சர்க்கரை நோய் குணமாக டிப்ஸ்

சர்க்கரை நோய் பற்றிய தகவல்கள்

தற்போதைய காலத்தில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகின்றது. இதில் சர்க்கரை நோய் குணமாக டிப்ஸ் சிலவற்றை பார்க்கலாம்.

சர்க்கரை என்பது என்பது இரத்தத்தில் சர்க்கரையின் அளவு இயல்பை விட அதிகளவாக இருக்கிறது என்று அர்த்தம்.

உலகில் அதிக சர்க்கரை நோயாளிகளை கொண்ட நாடுகள் பட்டியலில் இந்தியா சீனாவுக்கு அடுத்த படியாக இரண்டாவது இடத்தில் இருக்கின்றது.

Table of Contents

சர்க்கரை நோய் வர காரணம்

நமது வாழ்க்கை முறை என்பது இன்றய காலப்பகுதியில் வெகுவாக மாறி விட்டது. உடல் உழைப்புஇல்லாமல் உடல் பருமனாக இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது.

உடல் பருமன் சர்க்கரை நோய்க்கான முக்கியமான காரணியாக இருக்கின்றது.

சர்க்கரை நோய் என்பது பரம்பரையாகவும் ஏற்படக்கூடியது.

அதே போல உணவு பழக்கம் என்பதும் ஆரோக்கியமான உணவுகளை விடுத்தது சுவையான உணவுகளை நோக்கிய உணவு முறையாக மாறி விட்டது.

தவறான உணவு முறையும் சர்க்கரை நோய் வருவதற்கான ஒரு காரணியாக அமைகின்றது.

சரியான தூக்கம் இன்மை மற்றும் அதிக மனஅழுத்தம் போன்ற காரணிகளும் சர்க்கரை நோய் வருவதற்கு காரணமாக அமைகின்றன.

சர்க்கரை நோய் அறிகுறிகள்

நம்மில் பலருக்கு சர்க்கரை நோய் இருக்குமோ என்றோ அல்லது அவர்களுக்கு இருக்கும் அறிகுறிகளில் ஒன்று சர்க்கரை நோயாக இருக்குமோ என்றோ பலவித சந்தேகங்கள் இருக்கும்.

அதிக தாகம், அதிக பசி மற்றும் அதிகமாக சிறுநீர் கழித்தல்.

குறிப்பாக இரவில் அதிகமாக சிறுநீர் கழித்தல். இரவில் இரண்டு முறை அல்லது அதற்கு மேலாக சிறுநீர் கழித்தல்.

சர்க்கரை நோயாளிகளுக்கு அதிகமாக சிறுநீர் வெளியேறுவதற்கு என்ன காரணம் என்றால் உடலில் இரத்தத்தில் அதிகமாக சர்க்கரை இருக்கும். இதனால் உடலில் இரத்தத்தில் அதிகமாக உள்ள சர்க்கரையை சிறுநீர் மூலம் வெளியேற்றும்.

திடீரென உடல் எடை சடுதியாக குறைதல்.

கால் பாகங்களில் குத்தல், எரிச்சல் போன்றவை இருத்தல்.

உடல் சோர்வு, உடல் அசதி மற்றும் கண்பார்வை மங்குதல் போன்ற காரணிகளும் சர்க்கரை நோய்க்கான ஒரு காரணியாக இருக்கின்றது.

சர்க்கரை நோயின் இன்னுமொரு அறிகுறியாக அதிகமான இனிப்பு உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற உணர்வு காணப்படும்.

சர்க்கரை நோயாளிகள் சாப்பிட வேண்டிய உணவுகள்

நெல்லிக்காய்

நெல்லிக்காயில் வைட்டமின் சி மற்றும் நார்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. ஆகவே சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் ஆரோக்கியத்தை தரும் பழங்களில் ஒன்றாகும்.

ஆரஞ்சு

எந்த நோயாளிகளும் எந்தவித பயமும் இல்லாமல் சாப்பிடக்கூடிய பழம்தான் இந்த ஆரஞ்சு.

இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து சர்க்கரையின் அளவை குறைக்க கூடியது.

நாவல் பழம்

நாவல் பழத்தில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புசத்து தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் என பலசத்துக்கள் நிறைந்துள்ளது.

தினமும் மூன்று நாவல் பழங்கள் சாப்பிட்டு வந்தால் சர்க்கரையின் அளவை வெகுவாக குறைக்க முடியும்.

நாவல் பழத்தின் நன்மைகள்

கொய்யாப்பழம்

அதிக சத்துக்கள் நிறைந்த பலன்களில் முதன்மையானது கொய்யாப்பழம். சர்க்கரை நோய் மற்றும் மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்களுக்கு கொய்யாப்பழம் சிறந்த பழமாகும்.

தோல்வியாதி மற்றும் ஆஸ்துமா நோய் உள்ளவர்கள் கொய்யாப்பழத்தை தவிர்ப்பது சிறந்தது.

திராட்சை பழம்

திராட்சை பழம் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துவதோடு இன்சுலின் சுரப்பையும் அதிகரிக்கும்.

பப்பாளி பழம்

பப்பாளி பழத்தில் பல ஆரோக்கியமான ஊட்ட சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. இதில் சர்க்கரையின் அளவு மிக குறைவு.

சர்க்கரை நோயாளிகளுக்கு பப்பாளி சிறந்த பழம். உணவு சமிபாட்டுக்கும் பப்பாளி சிறந்த பழம்.

மாதுளம் பழம்

மாதுளை இரத்த ஓட்டத்தை சீராக்கி இரத்தத்தில் ஆக்ஸிஜின் அளவுகளை அதிகரிப்பதால் சர்க்கரை நோயை கட்டுக்குள் வரவழைக்க உதவுகிறது.

ஆப்பிள்

ஆப்பிள் கொலஸ்ட்ரோல், செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு போன்ற பிரச்சனை உள்ளவர்களுக்கு சிறந்த பழம்.

இது இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த உதவுகின்றது.

அன்னாசி

நம் உடலில் உணவு சமிபாட்டை அதிகரித்தாலே சர்க்கரையின் அளவை கட்டுக்குள் கொண்டுவரலாம்.

ஜீரண சக்தியை அதிகரிப்பதில் முக்கிய பங்கு அன்னாசி வகிக்கிறது. சர்க்கரை நோயாளிகள் பயன்படுத்த வேண்டிய பழங்களில் அன்னாசியும் ஒன்று.

தர்ப்பூசணி

தர்ப்பூசணியில் உள்ள சத்துக்கள் உடலை ஆரோக்கியமாகவும் சுறு சுறுப்பாகவும் வைத்துக்கொள்ள உதவுகின்றது.

இது இரத்த ஓட்டம் சம்பந்தமான உடல் உறுப்புகளை ஊக்குவிக்கிறது. சர்க்கரை நோயாளிகளுக்கும் நன்மை அளிக்க வல்லது.

சாப்பிட வேண்டிய மற்றய உணவுகள்

கீரை உணவுகள், தக்காளி, வாழைப்பூ, பாகற்காய், வெங்காயம், கத்தரிக்காய், பூசணிக்காய், அவரைக்காய் மற்றும் வெள்ளை முள்ளங்கி.

சர்க்கரை நோயாளிகள் தவிர்க்க வேண்டிய உணவுகள்

மைதா

கோதுமையின் கழிவு தான் மைதா இதில் உடல் ஆரோக்கியத்திற்கான எந்த சத்துக்களும் இல்லை.

மைதாவை சர்க்கரை நோயாளிகள் அதிகமாக பயன்படுத்தினால் அவர்களின் உள் உறுப்புகள் அதிகமாக பாதிப்படைய வாய்ப்புக்கள் உண்டு.

