வாயு தொல்லை நிரந்தரமாக நீங்க

Gastric Problem Solution In Tamil

பலருக்கும் வாயு தொல்லை நிரந்தரமாக நீங்க என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வி மனதினுள் இருக்கலாம். காரணம் பலரும் வாயு தொல்லை பிரச்சனையால் அவதிப்படுகிறார்கள்.

உடல் எடை அதிகம் உள்ளவர்கள், வயதானவர்கள் மற்றும் ஒரே இடத்தில் இருந்து தொடர்ந்து வேலை செய்பவர்கள் போன்றவர்கள் தான் இந்த வாயு தொல்லையால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.

வாயு தொல்லையின் அறிகுறிகள்

  • ஆசன வாயில் இருந்து வாயு அடிக்கடி வெளியேறுதல்
  • சாப்பிட்ட உணவு சமிபாடைவதில் பிரச்சனை
  • அடிக்கடி ஏப்பம் வருதல்
  • நெஞ்சில் எரிச்சல் உருவாக்குதல்
  • வயிற்றில் அடிக்கடி சத்தம் கேட்டல்

வாயு தொல்லை நிரந்தரமாக நீங்க டிப்ஸ்

மலசிக்கல் பிரச்சனை இருந்தால் அதை சரி செய்து கொள்ளுங்கள். மலசிக்கல் பிரச்சனை இருந்தால் வாயு பிரச்சனைக்கு வழி வகுக்கும்.

குடலில் புழுக்கள் இருந்தாலும் வாயு தொல்லைக்கு காரணமாக அமையும்.

மாத்திரைகள் குறிப்பாக பேதி மாத்திரை ஆஸ்துமா மாத்திரை போன்ற மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொண்டாலும் வாயு தொல்லை அதிகரிக்கும்.

சாப்பிடும் பொழுது உணவுகளை நன்றாக மென்று சாப்பிட வேண்டும். நன்றாக மென்று சாப்பிடும் பொழுது உணவு இலகுவாக சாமிப்படைகின்றது. உணவு சமிபாட்டு பிரச்சனையும் வாயு தொல்லைக்கு முக்கிய காரணம்.

இரவு உணவை சாப்பிட்ட உடன் தூங்க செல்வதை தவிர்க்க வேண்டும். இது சமிபாட்டு பிரச்சனையை உருவாக்கும். உறங்க செல்வதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்னதாகவே இரவு உணவை சாப்பிடுவது சிறந்தது.

உடலில் தண்ணீரின் அளவு குறையும் பொழுது பல பிரச்சனைகள் வருகின்றன. அதில் ஒன்று தான் வாயு தொல்லை. தினமும் சரியான அளவு தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள்.

வாயு பிரச்சனையை தரும் உணவுகளை அன்றாட உணவுகளில் குறைத்துக் கொள்வது சிறந்தது. வாயு தொல்லையை அதிகரிக்கும் சில உணவுகள்.

  • பருப்பு
  • வாழைக்காய்
  • உருளை கிழங்கு
  • மரவள்ளி கிழங்கு
  • சக்கரவள்ளி கிழங்கு
  • மசாலா உணவுகள்
  • செயற்கை பானங்கள்
  • பால்
  • முளைகட்டிய தானியங்கள்
  • கொழுப்பு நிறைந்த உணவுகள்.

முக்கியமாக அதிக காபோவைதரேட் உள்ள உணவுகள் வாயு தொல்லைக்கு காரணமாக அமைகின்றது.

மதுப்பழக்கம் மற்றும் புகைப்பழக்கம் போன்றவையும் வாயு தொல்லையை அதிகரிக்கும். இந்த பழக்கங்கள் உள்ளவர்கள் இதை விடுவது உடலில் பல ஆரோக்கியமான மாற்றங்களை ஏற்படுத்தும்.

உடல் பயிற்சி உடல் ஆரோக்கியத்திற்கு மிக மிக அவசியமான ஒன்று. தினமும் உடல் பயிற்சி செய்வது வாயு தொல்லையை குறைக்க உதவும்.

தினமும் சரியான நேரத்திற்கு மூன்று வேளை உணவையும் சாப்பிடுங்கள். சரியான நேரத்திற்கு உணவை எடுத்துக் கொள்ளும் போது சமிபாட்டு பிரச்சனைகளை தவிர்க்கலாம்.

உணவுக் கழிவுகளை வெளியேற்றும் எண்ணம் வந்தால் உடனே வெளியேற்றி விடுங்கள். அல்லது வாயு தொல்லை அதிகரிக்கும்.

வாயு தொல்லை நீங்க உணவுகள்

இஞ்சி

இஞ்சி சாற்றை காலையில் தேனீருடன் கலந்து குடிக்கலாம். அல்லது இஞ்சி சாற்றை எலுமிச்சை சாறு மற்றும் தண்ணீருடன் கலந்து குடிக்கலாம்.

பூண்டு

பூண்டில் பல மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. உணவில் அதிகம் பூண்டினை சேர்த்துக் கொள்ளுங்கள். வாயு பிரச்சனைக்கு சிறந்த தீர்வு பூண்டு.

திரிபலா பொடி

மருந்து கடைகளில் கிடைக்கும் திரிபலா பொடியை கொதிநீரில் ஊற வைத்து ஆறிய பின்னர் இரவு உறங்க செல்ல முன் தினமும் குடித்து வந்தால் வாயு தொல்லையில் இருந்து நிரந்த தீர்வை பெறலாம்.

மேலும் பதிவுகளை தொடர்ந்து படியுங்கள்..

வாய் துர்நாற்றம் நீங்க டிப்ஸ்