் ஏற்படுகின்றது.

மேலும் சூரியன் பூ மத்திய ரேகையில் விழும் போது அதன் சராசரி நிலையில் வசந்த மற்றும் இலையுதிர் உத்தராயணம் ஏற்படுகிறது.

உத்தராயணமும் பித்ருக்களின் ஆசியும்

உத்தராயணத்தின் கடைசி மாதத்தில் அமாவாசை ஏற்படுகின்றது. இக்காலப்பகுதியிலேயே பித்ருக்களினால் ஆசி வழங்கப்படுகிறது. அதாவது பித்ருக்கள் என்பவர்கள் எமது மூதாதையர்களாக கருதப்படுகிறார்கள்.

இவர்கள் நினைக்கும் போதெல்லாம் பூமிக்கு வர முடியாது என்ற காரணத்தினால் அமாவாசை நாட்களில் இப்பூலோகத்திற்கு வருவதற்கு அனுமதிக்கப்படுகிறார்கள்.

பித்ரு தேவர்களை இந்த உத்தராயண நாளில் வழிபாடு செய்து சிரார்த்தம் செய்வதினூடாக பித்ரு தோஷமானது விலகும்.

மேலும் பித்ரு கடன் செய்வதன் மூலமாக பித்ருக்களின் ஆசிர்வாதமானது கிடைக்க பெறும் என்பதோடு பித்ரு கடன் செய்யாது இருந்தால் பித்ரு தேவதைகள் சபித்து விடுவார்கள் என்பது இந்துக்களின் நம்பிக்கையாக காணப்படுகிறது.

உத்தராயண அமாவாசையான நாளில் ஒவ்வொரு வீட்டு வாசலிலும் பித்ருக்கள் வந்து நின்று கொண்டிருப்பார்கள். இவர்களுக்கு எள் கலந்த தண்ணீரை வழங்க வேண்டும். இதனூடாக அவர்கள் மனம் மகிழ்ந்து ஆசிர்வதிப்பார்கள் எனலாம்.

மேலும் இவ்வாறு செய்யா விட்டால் பித்ருக்கள் வருத்தப்படுவார்கள் இதன்போது பித்ரு தோஷமாக அது ஏற்படும்.

உத்தராயண காலமானது ஒரு சிறந்த காலமாக கருதப்படுவதோடு பல தெய்வீக் பலன்களை தன்னகத்தே கொண்டமைந்ததாகவும் திகழ்கின்றது.

Read More: தசமி திதி என்றால் என்ன

சிவபெருமானால் எரிக்கப்பட்டு ரதியின் கணவர்