எண்ணெயில் பொரித்த உணவுகள்

எண்ணெயில் பொரித்த உணவுகளை சர்க்கரை நோயாளிகள் முடிந்தவரை தவிர்ப்பது சிறந்தது.

ஐஸ் கிரீம் மற்றும் சொக்லட்

சிறுவர்கள் அதிகம் விரும்பி சாப்பிடும் அதிக சர்க்கரை நிறைந்துள்ள ஐஸ் கிரீம் மற்றும் சொக்லட்டை சர்க்கரை நோய் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டும்.

கோப்பி மற்றும் டீ

கோப்பி மற்றும் டீ உடலில் குளுகோஸின் அளவை வேகமாக அதிகரிக்க கூடியவை. சர்க்கரை நோய் உள்ளவர்கள் இதை குறைப்பது சிறந்தது.

கிழங்கு வகைகள்

கிழங்கு வகைகளில் சேப்பங்கிழங்கு, உருளைக்கிழங்கு மற்றும் சர்க்கரை வள்ளி கிழங்கு போன்ற கிழங்குகளை சர்க்கரை நோய் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டும்.

தவிர்க்க வேண்டிய வேறு உணவுகள்

கரும்புச்சாறு, சர்க்கரை, பன்னீர் (பால் கட்டி), மாம்பழம், சீத்தாப்பழம், பலாப்பழம், வாழைப்பழம், குளுக்கோஸ், உலர்ந்த திராட்சை

அளவோடு சாப்பிட வேண்டிய உணவுகள்

சோளம், அரிசி உணவுகள், ஓட்ஸ், கேழ்வரகு, கோதுமை, வேர்க்கடலை, பாதம் பருப்பு, முந்திரி பருப்பு.

பொதுவாக கேட்கப்படும் கேள்விகள்

சர்க்கரை நோயாளிகள் செவ்வாழை சாப்பிடலாமா?

சர்க்கரை நோய் உள்ளவர்கள் சாதாரணமாக வாழைப்பழத்தினை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

ஆனால் செவ்வாழை பழத்தினை சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாம். செவ்வாழை பழத்தில் ஏராளமான ஊட்ட சத்துக்கள் நிறைந்திருக்கின்றன.

விலை சற்று அதிகம் என்றாலும் இதில் ஏராளமான மருத்துவ குணங்கள் அடங்கியிருக்கின்றன.

சர்க்கரை நோயாளிகள் இளநீர் குடிக்கலாமா?

இளநீர் என்பது இயற்கை நமக்கு கொடுத்த மூலிகை என்று கூறலாம். இதில் ஏராளமான சத்துக்கள் நிறைந்திருக்கின்றன.

ஆனால் சர்க்கரை நோய் உள்ளவர்கள் இளநீர் குடிப்பதை குறைக்க வேண்டும்.

இளநீர் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்க கூடியது.

சர்க்கரை நோயாளிகள் தேன் சாப்பிடலாமா?

பல மருத்துவ குணங்கள் நிறைந்த தேனினை சர்க்கரை நோயாளிகள் எந்த வித சந்தேகமும் இல்லாமல் சாப்பிடலாம்.

சர்க்கரை நோயாளிகளுக்கு மிக பெரும் பிரச்சனையாக இருப்பது இன்சுலின் சீராக சுரக்கததால் தான் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கின்றது.

தேன் சர்க்கரை நோயாளிகளுக்கு இன்சுலின் சீராக சுரப்பதற்கு உதவுகின்றது.

சர்க்கரை நோயாளிகள் கருப்பட்டி சாப்பிடலாமா?

சர்க்கரை நோயாளிகள் சர்க்கரைக்கு பதிலாக கருப்பட்டி பயன்படுத்தினால் உடலில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்கலாம்.

கருப்பட்டியை சர்க்கரை நோயாளிகள் எந்த வித சந்தேகமும் இல்லாமல் சாப்பிடலாம்.

இதில் உள்ள “சர்க்கரை நோய் குணமாக டிப்ஸ்” உங்களுக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும் என்று நம்புகின்றோம்.