அமாவாசை எனப்படுகின்ற திதியானது இந்துக்களின் வாழ்வியலில் மிகவும் முக்கியமான ஒரு திதியாகும். இதனை விஞ்ஞான ரீதியாக பார்க்கின்ற பொழுது சூரியன் மற்றும் சந்திரன் ஆகிய இரண்டும் ஒரே நேர்கோட்டில் வருவதனை இது குறிக்கின்றது.
இந்த தினத்தில் பொதுவாகவே பல புனிதமான ஆன்மீக காரியங்களை இந்துக்கள் ஆற்றுவது வழமை அவ்வாறே சில தவறான செயல்களை ஆற்ற கூடாது எனவும் கூறப்படுகின்றது அவை தொடர்பாக இந்த பதிவில் காண்போம்.
அமாவாசை அன்று செய்ய கூடாதவை
இந்த அமாவாசை காலங்களில் மனித உடலில் பல மின்னியல் மாற்றங்கள் அதிகம் இடம் பெறுவதனால் உட்கொள்கின்ற மருந்து அதிக வீரியத்துடன் செயலாற்றுவதனால் இந்த காலங்களில் மருந்துகளை உள்ளெடுக்க கூடாது என்று கூறுவார்கள்.
மற்றும் உடல்நிலை மாற்றங்களால் மனநோயாளிகள் இந்த காலகட்டத்தில் நோய் நிலை அதிகரிப்பனை அவதானிக்க கூடியதாக இருக்கும்.
இந்த காலப்பகுதியில் உடலில் உள்ள காந்த அலை சக்திகள் அதிகளவாக தொழிற்படுவதன் காரணமாக உடலிலில் அதிகளவான உணவு பொருட்கள் இருந்தால் அந்த சக்தி உடல் முழுவதும் பரவாது என்பதனால் இந்த காலங்களில் அதிகம் உண்பதை தவிர்த்து விரதங்களை அனுட்டித்து ஆலயங்களுக்கு சென்று வருதல் சிறந்ததாக அமையும்.
அமாவாசை நாளில் அதிகநேரம் உறங்குவது கூடாது என்று கூறப்படுகின்றது. இது உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் சில துர்விளைவுகளை எமக்கு ஏற்படுத்தும் என்பதால் பகல் பொழுதுகளில் அதிகம் உறங்குவதை நாம் தவிர்க்க வேண்டும்.
வாசலில் கோலம் போடுவதனையும் தவிர்த்து கொள்ள வேண்டும். ஏனெனில் இந்த நாளில் முன்னோரின் ஆன்மாக்கள் எமது வீட்டை நோக்கி வருவதனால் கோலம் போடுவது கூடாது.
அமாவாசை தினத்தில் யாரிடமும் கடன் வாங்கி விட கூடாது எனவும் சொல்லப்படுகின்றது.
அமாவாசை தினத்தன்று குளிக்கும் போது எண்ணை தேய்த்து குளிப்பதை தவிர்த்து கொள்ள வேண்டும் என கூறப்படுகின்றது. அவ்வாறே அத்தினத்தில் யாரும் முடி வெட்டுதல், சவரம் செய்தல் போன்ற காரியங்களை செய்ய கூடாது எனவும் குறிப்பிடப்படுகின்றது.
விஞ்ஞான ரீதியில் இந்த நாளில் எந்த மங்கள காரியங்கள் சுப நிகழ்வுகளை ஒரு பொழுதும் செய்வதில்லை.
அவ்வாறே இத்தினத்தில் அசைவம் சாப்பிடுவதனை தவிர்த்து கொள்வது நல்லது.
இந்த நாள் முழுவதும் வெப்பம் உயர்வாக இருப்பதனால் வெளியில் பயணம் செய்வது கூடாது. வீட்டில் தங்கியருந்து தமது முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை ஆற்றுதல் சிறந்த பலனை எமக்கு வழங்கும்.
இந்த நாளில் புதிய வாகனங்களை வாங்குவது கூடாது. புதிய தொழில் புதிய விடயங்களை ஆரம்பித்தல் போன்ற செயல்களை முடிந்த அளவிற்கு தவிர்த்து கொள்ள வேண்டும் என இந்து மத விழுமியங்கள் தெரிவிக்கின்றன.
You May Also Like : |
---|
இறந்தவர்களை வழிபடும் முறை |
ராகு கேது தோஷம் விளக்கம் |