மிதுனம் ராசி குணங்கள்

mithuna rasi gunangal in tamil

மிதுன ராசியில் பிறந்தவர்களுடைய தனித்துவமான குணஇயல்புகளை இக்கட்டுரையில் காண்போம். இந்த ராசியில் மிருகசீரிடம், திருவாதிரை, புனர்பூசம் ஆகிய நட்சத்திரங்கள் காணப்படும். மிதுன ராசியை ஆதிக்கம் செய்யும் கிரகம் புதன் ஆகும்.

இவர்கள் எப்போதும் ஒரே தடவையில் இரு விடயங்களை சாதித்துவிட வேண்டும் என்ற எண்ணம் உடையவர்கள். இவர்கள் எப்போதும் எதையாவது சிந்தித்து கொண்டே இருப்பார்கள்.

சூழ்நிலைக்கு ஏற்ற போல தமது குணத்தை மாற்றி கொள்ள கூடியவர்களாக இருப்பார்கள். எளிதாக மாறி விடும் இயல்புகள் உடையவர்களாவர். இவர்களோடு நெருங்கி பழகினால் மாத்திரமே இவர்களை புரிந்து கொள்ள முடியும்.

மற்றவர்களுக்கு அறிவுரை சொல்வதை இவர்கள் அதிகம் விரும்புவார்கள். எந்த பிரச்சனைகளையும் துல்லியமாக எடைபோட்டு அதற்கு நீதி வழங்க கூடியவர்களாக இருப்பார்கள்.

மேலும் இவர்கள் சிறிதளவும் சோம்பேறித்தனமும் இல்லாமல் சுறுசுறுப்பாக இயங்குவார்கள். இவர்கள் தங்களது சொந்த முயற்சியில் முன்னேறுவார்கள்.

உதவி என்று யாரிடமும் செல்லமாட்டார்கள் ஆனால் பிறர் உதவி என்று வரும் போது தயங்காமல் செய்யக்கூடியவர்கள்.

இவர்கள் ஏதாவது ஒரு காரியத்தை எடுத்து கொண்டால் மிகவும் அக்கறையோடு பொறுப்பாக அதனை செய்து முடிக்கும் இயல்பு உடையவர்கள். அத்துடன் அபாரமான ஞாபக சக்தி இவர்களுக்கு உண்டு.

எந்த சந்தர்பத்திலும் கவனத்துடனும் அவதானத்துடனும் செயற்படக் கூடியவர்கள் வாழ்வில் தாம் நினைத்த இலக்குகளை அடைந்து கொள்வார்கள் பார்ப்பதற்கு அப்பாவிகள் போல காட்சியளித்தாலும் தமது காரியங்களை சாதிப்பதில் வல்லவர்களாக இவர்கள் காணப்படுவார்கள்.

அவ்வாறே தனக்கு தோன்றும் விடயங்களை வெளிப்படையாக பேசக்கூடியவர்கள் தமக்கு பிடிக்காத விடயங்களில் மௌனமாக சென்று விடுவார்கள். பிறரை கேலியாகவும் கிண்டலாகவும் பேசும் இவர்கள் பேச்சாற்றல் நிறைந்தவர்களாக காணப்படுவர்.

எப்போதும் தன்னை மற்றவர்கள் புகழவேண்டும் என்பதில் அதிகம் விருப்பம் உடையவர்களாக இருப்பர். பெரும்பாலும் ஆடம்பர வாழ்க்கையினை வாழ விரும்புவார்கள்.

பெற்றோர்களை மதிப்பதுடனும் நண்பர்களை நேசிக்க கூடியவர்களாக இருப்பர். எதையும் அவசரமாக முடிவெடுத்து பின் சிக்கல்களில் மாட்டி கொள்வார்கள். எப்போதும் கடினமான வேலைகளை விட புத்திசாலித்தனமான வேலைகளையே தேர்ந்தெடுப்பார்கள்.

அடுத்தவர்களுடைய கருத்துக்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதனால் பல மனக்குழப்பங்களுக்கு ஆளாவார்கள். இவர்கள் நெருங்கியவர்களுடன் கூட உதவி கேட்க தயங்குவார்கள் பிறரோடு இலகுவாக பழகி நட்பு வைக்க கூடிய இயல்புடையவர்களாக இருப்பார்கள்.

தங்களுடைய சிறப்பான பேச்சாற்றலால் மற்றவர்களின் நம்பிக்கைக்கு உரியவர்களாக விளங்குவார்கள். பொதுவாகவே கலையில் அதிக ஆர்வம் உடையவர்கள். தான, தர்மம் செய்வதில் வல்லவர்களாக இருப்பார்கள். எப்போதும் தமது மனதுக்கு திருப்தி தரும் விடயங்களை செய்யவே விரும்புவார்கள்.

தனிப்பட்ட முடிவுகளை எடுக்கும் போது சுயமாகவே முடிவுகளை எடுப்பார்கள் பதவிகளுக்கு பெரிதும் ஆசைப்படாத எளிமை விரும்பிகளாக இருப்பார்கள்.

You May Also Like :
ரிஷப ராசி குணங்கள்
மகர ராசி குணங்கள்