மதகு என்றால் என்ன

mathagu endral enna in tamil

மதகானது மழைக்காலங்களில் நீர்நிலைகளில் உள்ள நீரை தேவையின்றி வெளியேறாதவாறு மூடுவதற்கு உபயோகப்படுகின்றன.

மதகு என்றால் என்ன

மதகு என்பது யாதெனில் குளம், ஏரி அல்லது கண்மாய்களில் உள்ள நீரை விளைநிலங்களில் பாசனத்திற்கு திருப்பி விடுவதற்காக நிறுவப்பட்ட கதவுகளாகும்.

இந்த மதகினை மடை எனவும் அழைப்பர். இது மரம் அல்லது இரும்பினால் அமைக்கப்பட்டிருக்கும். இதனை கைகளால் திறக்க இயலும். மதகுகளை திறப்பதினுடாக வயல்களானவை நீரப்பாசன வசதிகளை பெறுகின்றன.

குமிழித் தூம்பு மதகு

குமிழித் தூம்பு மதகு என்பது தமிழ்நாட்டு ஏரிகளில் தேக்கி வைக்கும் நீரை பாசனத்திற்கு திறக்க அறிவியல் பூர்வமாக அமைக்கப்பட்ட ஓர் அமைப்பாகும்.

இந்த குமிழித் தூம்பு மதகானது தேவையானளவு நீரை மட்டும் வெளியேற்ற உதவுகின்றது. அதாவது ஏரியின் தரைமட்டதிற்கு கீழே கல்பெட்டியில் உள்ள துளை வழியே தண்ணீர் செல்லும் வழியில் குழாய் அமைப்பானது ஏற்படுத்தப்பட்டிருக்கும்.

குமிழித் தூம்பு மதகின் ஊடாக ஏரிக்குள் வண்டல் மண்படிவது குறையும். மேலும் சில ஏரிகளில் இந்த குமிழி தூம்பு மதகுள்ள இடத்தை அடையாளம் காட்டும் விதமாக கல் மண்டபங்களை அமைத்திருப்பார்கள்.

மதகின் முக்கியத்துவம்

மதகானது நீரின் ஓட்டத்தை அளவிடுவதற்கும் நீர்நிலைகலில் கூடுதல் ஓட்டத்தை வெளியேற்றுவற்கும் பயன்படுத்தப்படுகின்றது.

மதகிற்கான செலவானது குறைவாக காணப்படுகிறது. அதாவது இது குறைந்தளவிலான கட்டுமான செலவினை கொண்டமைந்து காணப்படுகிறது. மேலும் வடிவமைப்பில் எளிமையானதாகவும் காணப்படுகிறது.

மதகளினுடாக நீர்ப்பாசன வசதியினை பெற்றுக் கொள்ள முடியும். அதாவது ஆற்றின் நீர்மட்டத்தை விட கால்வாயின் படுகை மட்டம் அதிகமாக காணப்படும் சந்தர்ப்பங்களில் நீர்மட்டத்தை உயர்த்துவதற்காக ஆற்றின் குறுக்கே இந்த மதகானது கட்டப்படுகிறது.

சோழர்காலத்தின் குமிழித் தூம்பு மதகின் பயன்பாடு

சோழர்காலத்தில் குமிழித் தூம்பானது பயன்படுத்தப்பட்டது. அதாவது இதனூடாக பயன்பாட்டிற்கு தேவையான நீரை வெளியேற்ற குமிழித் தூம்பு மதகானது பயன்படுத்தப்பட்டது.

அதாவது சோழர் காலத்தில் நீர் நிரம்பி நிற்கும் ஏரிக்குள் நீந்தி கழிமுகத்தை அடைந்து குமிழித் தூம்பை தூக்கி விடுவார்கள்.

குமிழித் தூம்பில் இரண்டு துளைகள் காணப்படும். மேலே உள்ள நீரோடி துளைகலிருந்தே நீரானது வெளியேறும் கீழே இருக்கும் சேறோடித் துளைகலிருந்து நீரானது சுழன்று சேற்றுடன் வெளியேறும் இவ்வாறகவே சோழர்கால குமிழித் தூம்பு மதகானது பயன்படுத்தப்பட்டது.

செம்பரம்பாக்கம் ஏரியும் மதகுகளும்

செம்பரம்பாக்கம் ஏரியானது சென்னையில் இருந்து சுமார் 30 கிலோ மீற்றர் தொலைவில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஏரியாகும். இந்த ஏரியினை குடிநீர் தேவைகளுக்கு பயன்படுத்துகின்றனர்.

இந்த ஏரியின் கரை 9 கிலோ மீற்றர் நீளம் உடையதாகும். இந்த ஏரியில் 19 சிறிய மதகுகளும், 5 பெரிய மதகுகளும், 2 கலங்கல் (ஆயிரம் அடி நீலத்தில் தானாக உபநீர் வெளியேறும் பகுதி) போன்றவற்றை கொண்டதாகும்.

இந்த எரியானது பதினாறு கண்மதகினை கொண்டமைந்ததாகவும் ஐந்து கண் முக்கிய மதகினை கொண்டமைந்ததாகவும் காணப்படுகிறது. மதகானது பல்வேறு வகையில் நீரை கட்டுப்படுத்த துணை செய்கிறது.

காந்திசாகர ஏரியும் மதகும்

இது இந்தியாவில் அமைந்துள்ள ஏரியாகும். ஆசியாவிலே இரண்டவதாக கட்டப்பட்ட பெரிய ஏரியாகும். இந்த ஏரியானது 1128ம் ஆண்டு கட்டப்பட்ட மதகுகள் கொண்ட அணையினால் உருவாக்கப்பட்டது.

இந்த ஏரியில் இரு மதகுகள் காணப்படுகின்றன. அதாவது வடக்கில் சித்தா மதகும் தெற்கில் பசவா மதகும் உள்ளன.

இங்கு மதகுகள் சிதைந்திருந்தாலும் நீரின் பெருவிசையால் அவற்றினூடாக நீர் செல்லும் போது சுற்றியுள்ள கட்டகம் சிதையாமல் உள்ளமை இதன் கட்டமைப்பின் நிலைப்புறத்தை வெளிப்படுத்துகிறது.

மதகுகளானவை நீரின் அதிகப்படியான ஓட்டத்தை கட்டுப்படுத்தி விளைச்சல்களை பெருக்குவதற்கு உதவுகின்றன.

Read More: சுற்றுச்சூழல் கூறுகள் என்ன

மழைநீர் சேகரிப்பின் பயன்கள்