மக்கள் பண்முகத்தன்மையோடு ஒரு செயலை மிக அழகாக மேற்கொள்வதற்கு அழகியல் கல்வி அவசியமாகின்றது. நாம் வாழ்கின்ற சூழலில் அழகான விடயங்களை பார்த்த ரசித்தலோடு நின்றுவிடாமல் அது பற்றிய அறிவை வளர்த்து கொள்வதும் அவசியமாகும்.
Table of Contents
அழகியல் கல்வி என்றால் என்ன
அழகியல் கல்வி என்பது அனைத்து விதமான அழகியல் விடயங்களையும் உள்வாங்கி கற்பிக்கப்படும் ஒரு முறைமையாகும்.
இது அழகியல் அனுபவங்களை மேம்படுத்துகின்றது. இந்த கல்வியின் ஊடாக மாணவர்கள் மத்தியில் அழகியல் உணர்வுகள், அழகியல் அறிவெளி, கலை செயற்பாடு போன்றவற்றை ஏற்படுத்த முடியும்.
அழகியல் கல்வியின் முக்கியத்துவம்
ஒருவரிடத்தில் அழகியல் ரீதியான உணர்வுகளை ஏற்படுத்துவதற்கு அழகியல் கல்வியானது முக்கியத்துவம் பெறுகின்றது.
உலகில் அழகியல் மதிப்புடைய அனைத்தையும் நோக்க மனிதன் அழகியல் மனப்பான்மையை உருவாக்கி சமூக, கலாச்சார ரீதியாக ஒருங்கிணைத்து செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு அழகியல் கல்வி துணை புரிகின்றது.
அழகியல் கல்வியானது மன அழுத்தம் மற்றும் பதட்டம் போன்றவற்றை குறைத்து நினைவாற்றலை மேம்படுத்துவதற்கு உந்து சக்தியாக அமைந்துள்ளது.
மாணவர்கள் இலகுவாக கற்றல் விடயங்கள் பற்றி புரிந்து கொள்வதற்கு அழகியல் கல்வியானது துணை புரிகின்றது. கடினமான விடயங்களையும் இலகுவானதாக புரிந்து கொள்வதற்கு அழகியல் கல்வியினாலேயே முடியும்.
அழகியல் கல்வியும் ஆசிரியரும்
அழகியல் கல்வியை கற்பிற்கும் ஆசிரியரானவர்கள் அடிப்படை பொதுவியற் கல்வி ஆசிரியர்களாக இருத்தல் வேண்டும்.
மேலும் ஏனைய துறை சார்ந்த ஆசிரியர்களும் தங்களுடைய கற்பித்தல் முறையில் அழகியல் கல்வியை ஒரு முக்கிய அங்கமாக வைத்தல் வேண்டும்.
லெனின் என்ற அறிஞரின் கூற்றுப்படி கற்பித்தல் செயற்பாட்டில் அழகியல் அம்சங்களை பிணைத்து கற்பிக்கும் பொழுது மாணவர்கள் கற்றலை ஒரு சுமையாக கருதாமல் இலகுவான முறையில் கற்றுக் கொள்வதற்கு வழியேற்படுகின்றது.
அந்த வகையில் ஒவ்வொரு ஆசிரியரும் அழகியல் விடயங்கள் பற்றிய தெளிவினை அறிந்திருப்பதோடும் இவற்றின் ஊடாக கற்பித்தல் நடவடிக்கையில் ஈடுபடும் போதும் இலகுவாக கற்றலில் மாணவர்கள் ஈடுபடுவர்.
அழகியல் கல்வியின் பயன்கள்
அழகியல் கல்வியானது அழகியல் உணர்வின் மூலம் தனிமனித இருப்பினை நிலை நிறுத்துகின்றது. இதனூடாக ஒரு தனி மனிதனானவன் சிறந்த முறையில் அழகியல் உணர்வினை கொண்டிருப்பான்.
அழகியல் கல்வியின் மூலமாக மனிதர்களுக்கிடையேயான தொடர்புகள் அதிகரிக்கும் அதாவது அழகியல் உணர்வுகளானவை சிறந்த முறையில் தொடர்புகளை ஏற்படுத்த துணை புரிகின்றது.
பாடங்களை மகிழ்வுடன் செவிமடுப்பதற்கு அழகியற் கல்வியானது துணைபுரிகின்றது. அதாவது சாதாரணமாக கற்றலின் போது ஏற்படுகின்ற நிலை மாறி இலகுவாக ஒரு பாடத்தினை புரிந்து கொள்வதற்கு வழியமைத்து தருகின்றது.
அக உணர்வினையும் மனவெழுச்சிகளையும் வெளிப்படுத்தும் ஆற்றல் அதிகரிக்கும். அழகியற் கல்வியினூடாக எமது மனதிலுள்ள உணர்வுகளை வெளிப்படுத்துவதோடு மன அழுத்தம் போன்றவற்றை குறைப்பதற்கு துணை நிற்கின்றது. அழகியல் கல்வியின் மூலமாக புதிய சிந்தனைகளை உருவாக்கும் ஆற்றல் அதிகரித்துக் காணப்படும்.
மேற்குறிப்பிட்ட வகையில் அழகியல் கல்வியானது ஒரு மனிதனுடைய வாழ்வில் பாரியளவு பங்காற்றுகின்றது. மேலும் இக்கல்வி முறையானது பல்வேறு புதுமைகளை கொண்டு செயற்படுகின்றது.
எனவே தான் ஆரம்ப முன்பள்ளி கல்வியிலும் கூட அழகியல் கல்வியினை கற்பிக்கின்றனர். இதனூடாக அறிவினையும் அழகியலையும் இணைத்து கற்க கூடிய ஒரு சூழலானது உருவாகின்றது.
மேலும் அழகியல் கல்வியினூடாக சிறந்த சிந்தனை ஆற்றல் ஏற்படுவதோடு புதிய சிந்தனைகளை ஏற்படுத்தவும் வழியமைத்து தருகின்றது.
Read more: ஏட்டுக்கல்வி என்றால் என்ன